உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 40 லட்சம் பனை விதைகள் நடப்பட்டதா? விபரம் இல்லை என அரசு கைவிரிப்பு

40 லட்சம் பனை விதைகள் நடப்பட்டதா? விபரம் இல்லை என அரசு கைவிரிப்பு

சென்னை : பசுமை காடுகள் திட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் நடவு செய்யப்பட்ட பனை விதைகள் குறித்த விபரம் அரசிடம் இல்லாதது, பனை தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பசுமை காடுகள் திட்டத்தின் கீழ், காடுகளின் பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கையை, தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2021 முதல் ஆண்டுதோறும் 10 லட்சம் பனை விதைகளை, மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளின் கரையோரம், வனத்துறையுடன் இணைந்து தன்னார்வ அமைப்புகள் நடவு செய்து, பராமரித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும், இதுகுறித்த விபரங்கள் எதுவும் அரசிடம் இல்லாதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, 'பனையெனும் கற்பகத் தரு' அமைப்பின் தலைவர் கவிதா காந்தி கூறியதாவது:

தமிழகத்தில் கள் ளுக்கு அரசு தடை விதித்திருப்பதால், பலரும் பனையின் பயன் கருதாது, மரங்களை ஆலைகளுக்கு வெட்டி விற்பனை செய்து விடுகின்றனர். இதை தவிர்க்க, அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என, கடந்த ஆண்டு எங்கள் சங்கம் சார்பில் வழக்கு பதிவு செய்தோம். அதற்கு அரசு தரப்பில், 'ஆண்டுதோறும், 10 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்படுவதால், தனிச்சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் இல்லை' என்று பதில் அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படும் பனைகள் குறித்த விபரங்களை கேட்டால், அதிகாரிகள் தகவல் இல்லை என்கின்றனர். மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரி உள்ளிட்ட பெரும்பாலான வனக்கோட்ட பகுதிகளில், இரண்டு ஆண்டுகளாக, பனை விதைகள் எதுவும் நடவு செய்யவில்லை என்று பதில் தந்துஉள்ளனர். அரசோ, 40 லட்சம் பனை விதைகளை நடவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது; அது, உண்மையா என்று தெரியவில்லை. பனை தொழிலாளர்களை ஏமாற்றாமல், நடவு செய்யப்பட்ட விதைகளின் விபரங்களை, வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Padmasridharan
மே 27, 2025 13:02

விஜயம் செய்யும் புது கட்சி, அஸ்தமிக்கும் கட்சியின் ஊழல்களை காளான் வளரும் வேகம் மாதிரி பரவச்செய்யட்டும் அப்ப பனை விதைகள் மட்டுமல்ல பணம் விவரங்களும் வெளியில் வரும்..


raja
மே 27, 2025 08:25

மொத்தமா புறங்கை நக்கி இருப்பானுவோ நம்ப திராவிட மாடல் கூட்டம்....


D Natarajan
மே 27, 2025 07:49

விடியல் மாடல். ஒன்றும் செய்ய முடியாது. கடவுள் கூட காப்பாற்ற முடியாது . மக்களே 2026 ல் தீர்க்கமாக முடிவு எடுங்கள். இல்லையேல் தமிழ் நாடு கோவிந்தா


R.RAMACHANDRAN
மே 27, 2025 07:41

எண்ணிக்கைகளை கூட்டி சொல்லி கொள்ளை அடிக்கும் இந்நாட்டில் உண்மை தகவல் கிடைப்பது எப்படி.


Priyan Vadanad
மே 27, 2025 07:30

எதை எழுதினாலும் பனைவிதை என்று எந்த படத்தை போட்டாலும் உடனே நம்பி குதிக்க எல்லா வாசகர்களும் மாணாமூணாக்கள் அல்ல.


Priyan Vadanad
மே 27, 2025 07:28

பனை விதை செடி என்று ஏதோ ஒரு இளஞ்செடியின் முளையை படமாக போட்டிருக்கிறீர்கள். எதை எழுதினாலும் எதை போட்டாலும் உடனே நம்பி குதிக்க எல்லா வாசகர்களும் பாஜக ஆட்கள் அல்ல.


Varadarajan Nagarajan
மே 27, 2025 07:13

இதுபோன்ற திட்டங்கள் மக்கள் வரிப்பணத்தை சுருட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டவை. அதன் பழங்களை அளவிடமுடியாது. இருந்தால்தானே தெரிவதற்கு. யாரேனும் வழக்கு தொடர்ந்ததால், சென்ற ஆண்டு கோடை வெப்பத்தில் அவைகள் கருகிவிட்டன என முடித்துவிடுவார்கள்


Palanisamy Sekar
மே 27, 2025 07:05

ஹாஹாஹா திமுக ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமுங்க. நாற்பது லட்சம் பனவிதைகளை விதைத்ததாக சொல்லி சுமார் நாற்பது கோடிக்கு கணக்கு காட்டியிருப்பார்கள். போடாத ரோட்டுக்கு போட்டதாக சொல்லி பணம் சம்பாதித்த கும்பல்கள் இவர்கள். பணைமுழுங்கி மகாதேவன்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை