மேலும் செய்திகள்
இறந்து கரை ஒதுங்கிய 10 கடல் ஆமைகள்
10-Jan-2025
சென்னை:'சென்னை கடலோரங்களில், அரிய வகை கடல் ஆமைகள் இறந்து, கரை ஒதுங்குவதற்கான காரணங்களை கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழக அரசுக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கடலோரங்களில், 'ஆலிவ் ரிட்லி' கடல் ஆமை உள்ளிட்ட, நான்கு வகை கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன. 15 நாட்களில், 350க்கும் அதிகமான கடல் ஆமைகள், கண்கள், கழுத்து வீங்கிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் சண்முகநாதன், 'இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது' என்றார்.அதைத்தொடர்ந்து, 'கடல் ஆமைகள் இறப்பை தடுப்பதற்கான, வழிகாட்டு விதிமுறைகள் ஏன் அமல்படுத்தப்படவில்லை என்பது குறித்தும், கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், தமிழக அரசு விளக்கம் தர வேண்டும்' என, தீர்ப்பாய நீதிபதி உத்தரவிட்டார்.
10-Jan-2025