உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுசா குற்றவாளிகள் உருவானா நாங்க என்ன பண்றது?: ரகுபதி நழுவல்

புதுசா குற்றவாளிகள் உருவானா நாங்க என்ன பண்றது?: ரகுபதி நழுவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''முன்னாள் குற்றவாளிகளை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் புதிது புதிதாக குற்றவாளிகள் உருவாகின்றனர். அதற்கு நாங்கள் என்ன பண்ணுவது?'' என சட்ட அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rkklxh6o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொடர் தோல்வி விரக்தியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டதாக கூறுகிறார். தமிழகம் கொலை மாநிலம் அல்ல; சமூக விரோதிகளை களை எடுக்கும் மாநிலம். அண்மையில் நடந்த கொலைகள் முன்விரோதத்தால் நடைபெற்றவை. சட்டம் ஒழுங்கை காப்பதில் இந்தியாவில் முதன்மை மாநிலம் தமிழகம். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அளவுக்கு தமிழகத்தில் எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை.சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாலேயே தொழிலதிபர்கள் தமிழகத்தை தேடி வருகின்றனர். பழிக்கு பழியாக நடக்கும் கொலைகளுக்கு அரசாங்கம் பொறுப்பாகுமா? ஆனால் இதனை தடுப்பதற்கு நிறைய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஏ, பி பட்டியலில் உள்ள ரவுடிகள் விசாரிக்கப்படுகின்றனர். சிறார் குற்றவாளிகள் சீர்திருத்தப்பட்டு வெளியில் அனுப்பப்படுகின்றனர். முன்னாள் குற்றவாளிகளை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் புதிது புதிதாக குற்றவாளிகள் உருவாகின்றனர். அதற்கு நாங்கள் என்ன பண்ணுவது? காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதால் குற்றங்கள் குறைகின்றன. அச்சுறுத்தல் இருப்பதாக கூறும் அரசியல் தலைவர்களுக்கு இந்த அரசு பாதுகாப்பு கொடுக்க தயாராக உள்ளது. ஆணவ கொலை தொடர்பாக அரசு தைரியமான முடிவை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

R.P.Anand
ஜூலை 30, 2024 10:00

அடேய் உருட்டு முதல்ல திமுக பாசறை ய மூடு எல்லாம் சரியாகும். எதிர்த்த எல்லாரையும் கொண்ணுட்டு பஞ்சாயத்து election நடத்தினால் நம்ம கட்சி தான்


arunasalam c.a
ஜூலை 30, 2024 08:12

அமைச்சர் புதிய குற்றவாளிகள் உருவாவதற்கு நாங்கள் என்ன செய்வது என்று விரத்தியில் கூறினார். சாராயம் மற்றும் போதை பொருள் கட்டுபடுத்த தவறியதால் தான் இந்த சூழ்நிலை உருவாகும் என்பதை ஏனோ கூற தைரியம் இல்லை என்பதே உண்மை


kumarkv
ஜூலை 29, 2024 23:11

முடி திருத்தும்


ManiK
ஜூலை 29, 2024 19:11

வேலையில்லா திண்டாத்தை ஒழிக்க திராவிட ச்டாலினின் உன்னத திட்டம்னும் சொல்லுவாங்க... அதையும் நம்பும் ஜடம்தானே நாமெல்லாம்!?


அசோகன்
ஜூலை 29, 2024 18:42

ரவுடிகளின் கூடாரம் திமுக..... இதுல மணிப்பூர் ஐ எடுத்துக்கிட்டு ஆடுச்சி இந்த ரவுடி கொள்ளை கூட்டம்....... மக்கள் முட்டாளாக இருக்கும் வரை இவர்களை ஒன்றும் செய்யமுடியாது


rama adhavan
ஜூலை 29, 2024 17:10

குடியும், கஞ்சாவும், சினிமாவில் உண்டாகும் சீரழிவும், வேலை இல்லா திண்டாட்டமும், உழைக்க விருப்பம் இன்மையும், அரசியல் சுயலாபமும் தான் குற்றவாளிகளை உருவாகும் சாக்கடை. சில தொழிற் சாலைகள் உருவாகும் சில நூறு வேலை வாய்ப்புகள் பற்றாது.


Narayanan
ஜூலை 29, 2024 16:59

புதிதாக ஏன் குற்றாவாளிகள் உருவாகிரார்கள் ?.ஏன் அனுமதிக்கிறீர்கள் ? நீங்கள் வேறுதிசையில் பயணம் செய்கிறீர்கள் . குறைந்த காலத்தில் கூடுதல் பணம் பண்ண ஓடுகிறீர்கள் . சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தெரியவில்லை .


D.Ambujavalli
ஜூலை 29, 2024 16:50

பழையன கழிதலும் புதியன புகுதலும் குற்றவாளிகளில் கூட இருக்கிறதா? பழையவர்கள் பதவிகள் பெற்று போய்விட்டால் வெற்றிடம் இல்லாமல் அவர்களே பயிற்சி கொடுத்து உலாவ விடுகிறார்கள் போலிருக்கிறது புதுக் குற்றவாளிகள் விண்ணிலிருந்து குதிக்கிறார்களா அல்லது இறக்குமதி செய்யப்படுகிறார்களா ? கட்சியும், நாடும் விளங்க இவரைப்போல் நாலுபேர் இருந்தால் போதும்


Raa
ஜூலை 29, 2024 16:41

போய் அண்ணாமலையிடம் கேளுங்கள், நல்ல பாடம் எடுப்பார். என்ன ஒரு பொறுப்பற்ற கேள்வி...


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 29, 2024 16:18

சட்டம் ஒழுங்கை தங்களால் காக்க முடியவில்லை என்பதை அமைச்சர் அவர்களே ஒத்துக் கொண்டுள்ளார். வாழ்க தமிழகம். நாற்பதுக்கு நாற்பது அடுத்து இருநூற்று முப்பத்தாறுக்கு இருநூற்று முப்பத்தாறை தமிழக மக்கள் தாரை வார்த்து கொடுத்தாலும் ஆச்சிரியப்பட ஏதுமில்லை. அதிமுக போனால் திமுக திமுக போனால் அதிமுக இந்த குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் தமிழக மக்கள்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ