உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது? கள்ளச்சாராய வழக்கில் ஐகோர்ட் கேள்வி

மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது? கள்ளச்சாராய வழக்கில் ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்றால் அதனை தடுக்காமல் மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது?' என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில், கடந்த ஜூன் 19ல் கள்ளச்சாராயம் குடித்து, 67 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில், கலெக்டர், கூடுதல் டி.ஜி.பி., -- எஸ்.பி., ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி எஸ்.பி., எஸ்.பி., உள்ளிட்ட ஒன்பது போலீஸ் அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ., தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3eega6xt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி, கடந்த நவ., 20ல் உத்தரவிட்டது. சி.பி.ஐ., விசாரிக்க தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம்கோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு இன்று (டிச.,18) சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கள்ளச்சாராய மரணத்தால் பதற்ற நிலை உருவானதால், 18 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்' என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, ஐகோர்ட் நீதிபதிகள், 'பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது என்றால் அதனை தடுக்காமல் மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது?' என கேள்வி எழுப்பினர். அனைத்து மனுக்கள் மீதும் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதால் ஜன.,6ம் தேதி, இறுதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

raja
டிச 18, 2024 18:06

ம்ம் என்ன பண்ணுதா.. பாட்டிலுக்கு மேல பத்துறுவா அதிகமா வச்சி கொள்ளை அடிக்கிது..


என்றும் இந்தியன்
டிச 18, 2024 17:50

சாராயம் கள்ளச்சாராயம் ரெண்டையும் செய்வது திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு வியாதிகள் தான், இப்போ போதை விற்பனை கூட அவர்கள் தான் செய்கின்றார்கள்


Barakat Ali
டிச 18, 2024 17:15

சிபிஐ நியாயமாக விசாரித்து முடிவை கோர்ட்டில் தெரிவித்தால் திராவிடமாடலுக்கு சாட்டையடித் தீர்ப்பு வர வாய்ப்பு ..... ஆனால் அது நடக்குமென்று தோன்றவில்லை .... காரணம் கொல்கத்தா பெண் டாக்டர் விவகாரத்தில் சஞ்சய் ராயைத் தவிர மற்ற அனைவரையும் காப்பாற்ற மாநில போலீஸ் முயன்றதைப் போலவே சிபிஐ யும் முயல்கிறது .....


KRISHNAN R
டிச 18, 2024 17:11

மூன்று ஓ ன்னு....


அப்பாவி
டிச 18, 2024 16:46

கேள்வியைப் பாத்ததும் சிரிக்க. ஆரம்பிச்சே இன்னும் நிறுத்த முடியலை.


duruvasar
டிச 18, 2024 15:32

மக்கள் வரி பணம் என்று கூட பார்க்காமல் உடனடியாக ஒரு பிணத்திற்கு 10 லச்சம் ரூபாய் என 6.7 கோடி ரூபாயை சோலையா அல்லி கொடுத்திருக்கிறோம் எசமான், இதுக்குமேலேயும் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள், சொல்லுங்க செய்ய காத்துக்கிடக்கிறோம் எசமான்.


கூமூட்டை
டிச 18, 2024 15:03

நாங்கள் பாதுகாப்பு முறைமைகள்


Anantharaman Srinivasan
டிச 18, 2024 14:24

பல ஆண்டுளாக எந்த திராவிட கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கள்ளசாராயம் காய்ச்சி விற்கப்படுகிறது. மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது? கள்ளச்சாராய வழக்கில் ஐகோர்ட் கேள்வி. மேலிடம் வரை மாதம் தோறும் மாமூல் பாய்வதால் விஷயம் மூடி மறைக்கப்படுகிறது. சிபிஐ அப்பீலுக்கும் அதுவே காரணம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை