உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளையராஜா வருகையின் போது ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் நடந்தது என்ன?

இளையராஜா வருகையின் போது ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் நடந்தது என்ன?

ஸ்ரீவில்லிபுத்துார்: இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு வந்தபோது நடந்தது என்ன என்பது பற்றி, மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லதுரை, விருதுநகர் கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p9kjr2zc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இசைஞானி இளையராஜா, நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் வாசலிலேயே யானையை கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற அவருக்கு, பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஜீயர் சுவாமிகளும் இளையராஜாவுக்கு மரியாதை செய்தார். இந்நிலையில், கருவறைக்குள் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்றும், அவர் அவமதிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.பொதுவாக கோவில் கருவறை என்று அழைக்கப்படும் கர்ப்ப கிரகத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகள், தக்கார்கள், அறங்காவலர்கள் போன்றவர்களும், மற்ற யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை. கருவறையில் அந்தந்த கோவிலில் பூஜை செய்யும் ஸ்தானிகர்கள், பட்டாச்சாரியார்கள், பரம்பரை குருக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதே கோவிலில், வேறு சன்னதியில் பூஜை செய்யும் குருக்களாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகம விதிப்படி கட்டிய கோவில்களில், பண்டைய காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை இதுதான்.கர்ப்ப கிரகத்தின் முன் உள்ள இடம் அர்த்தமண்டபம். இந்த மண்டபத்தில் பட்டர், குருக்கள் ஓதுவார்கள், மடாதிபதிகள், கோவில் அறங்காவலர்கள் அனுமதிக்கப்படுவர். இது, இடத்தை பொறுத்து கோவில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்படும்.அப்படி இருக்கையில், இளையராஜாவை முன் வைத்து இந்த சர்ச்சை வேண்டுமென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக, சந்தேகம் எழுந்துள்ளது.இதற்கிடையே, இளையராஜா கோவிலுக்கு வந்தபோது நடந்தது என்ன என்று, அறநிலையத்துறை அறிக்கை அளித்துள்ளது.'ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி அர்த்தமண்டபத்தில் (கர்ப்ப கிரகம் முன் உள்ள இடம்) மடாதிபதிகள், அர்ச்சகர்கள் தவிர, மற்றவர்கள் உள்ளே செல்ல கோவில் வழக்கப்படி அனுமதி இல்லை' என திரிதண்டி ஜீயர் தெரிவித்ததை இளையராஜா ஏற்றுக்கொண்டு அர்த்தமண்டபம் முன் நின்று தரிசனம் செய்தார் என்று, மதுரை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார்.

ஆண்டாள் கோவிலில் தரிசனம் முடிந்த பிறகு, திரிதண்டி நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆகியோருடன் சிரித்து பேசியபடி வரும் இளையராஜா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

Rasheel
டிச 19, 2024 18:04

ராமானுஜரின் ஆசிரியரே மற்ற சாதியை சேர்ந்தவர்தான். வைணவம் சாதியை, வெறியை வலுயுறுத்தவதில்லை. உயர்ந்த வைணவ ஜீயர்களே அவரை வரவேற்கும் போது, அதை விட மரியாதை என்ன வேண்டும். இளையராஜாவே அதை மறுத்து உள்ளார். சனாதனத்தை அழிக்க பல போலி செய்திகள் பரப்பபடுகிறது


SRITHAR MADHAVAN
டிச 17, 2024 10:09

தேர்ந்தெடுக்கப்படாமல் யாராவது பிரதமர் அல்லது முதல்வர் பதவியில் அமர முடியுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். யாரும் உரிமை கோர முடியாது மற்றும் தாழ்த்தப்பட்டதாக உணரக் கூடாது. கர்ப்பகிரகத்தில் நுழைவதற்கும் இதே விதி பொருந்தும்


sundarsvpr
டிச 17, 2024 08:58

பகவானுக்கு கைங்கரியம் செய்திடும் அர்ச்சகர்கள் கருவறையை விட்டு தீர்த்தம் சடாரி சாதிக்க மற்றும் ஸ்வாமி திரு வீதி புறப்படும் போது வெளியில் வருவார்கள். பகவான் கைங்கரிய பணிகள் முடிந்தவுடன் வெளி வேலைகளை கவனிப்பர். இது மீறப்பட்டுள்ளது. சட்ட மன்றத்தில் சபா நாயகர் வெளியில் வந்து அமைச்சர்களை வரவேற்க மாட்டார்கள். இருக்கையை விட்டு கீழ் உட்கார மாட்டார்கள். அதுபோல் ஜீயர்களுக்கும் அர்ச்சகர்களும் விதிகள் உண்டு. இவைகள் மீற மீறப்பட்டுள்ளதா என்பது முக்கியம்.


சாண்டில்யன்
டிச 17, 2024 07:32

இதென்ன கேள்வி


சாண்டில்யன்
டிச 18, 2024 07:11

இதென்ன கேள்வி என்ன அடைந்தது என்பதைத்தான் பல காட்சி ஊடகங்களிலும் காட்டி விட்டார்களே இன்னும் என்ன சப்பைக் கட்டு


J.V. Iyer
டிச 17, 2024 04:52

இது போன்ற வதந்திகள் பொலி ஊடகங்களால் மக்களை திசை திருப்பிவிடப்படுகிறது. முக்கிய செய்தியாக ரங்கராஜன் நரசிம்மனின் கைதை மக்களிடமிருந்து திசைமாற்ற இந்த புரளி. எவ்வளவு நாட்களுக்கு இது எடுபடும்?


Senthoora
டிச 17, 2024 04:46

கருவறைக்கு சாமானியர்கள் செல்ல அனுமதி இல்லை, இளையராஜா தனக்குத்தானே ஞானி என்று சொன்னால் போகவிடலாமா? ஒரு ஞானி கோவிலுக்கு உள்ளேபோகும்போது மேல் அங்கியை கழட்டனும்.


Raj S
டிச 16, 2024 23:24

ஆடு நனையுதேன்னு திருட்டு திராவிடன் கவலை பட்டானாம்... அவங்களுக்கு நாங்க போட்ட பிச்சைனு சொன்னது பரவால்ல... ஆனா இங்க இவரை உள்ள உடாம இருந்ததுதான் இப்போ ரொம்ப பெரிய பிரச்சனை... அவரே திருட்டு திராவிடன்லாம் வாய மூடலாம்னு சொல்லிட்டாரு...


கிஜன்
டிச 16, 2024 22:18

இசை ஞானியுடன் நெருங்கி நிற்கும் ஜீயர் .... இதுதான் திராவிட மாடல் வலியுறுத்தும் சனாதன சமத்துவம் ....


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 16, 2024 21:39

பரிவட்டம் போட்டு அழைத்து சென்று அந்த கோட்டுக்கு மேலே அவா நிற்க இவள் வரக்கூடாது ன்று ஏன் சொல்லணும் , இது நடந்து 12 மணி நேரம் கழித்து , ஜீயர் எல்லாம் கெஞ்சி சமாதானம் செய்த்து பிறகு வேற்குது நம்பிட்டோம்


Sampath
டிச 16, 2024 20:57

அங்கே உள்ளே சென்றவர்கள் சட்டை அணியவில்லை இளையராஜா சட்டையுடன் இருந்தார் என்பதுகூட ஒரு காரணமாக ஏற்கலாம். இந்த நம்பிக்கையை ஏற்றவர் அதை நம்பிக்கயுடன் பின்பற்றுகிறார்கள், ஆனால் ஏற்காதவர்கள் ஏன் இதில் தலையிடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. இது நமக்கு ஏற்பட்டுள்ள பெரும் சாபக்கேடு என்றே தோன்றுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை