உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிரம்ப் விதித்த வரி செல்லாது: அமெரிக்க நீதிமன்றம் சொன்னது என்ன?

டிரம்ப் விதித்த வரி செல்லாது: அமெரிக்க நீதிமன்றம் சொன்னது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி செல்லாது. சட்டவிரோதமானது என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்று தான் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தது. கனடா, பிரேசில் உட்பட பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்து அதிபர் டிரம்ப் அதிரடி காட்டினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i6hgvh8a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 50 சதவீதம் வரை பரஸ்பர வரிகள் விதிக்கப்பட்டது. மற்ற நாடுகளுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையும் வரிகள் விதிக்கப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்த அவகாசம் அளித்து அதிபர் டிரம்ப் பரஸ்பர வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். அப்போது ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வரிகளை குறைத்து கொண்டன.டிரம்பின் கோபத்திற்கு ஆளான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உதாரணமாக லாவோஸ் 40 சதவீத வரி விதிப்பாலும், அல்ஜீரியா 30 சதவீத வரி விதிப்பாலும் அதிர்ந்தது. இந்தியா பொருட்களுக்கு 25 சதவீதமாக பரஸ்பர வரியும், 25 சதவீத அபராத வரியும் விதிக்கப்பட்டது. இதனால் வரி 50 சதவீதமாக உயர்ந்தது.இதற்கிடையில், டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள வரி வதிப்புகள் அதிகார மீறலாகும் என கூறி அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது. அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யக்கூடிய பொருட்கள் அனைத்துக்கும் வரி விதிப்பதற்கு, அதிபர் டிரம்புக்கு எல்லையற்ற அதிகாரம் கிடையாது என்று மே மாதம் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்வருமாறு:* டிரம்ப் வரி விதிப்புகள் சட்டவிரோதமானவை.* அதிக வரிகளை விதிக்க அதிபருக்கு அதிகாரம் கிடையாது.* சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி இருக்கிறார்.* அரசு நிர்வாகம் அப்பீல் செய்வதற்காக, அக்டோபர் 15ம் தேதி வரை நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்துள்ளது. அதுவரை விதிக்கப்பட்ட வரிகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த கட்டம் என்ன?

இதனை எதிர்த்து அதிபர் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டால் வரிகள் ரத்து செய்யப்படும். இது அமெரிக்காவுக்கு பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். ஏப்ரல் 2ம் தேதி முதல் பரஸ்பர வரி என்று பெயரில் வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப செலுத்த வேண்டிய சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

குட்டப்பன்
ஆக 31, 2025 07:51

ஆர்டிஸ்ட் திட்டாதீர்கள். 200 க்கு ஸ்டிக்கர் ஓட்டுவதை எப்படி நிறுத்த முடியும்? கேவலம் 200 க்கு தன் இனத்தையே காட்டிக் கொடுக்கும் விசுவாசிகள்


Ramesh Sargam
ஆக 31, 2025 07:36

ட்ரம்ப் செய்வது எதுவுமே சரியில்லை.


ManiMurugan Murugan
ஆக 30, 2025 23:52

ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக அடுத்த நாடுகளின் மீது வரி சுமதத்துவது ஏற்ப்புடையது அல்ல


visu
ஆக 30, 2025 22:26

துக்ளக் தர்பார் போல உள்ளது நினைத்தால் நினைத்தபடி வரி விதிக்க முடியும் என்பதே அதிசயம் இப்படி ஒரு அதிகாரம் தேவைதான் ஆனால் தவறானவர்கள் கையில் சிக்கினால் இப்படித்தான்


s.sivarajan
ஆக 30, 2025 20:08

கூடிய விரைவில் இந்த வரிவிதிப்பு நாடகம் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது


Tamilan
ஆக 30, 2025 17:58

மோடியை இந்தியாவில் யாரும் எதிர்க்கவில்லையோ . மோடியின் அத்தனை சர்வாதிகார சட்டங்களையும் திட்டங்களையும் குப்பைத்தொட்டியில் போட்டுள்ளார்கள் இந்திய நிபுணர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள்


Tamilan
ஆக 30, 2025 17:57

உலகில் உள்ளவர்களையெல்லாம் முட்டாளாக்கும் முயற்சி இது


GMM
ஆக 30, 2025 17:24

அதிபர் டிரம்ப் வரிவிதிப்பு இஷ்டம் போல் உள்ளது. அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நாட்டை பாதிக்கும். அதே போல நீதிமன்றம் பொருளாதார, பாதுகாப்பு விசயத்தில் தன் அதிகாரம் செலுத்தி, வரி விதிப்பை ரத்து செய்வது தவறு. அமெரிக்கா நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கும். அரசிடம் மாற்று வருவாய்க்கு கருத்து தெரிவிக்க நீதிபதி அணுக வேண்டும். அமெரிக்கா நீதிபதி தீர்வு முன்னாள் இந்திய பிரிட்டிஷ் நீதிபதி போல் இருக்க கூடாது. இந்திய உச்ச நீதிமன்றம் போல் ஜனாதிபதி கட்டுபடுத்தும் தன்னிச்சையான அதிகாரம் போல் உள்ளது. நிர்வாக ஆலோசனை பெற்று நீதிமன்றம் இயங்க வேண்டும்.


Thangavel
ஆக 30, 2025 19:39

அருமை , நீங்கள் கண்டிப்பக அரசு அதிகாரியாக தான் இருப்பீர்கள்


தமிழன்
ஆக 30, 2025 16:27

தி மு க போராட போவதாக சொன்னாங்களே அரசியல் ஆதாயத்திற்காக ஐயோ நம் ராஜா தந்திரம் அனைத்தும் வீணாகி போய் விட்டதே


ponssasi
ஆக 30, 2025 15:57

ஒரே தீர்வு தற்சார்பு பொருளாதாரம் மட்டுமே கைகொடுக்கும். அனைவரும் இந்தியாவில் தயாராகும் உற்பத்தியாகும் பொருளை மட்டுமே வாங்குவது, பயன்படுத்துவது. தொன்னூறுகள் வரை இந்தியா அப்படிதான் இருந்தது. உலக பொருளாதாரமயமாக்கல் வந்தபின் இந்தியா தலைகீழாக மாறியது. இந்தியர்கள் 75% இந்திய பொருட்களை பயன்படுதுவதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை