உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரளாவைப் பார்த்து மனம் மாறினால் என்ன? முதல்வர் ஸ்டாலினை கேட்கிறார் நயினார் நாகேந்திரன்

கேரளாவைப் பார்த்து மனம் மாறினால் என்ன? முதல்வர் ஸ்டாலினை கேட்கிறார் நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பி.எம்., ஸ்ரீ' எனப்படும், பிரதமரின் முன்னேறும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தில் இணைய கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவை பார்த்து மனம் மாறினால் என்ன? என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கதான் திமுகபி.எம்., ஸ்ரீ' எனப்படும், பிரதமரின் முன்னேறும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தில் இணைய கேரள அரசு முடிவு செய்துள்ள செய்தி தங்கள் காதுகளுக்கு எட்டியிருக்கும் என நம்புகிறேன். இத்திட்டத்தில் இணைந்ததற்கான காரணமாகப் பொதுவெளியில் என்ன கூறினாலும், இதன் வாயிலாக ஸ்மார்ட் வகுப்புகள், டிஜிட்டல் நூலகம், டிஜிட்டல் ஆய்வகம், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மைதானம், இன்னோவேஷன் கவுன்சில் போன்ற வசதிகளுடன் கூடிய முன்மாதிரிப் பள்ளிகளாக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். இதனால், கேரளாவின் பல லட்சம் ஏழைப் பிள்ளைகள் இலவசமாகத் தரமான கல்வியைப் பெற முடியும் என்பது தங்களுக்கும் தெரியும். தொட்டதற்கெல்லாம் அண்டை மாநிலங்களை உற்றுநோக்கும் நீங்கள், பினராயி விஜயன் ஆளும் கேரளாவைப் பார்த்து மனம் மாறினால் என்ன? “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று ஆடம்பர விழாக்களை மட்டும் நடத்தினால் போதுமா? ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் காக்க வேண்டாமா? அவர்களை முன்னேற்ற வேண்டாமா? ஆட்சி முடியும் தருவாயிலாவது, தமது அரசியல் காழ்ப்புணர்ச்சியைவிட்டு, தமிழக மாணவர்களின் நலன் காக்க முன்வர வேண்டும் என்பது தான் திமுக அரசிடம் தமிழக மக்களுக்கு உள்ள கடைசி எதிர்பார்ப்பு. அதையாவது நிறைவேற்றுங்கள் முதல்வரே. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Vasan
அக் 24, 2025 22:26

அடுத்த கல்வி ஆண்டில், அதாவது மே 2026 க்கு பின் சேரலாம்.


Venugopal S
அக் 24, 2025 21:38

எல்லாம் எத்தனை நாட்களுக்கு என்று பார்க்கத் தானே போகிறோம்!


kjpkh
அக் 24, 2025 22:35

எத்தனை நாள் பார்த்தாலும் எப்படி பார்த்தாலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் தான் துருப்புச் சீட்டு. இந்தத் தேர்தல் திமுகவுக்கு ஆனதல்ல என்று மக்கள் சொல்கிறார்கள்.


தத்வமசி
அக் 24, 2025 21:01

திராவிடத்திடம் காசாக கொடுத்தால் வாங்கி சென்னை மழைநீர் வடிகால் கட்டியது போல பயன்படுத்த வசதியாக இருக்கும். ஆனால் காசு நேரடியாக தரமாட்டார்களே. இப்படி நேரடியாக பணம் தனக்கு வருவதில்லை, பெயரும் புகழும் மத்திய அரசுக்கே செல்கிறது. மக்களுக்கு மட்டும் பயன் என்றால் திராவிடம் கூப்பாடு போடும், நாடகம் ஆடும். இப்படி தடுக்கப்பட்ட திட்டங்களை எத்தனை என்று பிஜேபி தலைவர் மக்களுக்கு கூறவேண்டும். அதில் விஸ்வகர்மா திட்டம், நவோதயா பள்ளிகள் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.


Rajan A
அக் 24, 2025 20:38

நயினார் இன்னும் பச்சப்புள்ள மாதிரி கேள்வி கேட்டால் பாஜக உருப்பட்டா மாதிரி தான். மயில் இறகில் தடவினா, 2400 வரை தீம்கா தான். தவறான தலைமை முடிவோ? ஒரு டெவலப்மெண்ட்டை சமாளிக்க முடியல?


Narayanan Muthu
அக் 24, 2025 20:32

பி எம் ஸ்ரீ பேரை பார்த்தாலே தெரியுது இது சங்கிகளின் திட்டம் என. மாநிலங்களுக்கு நிபந்தனையின் பேரில் நிதி கொடுப்பது என்பது ஒரு வகை மிரட்டல்.


vivek
அக் 24, 2025 20:55

திமுக நடத்தும் பள்ளிகளில் பற்றி பேசுற முத்து


kjpkh
அக் 24, 2025 21:25

அப்படியே முட்டு கொடுத்து அரசு பள்ளிகளில் படிக்கு மாணவ மாணவிகளின் சிறந்த படிப்பை பாழாக்கி விடாதீர்கள். முடிந்தால் கல்வி அமைச்சர் மகேஷின் மகனை தமிழ் படிக்க சொல்லுங்கள். பிரஞ்சு வேண்டாம் என்று சொல்லுங்கள். எதற்கெடுத்தாலும் சங்கி சங்கி என்று மாணவ மாணவிகளின் படிப்பை கெடுத்து விடாதீர்கள்.


T.sthivinayagam
அக் 24, 2025 20:22

ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் காக்க வேண்டும் என்றால் மேல்படிப்புக்கு உதவாத ஹிந்தியை பள்ளியில் பத்து ஆண்டுகளாக படிக்க தேவையே இல்லை பழகி பேச தெரிந்தாலே அதிகம் ஆமாம் இது எல்லாம் தெரிந்து தான் ஜெயலலிதா அவர்கள் உங்கள் விசயத்தில் தெளிவாக இருந்து உள்ளார் என்று தொண்டர்கள் பேசுகின்றனர்.


kjpkh
அக் 24, 2025 21:23

முதலில் முதல்வர் குடும்பம் நடத்தும் பள்ளிகள் திமுகவினர் நடத்தும் பள்ளிகள் தனியார் நடத்தும் பள்ளிகள் இவைகளில் ஹிந்தி சொல்லி தருவதை நிறுத்த முடியுமா? அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் மட்டும் ஹிந்தி படிக்க முடியாமல் வைத்திருக்கிறீர்களே என்று மக்களுக்கு கேட்கின்றனர். இதற்கு சரியான பதில் சொல்ல முடியுமா தேவையில்லாத முட்டுக்களை பதியாமல் சொல்லுங்களேன்.


vivek
அக் 25, 2025 08:10

சமச்சீர் படித்த இவளோ அறிவா என்று மக்கள் கேட்கின்றனர்


Anantharaman Srinivasan
அக் 24, 2025 20:21

பி.எம்., ஸ்ரீ எனப்படும், பிரதமரின் பள்ளித்திட்டத்தில் இணைய வறட்டு கௌரவம் தடுக்கிறது. திமுக காரங்க நடத்தும் CBSC பள்ளிகளில் வசூல் வேட்டை பாதிக்கப்படுமே..??


எஸ் எஸ்
அக் 24, 2025 20:00

இந்த கேள்வியைத்தான் மூன்று நாட்களாக எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் யாராவது முதல்வரை கேட்க மாட்டார்களா என்று.. சபாஷ் நயினார்!


Mario
அக் 24, 2025 19:55

சொல்கிறார் நாலரை கோடி


vivek
அக் 24, 2025 20:54

உளறுகிறார் மரியோ


தத்வமசி
அக் 24, 2025 21:02

நாலாயிரம் கோடிக்கு இன்னும் சரியாக கணக்கு கொடுக்கவில்லையாம். அதை முதலில் கொடுக்கச் சொல்லுங்கள்.


ஆரூர் ரங்
அக் 24, 2025 19:48

CM ஸ்ரீ ன்னு பேரை மாற்றினா ஒருவேளை ஒப்புக் கொள்வார். தெலுங்கில மாற்றினால் நிச்சயம் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொள்வார்கள்.


T.sthivinayagam
அக் 24, 2025 20:59

தமிழகத்தில் உள்ள சில பேர்களுக்கு தாய் மொழி எது என்று தெரியுமா அல்லது தாய் மொழியே அவர்களுக்கு இல்லையா என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை