உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடு என்னாச்சு?

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடு என்னாச்சு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வியில் வாய்ப்பு அளிக்கும் வகையில் 2.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும்' என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாததை கண்டித்து சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக் குழுவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நேற்று, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தின் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.பின், மீட்பு குழு மாநில செயலர் கனகராஜ் கூறியதாவது:தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பணியிடங்களில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறோம். இவற்றை ஆட்சிக்கு வந்ததும் தீர்ப்பதாக கூறிய தி.மு.க., தற்போது, எங்களை கண்டு கொள்ளவில்லை.முக்கியமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக்கி, அதன் உள்ஒதுக்கீடாக 2.5 சதவீதத்தை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. ஆட்சியில் அமர்ந்ததும், தி.மு.க., மறந்து விட்டது.அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி இணை பிரிவை அனுமதித்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்கான ஒப்புதல் வழங்கப்படாததால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சம்பளம் பெறாமல் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில், 1991 - 92ம் கல்வியாண்டுக்கு பின் துவக்கப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட தமிழ்வழி பள்ளிகளுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2011ல் அரசு மானியம் அளித்து அரசாணை வெளியிட்டார்; அது, கிடப்பில் போடப்பட்டுள்ளது. உதவி பெறும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பித்தலை கைவிட்டு, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Svs Yaadum oore
டிச 08, 2024 08:44

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் சம்பளத்தில் இருந்து டி.டி.எஸ்., வரிப்பிடித்தம் செய்வதில் தவறொன்றும் இல்லை என, உச்ச நீதிமன்றம் உத்தரவு ......இவனுங்க சம்பளம் மக்கள் வரிப்பணத்தில் அரசு கொடுக்குது ......அதற்கு இத்தனை ஆண்டு காலம் வரி பிடித்தம் இல்லாமலேயே மொத்தமும் மதம் மாற்றும் பள்ளிகளுக்கு வாரி வழங்கியுள்ளார்கள் ....வரிப்பிடித்தம் செய்வது இவனுங்க உரிமை பறிப்பாம் ....


Svs Yaadum oore
டிச 08, 2024 08:36

சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக் குழுவாம் .....அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக்கி, அதன் உள்ஒதுக்கீடாக 2.5 சதவீதத்தை இவனுங்களுக்கு கொடுக்கனுமாம் ....எதுக்கு கொடுக்கனும்? முதலில் இவனுங்க நடத்தும் பள்ளியில் மாணவர் சேர்க்கையில் சமூக நீதி இட ஒதுக்கீடு உள்ளதா ??.....அதை அரசு கண்காணிக்க முடியுமா ??...,,இந்த பள்ளிகளின் ஆசிரியர் சேர்க்கையில் சமூக நீதி இட ஒதுக்கீடு உள்ளதா ??....இவனுங்க மதம் மாற்றம் செய்ய பள்ளி நடத்திக்கொண்டு அதற்கு மக்கள் வரிப்பணத்தில் இட ஒதுக்கீடு கொடுக்கணுமாம் ....


Kasimani Baskaran
டிச 08, 2024 07:58

உள் ஒதுக்கீடு, வெளி ஒதுக்கீடு, பக்க ஒதுக்கீடு, மேல் ஒதுக்கீடு என்று ஆரம்பித்தால் தகுதியுள்ளவர்களுக்கு யார் ஒதுக்கீடு செய்வார்கள்?


raja
டிச 08, 2024 03:21

நான் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் கேட்கும் கேள்விகளுக்கு அவரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று பதில் தந்தவன் ...நீகள் எல்லாம் என் கால் தூசுக்கு கூட சமம் இல்லை உங்கள் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை