உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராகுல் நடைபயணத்தில் ஸ்டாலின் பங்கேற்றார்: பின்னணி என்ன?

ராகுல் நடைபயணத்தில் ஸ்டாலின் பங்கேற்றார்: பின்னணி என்ன?

சென்னை: பீஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலின் நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். பீஹார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து, போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இறந்து போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரண்டு இடத்தில் பெயர் இருந்தவர்கள் என 65 லட்சம் பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. குற்றச்சாட்டு நாடு முழுதும் இதை எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்னையாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றன. இதன் தொடர்ச்சியாக, 'வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்து, பீஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., முயற்சிக்கிறது' என குற்றஞ்சாட்டி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், பீஹாரில் கடந்த 17ம் தேதி முதல் பிரசார நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதில் பங்கேற்கும்படி, 'இண்டி' கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், இண்டி கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின், பீஹாரில் ராகுல் மேற்கொள்ளும் இன்றைய நடைபயணத்தில் பங்கேற்றார். இதற்காக, சென்னையில் இருந்து தனி விமானத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று பாட்னா புறப்பட்டு சென்றார். நடைபயணத்தில் பங்கேற்ற பின், மாலை சென்னை திரும்ப திட்டமிட்டு உள்ளார். லோக்சபா தேர்தலையொட்டி, கடந்த 2023 ஜூன் மாதம், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் பீஹார் சென்றார். அதன்பின், இன்று தான் அங்கு செல்கிறார்.

நெருக்கடி

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது

என்ன தான் ராகுல் பிரசார நடைபயணத்தை மேற்கொண்டாலும், இண்டி கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளார். பீஹாரில் நடக்கும் ராகுல் நடைபயணத்தில் கலந்து கொள்வதன் வாயிலாக, ராகுலுடன் இணைந்து செயல்படுவதாக காட்டிக் கொள்வதோடு, தேர்தல் நெருக்கத்தில் தமிழக காங்., சார்பில் 'சீட்' ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களில் நெருக்கடி வரக்கூடாது. இதற்காகவே இந்தப் பயணத்தை ஸ்டாலின் பயன்படுத்திக் கொள்ள விரும்பியே பீஹார் சென்றிருக்கிறார். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sankaranarayanan
ஆக 27, 2025 21:03

ஹிந்தி தெரியாதுடா போடா என்ற வாசகங்கள் அடங்கிய பனியன்களை அங்கே எடுத்துச்சென்று விற்றால் அங்கே அனைவரும் வாங்கி போட்டுக்கொண்டு சந்தோஷப்படுவார்கள் செய்யலாமா


Rajan A
ஆக 27, 2025 20:52

நடைப்பயிற்சி உடலுக்கு நல்லது அவ்வளவு தான்.எப்படியோ சேட்டன் ஐயப்பன் சங்கமத்தில் இருந்து தப்பியாச்சு


Rathna
ஆக 27, 2025 17:00

பீஹாரிகளை பீடாவாயன்கள், ஹிந்தி காரன் படிக்காதவன், பானி பூரிகாரன் என்று விமர்ச்சித்தது, வடநாட்டில் மிக பெரிய பேச்சு பொருளாக ஆகி இருக்கிறது. இதை பிஜேபி பயன்படுத்தி எலெக்க்ஷன் ரிசல்ட்டை மாறினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. இது மிக வேகமாக பரவி வருகிறது.


T.sthivinayagam
ஆக 27, 2025 14:24

சுயநல அரசியல்வாதிகளிடம் பீகார் மக்களையும் பீகாரி மொழியையும் காப்பாற்ற தான் தமிழக முதல்வரின் பீகார் பயணம்


V RAMASWAMY
ஆக 27, 2025 14:15

எதோ கூப்பிட்டார் போகிறார், எதற்கென்று தெரியாமல், புரியாமல். இதுவும் ஒரு மாடல் அரசின் சாதனையென்று, இவர்கள் முன்னோடியாக சொல்லித்தான் இண்டி கூட்டணி நடைப்பயணத்தை ஆரம்பித்ததென்று. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் ரஷியாவுக்கும், ஏன் உலகுக்கே இவர்கள் தான் வழிகாட்டிகள்.


Nellai Baskar
ஆக 27, 2025 10:12

ஒவ்வொரு இந்துக்கள் பண்டிகைக்கும் பிரதமர் வரும் போதும் எப்படியாவது எஸ்கேப் ஆகி விடுகிறார்களே முதல்வரே !


Sundaran
ஆக 27, 2025 09:30

கோமாளிகள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகிவிட்டது இண்டி கூட்டணி .naadu meendum ஒரு பிரிவினையை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் உருவாகி வருகிறது இண்டி டி எம் சி கட்சிகளால்


VENKATASUBRAMANIAN
ஆக 27, 2025 09:30

திருட்டு கும்பல் ஒன்று சேர்கிறார்கள. அடுத்தவரை திருடன் என்று கூறும் ராகுல் ஜாமினில் இருக்கிறார். இதுதான் லட்சணம்.


Tamilan
ஆக 27, 2025 08:53

பீகாரிலிருந்து பல ரவுடிகளை தமிழகத்தில் இறக்குமதி செய்துள்ள மதவாத கும்பலுக்கு அங்கு சென்றே அறை


V Venkatachalam
ஆக 27, 2025 13:53

சாராய வியாபாரி கட்சியோடு கூட்டணி வச்சிருக்கவன்களின் 17 கட்சி பேரை படித்தாலே தண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிடும்.


SUN, PDKT
ஆக 27, 2025 08:49

சக்ஸஸ். பீகாரில் பா.ஜ.க கூட்டணி வெற்றி உறுதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை