உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் எதிர்ப்பு நாடகத்தை தொடரும் மர்மம் என்ன?: திமுக.,வுக்கு அண்ணாமலை கேள்வி

நீட் எதிர்ப்பு நாடகத்தை தொடரும் மர்மம் என்ன?: திமுக.,வுக்கு அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை தனது 'எக்ஸ்' வலைதளத்தில் பதிவிட்டதாவது: நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, தமிழக பா.ஜ., பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. நீட் தேர்வு வந்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, மத்திய பா.ஜ., அரசின் பரிந்துரையின் அடிப்படையில், தீர்வு காணப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், நீட் தேர்வு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விவரங்களை, பலமுறை வலியுறுத்தியும், திமுக அரசு அமைத்த இந்தக் குழு வழங்க மறுப்பது ஏன்? முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன? நீட் தேர்வுக்கு முன்பாக, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி இடம் பெற்றனர் என்ற உண்மையைக் கூறினால், நீட் தேர்வு வந்த பிறகே, அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர் என்ற உண்மை வெளிப்பட்டு, திமுக உருவாக்கிய போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

VSMani
ஜூலை 06, 2024 16:32

நீட் தேர்வில் பாஸ் மார்க் 120 /720 . ஏழை மாணவர்கள் நீட் படிப்பதற்கு ஆகாஷ் போன்ற குஜராத்திகள் நடத்தும் சென்டர்களுக்கு நிறைய பணம் கட்டமுடியாது. அப்படியும் பணம் கட்டி படித்து பாஸ் மார்க் வாங்கினாலும் ஏழை மாணவர்களால் வருடத்திற்கு 25 லட்சம் கொடுத்து படிக்க முடியாது. இப்பொது நீட் தேர்வு பணக்காரர்களுக்கு தான் உதவுகிறது. எனது உறவினர் மகன் 3 வருடங்களாக நீட் எழுதி 417 மார்க் பெற்றும் அவன் விரும்பிய மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்க வில்லை. ஆனால் நீட் தேர்வில் 319 மார்க் வாங்கிய பணக்கார பையன் வருடத்திற்கு 25 லட்சம் பணம் கொடுத்து மகாத்மா காந்தி மெடிக்கல் காலேஜிலே சேர்ந்துட்டான். எனவே, நீட் தெரு எல்லாம் பணக்காரர்களுக்குத்தான். நான் +2 படித்த 1986 ஆண்டுகளில் நீட் தேர்வு இல்லாமல் எவ்வளவோ ஏழை மாணவர்கள் +2 மார்க் மற்றும் எண்ட்ரன்ஸ் தேர்வு மூலமாக அரசு மருத்துவக்கல்லூரிகளில் படித்தார்கள்.


VSMani
ஜூலை 06, 2024 16:32

நீட் தேர்வில் பாஸ் மார்க் 120 /720 . ஏழை மாணவர்கள் நீட் படிப்பதற்கு ஆகாஷ் போன்ற குஜராத்திகள் நடத்தும் சென்டர்களுக்கு நிறைய பணம் கட்டமுடியாது. அப்படியும் பணம் கட்டி படித்து பாஸ் மார்க் வாங்கினாலும் ஏழை மாணவர்களால் வருடத்திற்கு 25 லட்சம் கொடுத்து படிக்க முடியாது. இப்பொது நீட் தேர்வு பணக்காரர்களுக்கு தான் உதவுகிறது. எனது உறவினர் மகன் 3 வருடங்களாக நீட் எழுதி 417 மார்க் பெற்றும் அவன் விரும்பிய மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்க வில்லை. ஆனால் நீட் தேர்வில் 319 மார்க் வாங்கிய பணக்கார பையன் வருடத்திற்கு 25 லட்சம் பணம் கொடுத்து மகாத்மா காந்தி மெடிக்கல் காலேஜிலே சேர்ந்துட்டான். எனவே, நீட் தெரு எல்லாம் பணக்காரர்களுக்குத்தான். நான் +2 படித்த 1986 ஆண்டுகளில் நீட் தேர்வு இல்லாமல் எவ்வளவோ ஏழை மாணவர்கள் +2 மார்க் மற்றும் எண்ட்ரன்ஸ் தேர்வு மூலமாக அரசு மருத்துவக்கல்லூரிகளில் படித்தார்கள்.


Thanga Durai
ஜூலை 04, 2024 10:26

நீட் இல்லை என்றால் பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் சொல்லும் நபர்கள் அல்லது வர்க்கத்தினர்கள் மட்டுமே அதிகமாக டாக்டர்கள் ஆக வாய்ப்பாகி விடும். இது வருங்காலத்தில் பெரிய பாதிப்பாக மாறும். நீட்டை எதிர்பவர்கதெரிந்தோ தெரியாமலோ நம் நாட்டை கொஞ்சம் கொஞ்சமா அழிக்க முயல்கிறார்கள் என்றே தோன்றுகிறது..


David D
ஜூலை 03, 2024 20:30

திரு மாதவன் அவர்களே ,நீங்கள் தெரியாமல் சொல்கிறீர்கள் . 85% பிரைவேட் & அரசு கல்லூரிகளில் முழுவதும் தமிழ்நாடு மாணாக்கர்களுக்கே . அந்த 15% நாமும் எந்த மாநிலத்துக்கும் அப்ளை செய்யலாம் . இந்த நீட் அடிப்படியில் அட்மிஷன் கிடைக்கும் போதே , நமது திமுக கல்லூரிகளில் வருடத்திற்கு குறைந்த பட்சம் 10 முதல் 15 லட்சம் பிளாக் பணம் வேண்டும் என்று கேட்கிறார்கள்.


Ramamurthy N
ஜூலை 03, 2024 16:52

நீட் வருவதற்கு முன் மற்றும் நீட் தேர்வுக்கு பிறகு எவ்வளவு அரசு கல்வி நிலையங்களிலிருந்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்கள் என்ற விவரங்களை அளித்தால் பயனுள்ளதாக இருக்குமே?


என்றும் இந்தியன்
ஜூலை 03, 2024 16:39

நீட் தேர்வினால் மிக மிக நஷ்டம் அடைவது திமுக மற்றும் அதிமுக கஸ்மாலங்கள் உரிமையாளர்களாக இருக்கும் தனியார் மருத்துவக்கல்லூரியில் அதாவது வருடத்திற்கு ரூ 600 கோடி. எல்லாம் இந்த பிஜேபியினால் மோடியினால் தான் பின்னே வயிறு எரியாதா என்ன திருட்டு திராவிடர்களுக்கு


duruvasar
ஜூலை 03, 2024 14:20

மருத்துவ கல்வி தந்தைகள் அதிகமாக உள்ளதில் முதலிடத்தில் திமுகவும், இரண்டாம் இடத்தில் அதிமுகவும் உள்ளது. அவர்கள் கோடி கோடியாக கட்சிக்கு பணம் கொடுக்கிறார்கள். எனவே வாங்கிய பணத்திற்கு கூவுகிறார்கள்.


பேசும் தமிழன்
ஜூலை 03, 2024 14:15

நீட் தேர்வு இருப்பதால்.... தனியார் மருத்துவ கல்லூரிகள்.... அட்மிஷன் மூலம் கொள்ளை அடிக்க முடியவில்லை... அது தான் அவர்கள் கவலை.


R Jayapal
ஜூலை 03, 2024 14:11

அரசு கல்லூரிகளில் +2 மார்க் மூலம் சேர்க்கலாம். தனியார் கல்லூரிகளுக்கு நீட் மிக அவசியம். இல்லாவிட்டால் , கோடிகளை மட்டும் தகுதியாக வைத்து மக்குகளை சேர்ப்பார்கள்.தமிழர்களின் உயிர் என்னாவது?


R Jayapal
ஜூலை 03, 2024 14:02

அரசுக் கல்லூரிகளில் +2 மார்க் வைத்து சேர்க்கலாம். தனியார் கல்லூரியில் சேர நீட் அவசியம் வேண்டும். தனியார் கல்லூரிகள் கோடிகளை மட்டும் தகுதியாக வைத்து மக்குகளை சேர்ப்பார்கள். தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருக்காது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை