உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் கருத்துக்கு அன்புமணி சரமாரி கேள்வி

உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் கருத்துக்கு அன்புமணி சரமாரி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கு எப்படி வெற்றி இது? என ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து முதல்வரின் கருத்துக்கு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் பின்தங்கிய மக்களின் நிலை பற்றி உண்மையான விவரத்தை அறிந்து கொள்ள தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் தான் தமிழக மக்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு வசதிகள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7kuzo3kt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கு காங்கிரசும் திமுகவும் சொந்தம் கொண்டாடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆட்சி அதிகாரம் இருந்தபோது தி.மு.க.,காங்கிரஸ் இதனை செய்யவில்லை. சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடி அவர்களின் அரசு மட்டும் தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். caste census வேறு caste survey வேறு. கேஸ்ட் சர்வே தமிழக அரசுதான் எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க Caste Survey அவசியம். அதனை தமிழக அரசு தான் எடுக்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். எங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. இது எங்களுக்கு தான் வெற்றி. உங்களுக்கு எப்படி வெற்றி இது? உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? என்னனே தெரியாமல் ஆளும் கட்சியினர் உளறிக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அன்புமணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Ramesh Sargam
மே 01, 2025 20:58

திமுக என்றாலே சமூக அநீதி.


mohanamurugan
மே 01, 2025 20:50

தீண்டாமையை ஒழிப்பதற்காகவும் சாதி வேறுபாடுகளை களைந்தெறிவதற்காகவும் சாதியே இருக்கக் கூடாது என்பதற்காகவும் விரும்புகின்ற இந்துக்கள் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்காகவும் தொடங்கப்பட்டு சமூகநீதியே உயிர் மூச்சு என்ற ஒற்றைக் கொள்கையோடு இருக்கின்ற பாரதிய ஜனதாவின் கால் தூசிக்கு வருமா தீயமுக?


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 01, 2025 20:47

எங்க கிம்ச்சை மன்னர் புரியாதது போல நடித்துக்கொண்டே இருக்கிறார் [e census வேறு e survey வேறு. கேஸ்ட் சர்வே தமிழக அரசுதான் எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க Caste Survey அவசியம். அதனை தமிழக அரசு தான் எடுக்க வேண்டும்.]


Ramesh Sargam
மே 01, 2025 20:24

சமூக துரோகிகள் திமுகவினர்.


kumarkv
மே 01, 2025 20:19

நிறைய சம்மந்தம் உண்டு. இதுதான் திரவிட மாடல். நேத்தி தான் இதைபத்தி யாரோ பேசினாங்க


பா மாதவன்
மே 01, 2025 19:57

ஜாதிகளே இல்லை என்று சொல்பவர்கள் ஜாதிக் கணக்கு எடுக்க தாங்கள் தான் சொன்னோம் என்று உரக்க மார்தட்டி சொல்கிறார்கள். ஒருவேளை, தொகுதியில் பெரும்பாலனவர்கள் எந்த ஜாதி என்று தெரிந்தால், அந்த சமுதாயத்தை சேர்ந்தவரை நிற்க வைக்க உதவியாக இருக்கும் என்பதால் தான் என்னவோ. ஜாதி இல்லை ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் பள்ளியில் சேர்க்கும் போது, குழந்தையிடம் என்ன ஜாதி என்று தகவல் கேட்டுப் பெறக் கூடாது. நாடு விடுதலை ஆகி 78 வருஷங்கள். ஆகியும், இந்த சூழல் தொடர்வது என்பது, இதை வைத்து அரசியல் சாயம் பூசி அதிலிருந்து அரசியல் ஆதாயம் பெறுவதற்காகத் தான் என்று எண்ணத் தோன்றுகிறது. "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று ஒரு சுதந்திரத் தியாகி சொன்னார். "ஜாதிகள் வேண்டுமடி பாப்பா - அதை வைத்து அரசியல் செய்வதற்கு" என்று தான் அதற்கான வேலைகளை திராவிஷ இயக்கங்கள் மும்முரமாக செய்கின்றன.


GMM
மே 01, 2025 19:20

பிஜேபி யின் சாதி கணக்கெடுப்பு மூலம் எல்லா சாதிக்கும் கல்வி, வேலை வாய்ப்பு கிடைக்கும். திமுக, பாட்டாளி போன்ற கட்சிகளுக்கு இது போன்ற சமூக நீதி பிடிக்காது. வெற்றி கணிக்க முடியாது.


சிட்டுக்குருவி
மே 01, 2025 18:51

நல்லா கேள்விகேட்டீங்க உங்களுக்கு தெரியாதா ஆட்டுக்கும் புலிக்கும் என்ன சம்பந்தம் என்று .ஆடு புலிக்கு இறையாகும் .தமிழ் சமூகம் திராவிடத்திற்கு இரையாகும் .


Rangarajan Cv
மே 01, 2025 18:33

Dr. Anbumani’s statement is factually correct. Can his statement be denied?


Veluvenkatesh
மே 01, 2025 18:24

எங்கும் வெற்றி-எதிலும் வெற்றி ஆக மற்றவர்களின் திட்டத்தில்-கொள்கையில்-செயல்பாட்டில் ஸ்டிக்கர் ஓட்டுவதில் எங்களுக்கு மட்டும்தான் உரிமை. வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்னு சும்மாவா சொன்னாங்க, அதான் திமுக.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை