உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னிடம் பழனிசாமி என்ன பேசினாரோ அதையே விஜயிடமும் பேசியிருப்பார்: கூட்டணி பேரம் குறித்து சீமான் பேட்டி

என்னிடம் பழனிசாமி என்ன பேசினாரோ அதையே விஜயிடமும் பேசியிருப்பார்: கூட்டணி பேரம் குறித்து சீமான் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:''அ.தி.மு.க., தரப்பில் என்னிடம் என்ன பேசப்பட்டதோ, அதையே விஜயிடமும் பேசியிருப்பர்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.அவர் அளித்த பேட்டி:தமிழகத்துக்காக என்ன தனித்த குணத்தை தி.மு.க., காட்டி விட்டது? மத்திய அரசோடு கூட்டணியில் இருந்துவிட்டு, மாநில தன்னாட்சி குறித்து பேசுவது சரியா? ஹிந்தியை திணித்தது காங்கிரஸ். இதை எதிர்த்து, நாடு முழுதும் தமிழன் தான் போராடினான். பின், அற்ப தேர்தல் அரசியல் வெற்றிக்காக, பதவிக்காக, அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது தி.மு.க., ஆனால், பா.ஜ., அரசு ஹிந்தியை திணிப்பது போல தி.மு.க., பேசி, நாடகமாடி வருகிறது. மாநில உரிமைகளை பறித்ததும் காங்கிரஸ், அவ்வாறு பறித்தபோது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது, தி.மு.க.,தான். அப்போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, தற்போது, மாநில சுயாட்சியை வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுகிறது தி.மு.க., இதெல்லாம் வெற்று வேலை. திராவிட மாடல் அரசு, தனித்த அடையாளத்துடன் செயல்படுவதாக பெருமை பேசுகின்றனர். லஞ்சம், ஊழலில் திளைத்திருப்பது தான் தனித்த அடையாளமா?தேர்தல் வரும்போது மட்டும், தமிழர், தமிழர் என, தனிப்பாசம் தி.மு.க.,வுக்கு வரும். இந்த வார்த்தைகளுக்கு மயங்கும் கூட்டம், போயே போச்சு. அறிவும், தெளிவும், அரசியல் புரிதலும் கொண்ட தமிழ் சமூகம் எழுந்துவிட்டது. இனி, தி.மு.க.,வின் வார்த்தை ஜாலம் மக்கள் மத்தியில் எடுபடாது. நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணை வைத்துக் கொள்ள, பல கட்சிகளும் போட்டி போடுகின்றன. ஆனால், வரும் தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவேன்; சின்னத்துக்காக காத்திருக்கிறேன். கூட்டணி ஆட்சி அமைக்க விரும்புவது, எதிர்தரப்பின் பலவீனத்தால் கிடையாது. என்னிடம் அ.தி.மு.க., தரப்பில் இருந்து, கூட்டணி குறித்து என்னவெல்லாம் பேசினரோ, அதையே தான் விஜயிடமும் பேசி இருப்பர். கூட்டணி தொடர்பாக, 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பேசுவதுபோல், புறணி பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Velan Iyengaar
ஏப் 20, 2025 02:04

ஒரு பெரிய கட்சி ... அதுவும் எம் ஜி ஆர் ஆரம்பித்த கட்சி ... இப்போ வர்றவன் போறவன் எல்லாம் சும்மா அசால்ட்டா ஏறி மிதித்து எக்காலம் இடுவதெல்லாம் காலத்தின் கோலம் A1 சரியான இரண்டாம் இடத்தை அடையாளம் காட்டாதன் நீட்சி இது .... புத்தி பலம் அதிகம் இருப்பதாக சொல்லிக்கொண்டு பெரிய ஆளுமை என்று ஒரு பிம்பத்தை கட்டமைத்தது எல்லாம் கேவலமாக முடிந்த தருணம் இது கேடுகெட்ட A2 நெலமை ....அப்புறம் இந்த கேடுகெட்ட A2 கைகாட்டிய ஊர்ந்தபாடி / தவழ்ந்தபாடி நெலமை .... A1 தேர்நடுத்த மிச்சர் நெலமை .....எதுவுமே சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை .... ஒரு புத்திபலம் அசிங்கமான ... கேவலமான ....மட்டமான .....தருணம் இது ....தமிழகத்தை இந்த சினிமா கவர்ச்சி இட்டுச்சென்ற அவலத்தை யாரவது சரி செய்வார்களா ?? இன்னொரு சினிமா கவர்ச்சி அந்த இடத்தை நிரப்பாமல் ...மதச்சார்பு இயக்கங்கள் அந்த இடத்தை நிரப்பாமல் ....திமுகவுக்கு சரியான தமிழக நலனை நேர்மையாக மதச்சார்பின்றி கட்டிக்காக்கும் போட்டி இயக்கம் தோன்றுமா ???


Velan Iyengaar
ஏப் 20, 2025 01:54

கடேசில பிரேமலதாவும் தவழ்ந்தபடியாரும் ஒன்னு என்று சொல்லிட்டானே ஆனா இதுல இவனுக்கும் கேவலம் .... தவழ்ந்தபாடிக்கும் கேவலம் .....ஊர்ந்தபாடி சரியா ?? இல்லை தவழ்ந்தப்பாடி சரியா ??? ஒட்டுமொத்துல உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மற்றும் தேர்தல் ட்ரஸ்ட் மெகா ஊழல் bj கட்சியோட இதுபோன்ற ஆட்டம் இவனுங்க சொல்லும் பெயர்களில் இருந்து தெளிவாகுது .... சொல்பவன் விஜயலட்சுமியை ஏமாற்றியவன் ...... இன்னொரு பெயரை கட்டிய மனைவியை பிள்ளைகளை விட்டு பிரிந்து சார்ட்டட் விமானத்தில் பலான பலான ஆளுடன் இன்னொரு பலான பலான கல்யாணத்துக்கு சென்றவன் இழுத்துவிட்டவன் ... எல்லாரும் பி டீம் தெளிவுற தெரிகிறதா ??? மக்களை ஏமாற்ற இந்த கேடுகெட்ட கும்பலின் கேடுகெட்ட செயல்களை தமிழர்கள் கூர்ந்து அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் ... சமயத்தில் தகுந்த பாடத்தை கற்பிக்க காத்திருக்கிறார்கள்


சமீபத்திய செய்தி