உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 40க்கு 40 வெற்றியால் தமிழகத்திற்கு என்ன லாபம்?: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

40க்கு 40 வெற்றியால் தமிழகத்திற்கு என்ன லாபம்?: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது 40க்கு 40 என்ற வெற்றியால் தமிழகத்திற்கு என்ன லாபம் என்று சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்விப் புலம்பல். இந்த வெற்றிதான் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதவாத அரசியலுக்குக் கடிவாளம் போட்டு, ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்து, நாட்டை வழிநடத்தும் வகையில் 40க்கு 40ஐ நமக்கு வழங்கியிருக்கிறார்கள் தமிழக மக்கள். மத்திய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது 40க்கு 40 என்ற வெற்றியால் தமிழகத்திற்கு என்ன லாபம் என்று சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்விப் புலம்பல்.

அடுத்தடுத்த நகர்வுகள்

பார்லிமென்ட் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும், தமிழகத்தின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம். பார்லிமென்ட் ஜனநாயகத்தின் வலிமையை உணர்ந்திருக்கும் இண்டியா கூட்டணியின் அடுத்தடுத்த நகர்வுகள்தான் இனி நாட்டின் வருங்காலத் திசை வழியைத் தீர்மானிக்கும்.

200 பிளஸ் தொகுதிகள்

தமிழகத்தில் நாம் பெற்றுள்ள வெற்றி, இண்டியா கூட்டணிக்கு மட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்திற்கும் நம்பிக்கையை அளித்திருக்கிறது. நாற்பதுக்கு நாற்பது என்று லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும். இவ்வாறு திமுக தொண்டர்களுக்கு எழுதிய அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 88 )

Venkatesh
ஜூன் 15, 2024 15:03

கேவலமான ஆட்சி நடத்துற திராவிட மாடலுக்கு கண்மூடித்தனமா சொம்பு தூக்கற உனக்கெல்லாம் அதைப்பற்றி பேசக்கூட தகுதியில்லை


Durai
ஜூன் 14, 2024 15:20

இவர்கள் இப்படி சொல்வதை பார்த்தால் இவர்களுக்கு அரசியல் அறிவு கொஞ்சம் குறைவு என்பதைத்தான் காண்பிக்கிறது. முதல்வர் சொல்வதுபோல் 40க்கு 40 எடுத்ததன் மூலம் இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்பது தான் முற்றிலும் உண்மை. ஒரு வேலை உங்கள் ஆசைப்படி அவர்கள் இந்த நாற்பதையும் பெற்றிருந்தால் தமிழ்நாடு பாழாப்போக என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் சுலபமாக செய்துவிடுவார்கள்.


Krishna Murthy A
ஜூன் 14, 2024 11:58

ஜனநாயகம் பற்றி திமுக வினர் எழுதி குடுத்ததை இவர் தொண்டர்களுக்கு பாடம் நடத்துகிறார் அவர்களும் 200 வாங்கி கொண்டு ஆம் என்பார்கள். திமுக தலைவராக ஒரே குடும்பம் எப்படி பட்டா போட்டது என்று கேட்க ஒரு தொண்டருக்கும் கேட்க இயலாது.


Swamimalai Siva
ஜூன் 14, 2024 08:31

"மதவாத அரசியலுக்குக் கடிவாளம் போட்டு" ?


Kumar Kumzi
ஜூன் 13, 2024 18:30

கஞ்சா சாராயம் போதைப்பொருள் அதிகமா விற்று கொள்ளை இலாபம் பார்க்கலாம் டெல்லியில் இருந்து பஜ்ஜி சமோசா ஆடர் பண்ணி இலவசமா சாப்பிடலாம்


Venkateswaran V
ஜூன் 13, 2024 12:12

வடை சுடலாம்


nb
ஜூன் 13, 2024 10:44

500 ₹ சிலிண்டர், 75 ₹ பெட்ரோல் எப்ப குடுப்பாங்க..2021ல் சொன்ன 100 ₹ சிலிண்டர் மானியம் எப்ப குடுப்பாங்க?


பேசும் தமிழன்
ஜூன் 13, 2024 08:05

0 சீட் வாங்கிய பிஜெபி கட்சியில் L முருகன் அமைச்சராகி விட்டார்.. ஆனால் 40 சீட் வாங்கிய நீங்கள் பாராளுமன்ற கேண்டீனில் போய் அமர்ந்து கொண்டு இட்லி சாம்பார் தான் சாப்பிட முடியும். அதனால் தமிழக மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா என்றால்.. இல்லை


VS BALASUBRAMANIAN
ஜூன் 13, 2024 06:54

40 MPs happily can take subsidized food in the canteen stay in govt bunglow with water in Delhi. But they cannot give 1 litre of piped வாட்டர் டு திராவிடன்


Indian
ஜூன் 15, 2024 14:04

பத்து வருட பி ஜெ பி ஆட்சியியாலே தமிழகத்துக்கு என்ன பயன் , அத சொல்லு முதல்ல ???


VS BALASUBRAMANIAN
ஜூன் 13, 2024 06:47

40 திராவிடர்கள் சேர்ந்து 1 லிட்டர் குடிநீர் மக்களுக்காக வழங்க முடியாது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை