உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடியுரிமை சட்டத்திற்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் என்ன பதில் கூற போகிறார்

குடியுரிமை சட்டத்திற்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் என்ன பதில் கூற போகிறார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக காங்., துணை தலைவர் ராம.சுகந்தன் அறிக்கை:மேடைக்கு மேடை சமூக நீதி, சமத்துவம் பற்றி முழங்கும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தற்போது மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு என்ன பதில் கூற போகிறார். குடியுரிமை சட்டத்தில், சமத்துவம் இருக்கிறதா அல்லது சமூக நீதி இருக்கிறதா என்பதை, தமிழக மக்களுக்கு விளக்க முன் வருவாரா? பா.ம.க., தலைவர் அன்புமணி ஏன் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார் என்பதையும் அவர் விளக்க வேண்டும்.அடடா... பா.ஜ., - பா.ம.க., கூட்டணி என்ற பானை பொங்கி வரும் நேரமா பார்த்து, பொசுக்குன்னு தண்ணீரை தெளிக்கிறாரே!தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: திருமாவளவன் குற்றம் சாட்டுவது தி.மு.க.,வை தான் என்பது கண்கூடாக தெரிகிறது. 'இரண்டு ஒன்றாகாமல் இருப்பதே வெற்றி' என, அவர் சொல்வதில் இருந்து, தங்கள் கட்சியை தி.மு.க., எந்த அளவில் வைத்திருக்கிறது என்பதை தெளிவாக விளக்கி உள்ளார். பட்டியலின சமுதாயத்திற்கு தி.மு.க., எதிரி என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்.திருமாவளவன் விளக்கத்துக்கு இவ்வளவு பொருளுரை தர்றாரே... அவரே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: தங்களை விட்டு எந்த கூட்டணி கட்சியும் வெளியேறி விடாமல், தி.மு.க., தலைமை தக்க வைத்திருக்கிறது. கூடுதலாக ராஜ்யசபா என்ற வருங்கால வடையை காட்டி, மக்கள் நீதி மய்யத்தையும், அது மடக்கி இருக்கிறது. ஆனால், சொந்த கட்சியையும் சுக்கு சுக்காக உடைத்துவிட்டு, கூட்டுக்கு ஆள் பிடிக்க, ஒவ்வொரு வீட்டுக்கும் அலைகிறது, பழனிசாமி தலைமை.அது சரி... பூனை இளைத்தால் எலிக்கு கொண்டாட்டம் என்ற கதையாகி விட்டது, அ.தி.மு.க.,வின் இன்றைய நிலை!தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பஷீர் அகமது அறிக்கை: குடியுரிமை திருத்த சட்டத்தின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படும் என, மத்திய அரசு கூறி வருகிறது. ஒவ்வொரு குடிமகனும், தான் இந்த நாட்டின் குடிமகன் தான் என்பதை தன் முன்னோர்களின் ஆவணங்கள் வாயிலாக நிரூபிக்க வேண்டும் என, மத்திய அரசு கூறுகிறது. சொந்தமாக நிலமோ, வீடோ இல்லாத கோடிக்கணக்கான இந்தியர்கள், இதனால் குடியுரிமையை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போல இருக்கு இவரது கருத்து!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sankar
மார் 15, 2024 17:14

படிக்கலாமே பேசும் புலிகள் திமுகவினர் மட்டும்தான் என்று எண்ணம் இருந்தது - அவர்களோடு சேர்ந்து காங்கிரஸ்காரனுக்கும் புத்தி இப்படி மழுங்கிவிட்டதே - இந்த சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் ?


veeramani
மார் 15, 2024 09:19

. மைய்ய அரசின் சி ஏ ஏ சட்டம் மிக தெளிவாக உள்ளது.


Svs Yaadum oore
மார் 15, 2024 08:23

மேடைக்கு மேடை சமூக நீதி, சமத்துவம் பற்றி முழங்கும் பா.ம.க., நிறுவனர் விளக்கம் என்ன என்று கேள்வி .....இந்த கேள்வி கேட்கும் காங்கிரஸ் காரன் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் CAA மற்றும் காஷ்மீர் Article 370 விலக்கி கொள்ளப்படும் என்று கூறிவிட்டு பிறகு தேர்தலில் நிற்கட்டுமே .....கேரளாக்காரன் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் காங்கிரஸ் இதில் மௌனம் என்று நேற்று கூட கேள்வி ....


Ramesh Sargam
மார் 15, 2024 07:10

அவர் என்ன கூறினாலும் அதில் ஏதாவது குறை கண்டுபிடிப்பீர்கள்.


கண்ணன்
மார் 15, 2024 04:57

ராம சுகந்தன் குடியுரிமைச் சட்டத்தை நன்கு படிக்க வேண்டும்- இச் சட்டத்திற்கும் சமூக சமத்துவத்திற்கும் என்ன சம்பந்தம்? பாவம் அறியாப்பிள்ளை


Arachi
மார் 15, 2024 03:16

நாராயணன் எங்கே திருமாவளவன் ஆற்றல் அறிவு எங்கே. நாட்டை அழிக்கும் சக்திகள் மறைந்து விடவேண்டும். அவதாரம் ஒன்று பிறந்து இருக்கிறது இவர்கள் கட்சியில். எந்த வகையிலும் சேர்க்க முடியாத காமடி பீஸ்.


Mohan
மார் 15, 2024 02:13

என்னமோ இன்னிக்கு புதுசா பாஜக தான் குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்தது போல பேசற அரசியல் வியாதிகளே இது குடியுரிமை சட்ட திருத்தம் தான், ஏற்கனவே தேவை கருதி பல கால கட்டங்களில் காங்கிரஸும் திருத்தங்கள் செய்த சட்டம் தான், புதுசா முஸ்லீம்களின் குடியுரிமைமை பறிக்கிற சட்டம் என்று டுபாக்கூர் விடாதீங்க. முஸ்லீம் மெஜாரிட்டி நாடுகள் இந்துக்கள் கிறித்துவர்கள் ஆகிய மைனாரிட்டி மக்களை வாழ விடாமல் தடுக்கின்றன. அவர்களுக்கு குடியுரிமை தரவே சட்ட திருத்தம் இது. மத்திய அரசின் தனிப் பொறுப்புகளில் ஒன்று. இதில் நுழையவோ தடுக்கறதுக்கோ மாநிலங்களுக்கு ஒரு இம்மி அதிகாரம் இல்லை. உலகத்துல உள்ள அனைத்து நாடுகளும் கடை பிடிக்கும் சட்ட வழிமுறை


மேலும் செய்திகள்











புதிய வீடியோ