உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்ததும் தி.மு.க., ஊழல்கள் வெளியே வரும்: சொல்கிறார் எச்.ராஜா

பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்ததும் தி.மு.க., ஊழல்கள் வெளியே வரும்: சொல்கிறார் எச்.ராஜா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: ''2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் போது தி.மு.க., ஊழல்கள் வெளியே கொண்டு வரப்படும். அரசுக்கு மது மூலம் கிடைக்கும் ரூ.48 ஆயிரம் கோடியை மத்திய அரசு தர வேண்டும் என கோருவதற்கும் மத்திய அரசின் மீது பழி போடுவதற்குமே மதுவிலக்கை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்ற போலி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்,'' என, திருநெல்வேலியில் பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பிரதமருக்கு இந்நிதியை தர கடிதம் அனுப்பியிருந்தார். மத்திய அமைச்சரவை இந்நிதியை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழக பா.ஜ., இதனை வரவேற்கிறது.தமிழகத்தில் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கதக்கது. அக்டோபர் 2ல் நாடக மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. நோ பால் போட்டு ரன் எடுப்பது போல் அந்த மாநாடு நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த மாநாட்டில் தி.மு.க., வி.சி.க.,வின் கூட்டணி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதுக்கடைகளை திறந்தது மாநில அரசு. மது கடைகள் தொடர்பான சட்டம் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மதுவிலக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் கிடையாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரசசனைகளுக்காக தமிழக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று அதற்கான தடைகளை நீக்கியது.மத்திய அரசு மதுவிலக்கு சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது போலி நாடகம். மது மூலமாக மாநில அரசுக்கு கிடக்கும் ரூ.48 ஆயிரம் கோடியை மத்திய அரசு தர வேண்டும் என கோரவும், மத்திய அரசின் மீது பழி போடவும் போலி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.தி.மு.க., தலைவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்ததாக கைது செய்யப்படுகின்றனர். தி.மு.க.,வில் போதை பொருள் அணி என்ற அணியை உருவாக்க வேண்டும். தமிழ் சமூகத்தை அழித்துக் காட்டுவோம் என்று திட்டமிட்டு செயல்படுத்தும் தீய சக்தியாக தி.மு.க., செயல்படுகிறது. 4 லட்சத்து 76 ஆயிரத்து 581 ஏக்கர் கோயில் நிலங்கள் இருப்பதாக கூறிவரும் அமைச்சர் சேகர்பாபு வெள்ள அறிக்கை மூலம் அதனை மக்களிடம் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

K.n. Dhasarathan
அக் 07, 2024 14:32

எச். ராஜா , ஏன் இப்போதே வழக்கு போடா வேண்டியதுதானே ? நல்ல நாள் பார்க்கணுமா ?மத்தியில் நீங்கள்தானே ஆட்சி ? அல்லது சந்தேகமா ? சும்மா சாலா சலப்பு காட்டாமல் காலத்தில் இறங்கணும் ராஜா, இல்லையெனில் சொந்த தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.


vadivelu
அக் 12, 2024 10:43

இப்போது றால், ஆட்சியில் இருப்பவர்கள் எல்லா விதத்திலும் சாட்சிகளை அழிப்பார்கள்.


saravanan
அக் 06, 2024 21:26

எச் ராஜா அவர்கள் சொல்வது சரிதானே. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்றெல்லாம் State Autonomy பற்றி தீர்மானம் போட்டவர்கள் எல்லாம் இணைந்து இப்போது மத்திய பாஜக அரசு தான் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறுவது மிகப்பெரிய வேடிக்கை.


அப்பாவி
அக் 06, 2024 01:50

கவலையே வாணாம். 2075 ல உங்க ஆட்சிதான்.


vadivelu
அக் 12, 2024 10:44

அடப்பாவமே அப்பவும் எடப்பாடி க்கோ, காங்கிரஸுக்கோ வாய்ப்பே இல்லையா.


Ramamurthy N
அக் 05, 2024 18:25

யாரப்பா அங்கே? ஏற்கனவே போடப்பட்ட கேசுகளுக்கே தீர்ப்பு வரவில்லை, சென்ற ஆட்சியில் அதாவது உங்கள் ஆதரவுடன் நடைபெற்ற ஆட்சியின் ஊழலுக்கே இன்னும் ஒரு ஆகஷனும் இல்லை. மேலும் ஒருவரும் உங்கள் கட்சிக்கு ஆதரவில்லை? இதில் எங்கே கூட்டணி ஆட்சி அமைப்பது, நீங்கள் ஊழலை வெளிப்படுத்துவது?


R.P.Anand
அக் 05, 2024 16:56

அண்ணா அந்த 500 நோட்ட தடை பண்ணிட்டு அப்புறம் எலக்சன் வை இங்க பல கதை முடிவுக்கு வரும்.


vadivelu
அக் 12, 2024 10:45

மொத்தத்தில் நோட்டுக்களையே தடை செய்யணும், எல்லாம் டிஜிட்டல் என்றால் ஆதாரத்தோடு மாட்டுவார்கள்


venugopal s
அக் 05, 2024 16:40

அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பா கூட ஆகி விடலாம், ஆனால் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது!


Chans
அக் 05, 2024 16:38

Someone is convicted holding public office. What a system in India. Ponmudi should be a minister but Indian constitution allows it. One nation one election. Why not one person can only contest in one place? A person elected resigns should not be eligible for public post for next 10 years in lok saba or rajya saba or a mla


சோழநாடன்
அக் 05, 2024 13:22

அப்ப...திமுகவின் ஊழல்கள் வெளியே வராது என்று எச்.இராசா சொல்கிறார். இராசான்னா இராசாதான். நீங்கள் இன்னும் நல்ல மேலே வருவீங்க இராசா. கவலைப்படாதீங்க.....


MP.K
அக் 05, 2024 13:22

ராஜா அவர்கள் எத்தனை திருப்பதி லட்டுகள் சாப்பிட்டார் என்பதை முதலில் சொல்ல வேண்டும்


SEKAR
அக் 05, 2024 13:20

இது என்ன பிறவி என்றே தெரியவில்லை. செல்லும் இடமெல்லாம் செருப்படி வாங்கியே பழக்கப்பட்ட .. ச்ச


Bala
அக் 05, 2024 13:53

கொல்றாங்கோ கொல்றாங்கோ கொல்றாங்கோ ஞாபகம் இருக்கா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை