உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மன்னிப்பு போட்டோ ஷூட் எப்போது? முதல்வருக்கு பா.ஜ., பகிரங்க கேள்வி

மன்னிப்பு போட்டோ ஷூட் எப்போது? முதல்வருக்கு பா.ஜ., பகிரங்க கேள்வி

சென்னை: தமிழகத்தில், நான்காண்டு தி.மு.க., ஆட்சியில் காவல் நிலையங்களிலும், காவல் துறை பாதுகாப்பிலும் உயிரிழந்த, 23 பேரின் பெயர் மற்றும் ஊர் விபரங்களுடன் பட்டியலை வெளியிட்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் தாயிடம், பேசிய முதல்வர் ஸ்டாலின், 'ஸாரி மா' என்று சொல்லும், மிக நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட வீடியோவை பார்த்தேன். ஒரு அப்பாவி இளைஞரை துடிக்க, துடிக்க கொன்று விட்டு, ஒரே வரியில், அவரது தாயிடம் 'ஸாரி' என்று சொல்வது, எந்த வகையில் நியாயம், முதல்வரே? இதுபோன்ற, மரணங்கள் நிகழாமல் தடுப்பது தானே, காவல் துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு முதல்வரின் கடமை. சரி, ஒருவேளை மனம் உவந்து தான், முதல்வர் மன்னிப்பு கேட்கிறார் என்றால், ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலையங்களிலும், காவல் துறை பாதுகாப்பில் இருந்தபோதும், தமிழகம் முழுதும், சந்தேகத்திற்குரிய வகையில் இறந்துபோன 23 பேரின் குடும்பத்தினரிடமும் இப்படி மன்னிப்பு கேட்காதது ஏன்?https://x.com/dinamalarweb/status/1940588929474089417இந்த 23 பேரின் பெற்றோரிடமும், மனைவி, பிள்ளைகளிடமும் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும், 'போட்டோ - வீடியோ ஷூட்' எப்போது நடக்கும்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Priyan Vadanad
ஜூலை 03, 2025 04:32

நம் பிரதமரிடம் கிளாஸ் எடுத்துக்கொள்ள முதல்வருக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கொடுங்கள் நயினாரே.


புதிய வீடியோ