உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிகளில் காலை உணவு பரிமாறும் பெண்களுக்கு சம்பளம் எப்போது?

பள்ளிகளில் காலை உணவு பரிமாறும் பெண்களுக்கு சம்பளம் எப்போது?

சென்னை:அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கான காலை உணவு பரிமாறுவோருக்கு சம்பளம் வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, தினமும் காலையில் இலவச உணவு வழங்கப்படுகிறது. இந்த காலை உணவு திட்டம் துவங்கியதில் இருந்து, மாணவர்களின் இடைநிற்றல், விடுப்பு குறைந்துள்ளதாகவும், மாணவர்களின் கவனிப்பு மற்றும் கற்றல் திறன் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆக., 26ம் தேதி முதல், நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், காலை உணவு திட்டம் அமலுக்கு வந்தது. அதில், 100 குழந்தைகள் வரை உள்ள பள்ளிகளில், உணவு பரிமாற ஒருவர் என்ற அடிப்படையில், தற்காலிக பணியில் பெண்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள், உணவை பெற்று குழந்தைகளுக்கு பரிமாறுவது, உணவு பாத்திரங்களை கழுவி ஒப்படைப்பது என, காலை 7:30 முதல் 10:00 மணி வரை வேலை செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த பணியில் உள்ளோர் ஏழை பெண்கள் என்பதால், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சம்பளம் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை