உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ளத்தில் தப்பிய 93 முதலைகள் எங்கே? விவசாயிகள் கேள்வி

வெள்ளத்தில் தப்பிய 93 முதலைகள் எங்கே? விவசாயிகள் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சாத்தனுார் பண்ணையில் முதலைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கான காரணத்தை, வனத் துறை தெளிவுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே சாத்தனுார் அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. அணைக்கு அருகே வனத் துறை பராமரிப்பில் முதலை பண்ணை உள்ளது. கடந்த 1977ம் ஆண்டு துவங்கப்பட்ட முதலை பண்ணையில், 500க்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டன. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும், போதுமான உணவுகள் வழங்காததாலும், முதலைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.கடந்தாண்டு நிலவரப்படி, 395 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. கடந்த 2ம் தேதி பெய்த கன மழையால், சாத்தனுார் அணையில் உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டது. இதனால், பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 150க்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறி விட்டதாக தகவல் வெளியானது. பண்ணையில் இருந்தும் முதலைகள் வெளியேறி உள்ளன. இத்தகவலை, வனத் துறையும், நீர்வளத் துறையும் மறைத்து வருகின்றன.இந்நிலையில், அணையில் 302 முதலைகள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதாக, வனத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. 93 முதலைகள் மாயமானது உறுதியாகி உள்ளது. இது விவசாயிகள், பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: வனத்துறை, முன்பு தெரிவித்து வந்த முதலைகள் எண்ணிக்கைக்கும், தற்போது தெரிவிக்கும் எண்ணிக்கைக்கும் முரண்பாடு உள்ளது. பெண்ணையாற்றில் ஏராளமான முதலைகள் வெளியேறி இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இதனால், ஆற்றையும், ஏரிகளையும் ஒட்டி இருப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பை, அரசு உறுதி செய்ய வேண்டும்.ஆற்றின் முகத்துவாரம் வரை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். பண்ணையில் 10க்கும் மேற்பட்ட, 'சிசிடிவி கேமரா'க்கள் உள்ளன. வெள்ள நேரத்தில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலைகள் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணத்தை தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Subash BV
டிச 26, 2024 13:39

SUITCASES POLITICS. THEY WOULD HAVE ILLEGALLY EXPORTED. FIND OUT PROPERLY.


Barakat Ali
டிச 25, 2024 12:39

எந்தக்கொம்பனும் குறை சொல்ல முடியாது என்று கொக்கரிப்பவர்களை விடவா அவை ஆபத்தானவை ???? நான் நம்பமாட்டேன் ......


SRITHAR MADHAVAN
டிச 25, 2024 10:33

தப்பி ஓடிய முதலைகளை கண்டுபிடிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இரட்டை அர்த்தத்தில் புரிந்து கொள்ளக் கூடாது


SRITHAR MADHAVAN
டிச 25, 2024 10:29

எந்த பண முதலை முதலை சூப்பை கேட்டது. அதனால்தான் அனைத்து உண்மையான முதலைகளும் தப்பின


Admission Incharge Sir
டிச 25, 2024 11:25

உண்மையான முதலைகளுக்கு உணவே கிடையாது, ஆனால் பணமுதலைகளுக்கு பைனாப்பிள் கேசரி


SRITHAR MADHAVAN
டிச 25, 2024 10:26

எல்லா பண முதலைகளுக்கும் பயந்து, உண்மையான முதலைகள் தப்பியதாகத் தெரிகிறது.


ghee
டிச 25, 2024 08:54

நம்ம வைகுண்டம் புடிச்சு தரவாரு


sankaranarayanan
டிச 25, 2024 08:10

93 முதலைகள் மாயமானது உறுதியாகி உள்ளது என்றால் அவைகளை அரசியல்வாதிகளின் வீட்டிலோ அல்லது கட்சி தலைவர்களின் வீட்டிலோதான் இருக்கும் அவைகளை உங்களால் பிடிக்கவே முடியாது அவைகள் உங்களை பிடித்துவிடும்


Kasimani Baskaran
டிச 25, 2024 07:55

தோலை உரித்து ஏற்றுமதி செய்து விட்டு நாடகம் போடக்கூட வாய்ப்பு இருக்கிறது - ஏனென்றால் 57 முதலைகள் கணக்கில் வரவில்லை. 1+ கோடி என்றாலும் சிறப்பான திட்டமிடுதல் என்றுதான் சொல்ல வேண்டும்.


SRITHAR MADHAVAN
டிச 25, 2024 10:59

எந்த அரசியல்வாதியின் வீடு அணைக்கு அருகில் உள்ளது


Barakat Ali
டிச 25, 2024 14:04

எந்த அரசியல்வாதியின் வீடு அணைக்கு அருகில் உள்ளது. திருடனுக்கு திருட்டுப்பொருள் வீட்டின் அருகில் இருக்க வேண்டியது அவசியமா என்ன ????


Rpalni
டிச 25, 2024 07:40

த்ரவிஷ குடும்ப பண்ணைகளில் புகாமல் இருந்தா சரி. ஒருவேளை அவற்றை வித்துட்டு கதையளக்கிரான்களோ?


Palanisamy Sekar
டிச 25, 2024 07:17

இன்னும் நீங்க திமுக மீது அதே சந்தேகத்தோடுதானே பார்க்கின்ரீர்கள் என்ன இது தலீவரு கருணா அவர்கள் முதல விட்ட கதைபோல இருக்குன்னு? சத்தியமா இல்லைங்க.. இனிமேல்தான் முதலைகள் தேடுவதற்கு ஆன செலவு என்று பல லட்சங்களை எழுதப்போறோம். அதுக்குள்ள சகட்டுமேனிக்கு சொல்லாதீங்க. 93 ன்னு நீங்க சொல்றீங்க.. எங்க கணக்குப்படி 143 ன்னு எழுதி அவ்வளவு முதலைகளும் விடுமுறைக்கு சென்றதாக சொல்லிடுவோமே. திமுக என்றால் கொக்கா முதலையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை