உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியில் பணம் எங்கே செல்கிறது: இ.பி.எஸ்., கேள்வி

தி.மு.க., ஆட்சியில் பணம் எங்கே செல்கிறது: இ.பி.எஸ்., கேள்வி

சேலம்: '' தி.மு.க., ஆட்சியில் வரும் வருமானம் எங்கே செல்கிறது,'' என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.சேலத்தில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: எதிர்க்கட்சியாக தி.மு.க., இருந்த போது, அ.தி.மு.க., அரசு அதிக கடன் வாங்கி தமிழக மக்களை கடனாளியாக மாற்றிவிட்டது எனக்குற்றம் சாட்டியது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் அவர்கள் ரூ.3.53 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்கி இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழகம் என்ற சாதனையை ஸ்டாலின் அரசு படைத்துள்ளது. இவர்களது ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. கடன் வாங்குவதில் மட்டும் சாதனை படைத்து உள்ளனர். இவர்கள் ஆட்சி முடியும் போது தமிழகத்தின் கடன் சுமையை ரூ.5 லட்சம் கோடியாக ஏற்றிவிடுவார்கள்.அ.தி.மு.க., ஆட்சியை விட தற்போதைய ஆட்சியில் பெட்ரோல், மதுபானம் விற்பனை மூலமும், சுங்கவரி, வாகன விற்பனை, ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய அரசின் நிதிப் பகிர்வு மூலமும் அதிக வருமானம் வந்துள்ளது. ரூ.1,10,894 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மூலதன செலவும் அதிகம் ஆகவில்லை. புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், 3.53 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். மூலதன செலவும் இல்லை, புதிய திட்டங்களும் வரவில்லை. அப்படியானால் அந்த பணம் எல்லாம் எங்கே போனது?நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் கடன் வாங்கியதாக தி.மு.க., அரசு சொல்கிறது. நாங்களும் அப்படித்தான் கடன் வாங்கினோம். என்னை அமைதிப்படை அமாவாசை என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். அது, அவருக்கு பொருத்தமான பெயர். அவருக்கான பெயரை அவரே தேடிக் கொண்டார். ஐந்து கட்சி மாறியவர், தற்போது தி.மு.க.,வில் உள்ளார். அடுத்து எந்தக் கட்சிக்கு செல்வார் என தெரியவில்லை. ஐந்தாண்டுகளில் இரண்டு சின்னங்களில் நின்றவர். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் சட்டசபையில் கருணாநிதியையும், தி.மு.க., நிர்வாகிகளையும் விமர்சித்து பேசியது அவைக்குறிப்பில் உள்ளது. சேகர்பாபு விமர்சித்து பேசியதும் உள்ளது. இவர்கள் அரசியல் வியாபாரிகள். இவர்கள் எங்களை பேசுவதற்கு எந்த உரிமையும், அருகதையும் கிடையாது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Anantharaman
ஜன 22, 2025 10:12

இது ஒரு கேள்வியா? எல்லாம் மூட்டை மூட்டையாக அமைச்சர்கள், சட்டசபை ஆளும் கட்சியினர் வீட்டிலும், அலுவலகத்திலும் கிடைக்கின்றனவே!


Ramesh Sargam
ஜன 21, 2025 21:43

“நதி எங்கே போகிறது?” “கடலைத் தேடி”. அதுபோல திமுக ஆட்சியில் பணம் எங்கே போகிறது. கள்வர்களை தேடி. “நினைவெங்கே போகிறது?" "உறவைத் தேடி”. அதுபோல நிதி எங்கே போகிறது? சிலை வைக்கவும், கார் ரேஸ் விடவும்.


Murugesan
ஜன 21, 2025 21:21

திராவிட அயோக்கியனுங்க கோடி கோடியாக ஊழல் செய்து ஏழை மக்களுக்கான, வாழ்வாதாரத்தை அழித்து வாழுகின்ற ஈனத்தனமான வாழ்க்கை


V வைகுண்டேஸ்வரன்
ஜன 21, 2025 20:51

இவர் முதல்வரா இருந்த நாலு வருஷத்தில் இவர் பண்ணின நாலு நல்ல திட்டங்கள் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்?? கூவத்துரில் கும்மாளம், தூத்துக்குடி யில் 13 பேரை சுட்டுக் கொன்றது சாத்தான்குளத்தில் 2 பேரைக் கொன்றது, பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள். இவை தான்.


veera
ஜன 21, 2025 21:57

உன்னை கேட்டா அவனை கை காமி....இது எல்லாம் ஒரு பிழைப்பா வைகுண்டம்


ramesh
ஜன 21, 2025 20:40

தங்கள் ஆட்சியில் எங்கே பணம் போனதோ அதே போல தான் இருக்கும்


Barakat Ali
ஜன 21, 2025 20:20

திருட்டுக் கழகங்கள் ........


mindum vasantham
ஜன 21, 2025 19:54

ஸ்டாலின் தலைமை வகிக்கக்கும் home ministry il section officer ellam fraudu pala tholil seithu கடமைக்குன்னு அரசு அலுவலகம் வருகிறார்கள்.


Ramesh Sargam
ஜன 21, 2025 19:49

இது என்ன கேள்வி. கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலை வைக்க செல்கிறது. மகனின் கார் ரேஸ் ஆசையை பூர்த்தி செய்ய செல்கிறது. அமைச்சர்களின் பெரிய வீட்டு ஆசையை, சின்ன வீட்டின் ஆசையை பூர்த்தி செய்ய செல்கிறது. இப்படி பலவித நாட்டு நடப்புகளுக்கு செல்கிறது. இது தெரியாம...


vijayaraghavan srinivasan
ஜன 21, 2025 19:24

உங்க ஆட்சில எங்க போச்சோ அங்கதான் இப்போவும் போகுது


T.sthivinayagam
ஜன 21, 2025 19:10

மத்திய நிதியமைச்சகம் முலமாக ஜிஸ்டி என்ற பெயரில் மற்ற மாநிலங்களுக்கு பணம் செல்வதை பற்றி உங்கள் நட்பு கட்சி சொல்லவில்லையா என மக்கள் கேட்கிறார்கள்


ராம் சென்னை
ஜன 21, 2025 19:36

ஜி எஸ் டி வரி தமிழகத்திலிருந்து மற்ற மாநிலத்துக்கு போனாலும் அது இந்தியா குள்ள தான் இருக்கு. ஆனா திமுக அரசு கிட்ட காசு போச்சுன்னா அவங்க குடும்பத்துக்கு மட்டும் தான் போகும் மக்களுக்கு கொடுக்கவே மாட்டாங்க.


veera
ஜன 21, 2025 22:00

ஏல சிவனையகம் , நீ எப்போ சொந்தமா கேட்ப...எப்பா பாத்தாலும் மக்கள் மேல பழியே போடுவியா கொத்தடிமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை