உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சினிமா ரிவ்யூ எழுதிய முதல்வர் எங்கே இருக்கிறார்: இ.பி.எஸ்., கேள்வி

சினிமா ரிவ்யூ எழுதிய முதல்வர் எங்கே இருக்கிறார்: இ.பி.எஸ்., கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது' என சினிமா'ரிவ்யூ' எழுதிய தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, போலீசார் அவரிடம் விசாரணை செய்ததாகவும், போலீசாரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.'ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது' என சினிமா'ரிவ்யூ' எழுதிய தி.மு.க., அரசின் முதல்வர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார்? விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டசபையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா? தவறு செய்ததாக போலீசார் கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக போலீசார் எடுத்துக்கொள்ள கூடாது.தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத முதல்வருக்கு எனது கடும் கண்டனம். முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க இந்த தி.மு.க., ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sekar ng
ஜூன் 30, 2025 09:31

ஸ்டாலின் திமுகவினருக்காக காவல்துறை செயல்பட கட்டளை. நீதிமன்றம் தேவை illa


Kulandai kannan
ஜூன் 30, 2025 08:26

தலைப்பை மட்டுமே படித்துவிட்டு 200 ரூபாய் ஊபிஸ் கருத்துப் போடுவது தெரிகிறது.


திகழ்ஓவியன்
ஜூன் 29, 2025 22:04

சாரி ரொம்ப கெட்டு விட்டது , வெளியே வர முடியவில்லை , சரி அப்போ நீர் உன் குடும்பம் சுகமாக தானே இருக்கிறீர்கள் அப்புறம் என்ன


திகழ்ஓவியன்
ஜூன் 29, 2025 21:31

அய்யா உங்களை நினைத்தால் பரிதாபமா இருக்கு , ADMK தலைமையில் கூட்டணி ஆனால் உங்க பேர் சொல்ல ஷா விரும்பவில்லை இதற்கா jamesbond மாதிரி 4 கார் மாறி ஓடினீங்க


m.arunachalam
ஜூன் 29, 2025 19:35

முதல்வர் சிவகங்கை மாவட்டத்தில் கோவில் நிர்வாகத்தில் /காவல்துறையில் வேலைசெய்கிறாரா ?. ஊடகங்களுக்கு தீனி போடும் வேலை செய்வது சரியா ?


என்னத்த சொல்ல
ஜூன் 29, 2025 19:22

தலைவா, சாத்தான்குளம் காவல் கொலையை மறந்து விட்டீர்களே.


முருகன்
ஜூன் 29, 2025 16:51

இதை சொல்வது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை டிவியை பார்த்து தெரிந்து கொண்ட முன்னாள் முதல்வர் உங்களை பற்றி தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள்


Padmasridharan
ஜூன் 29, 2025 16:12

"தவறு செய்ததாக போலீசார் கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக போலீசார் எடுத்துக்கொள்ள கூடாது" இதை மக்களுக்கு சரியாக அவ்வொப்பொழுது தெரிவித்து இருந்தால் கடற்கரை போன்ற பொது இடங்களில் மாமூல் கேட்டு வாங்கும் எத்தனையோ காவலர்கள், இவர்களில் காமத்தொல்லைகள் தருபவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் நிற்க வைக்கலாம். ஆனால் கரை படிந்த காக்கிச்சட்டைகள் நிறைய குற்றங்களை மற்றவர்களுக்கு தெரியாமல் செய்துக்கொண்டுதான் உள்ளனர் சாமி. இதற்க்கு கட்சி என்ன செய்யும். அது அவங்கவங்க வீட்டு வம்சத்துக்கு பாவ மூட்டைகள்தான். .


Anantharaman Srinivasan
ஜூன் 29, 2025 15:25

இபிஎஸ் அவர்களே தாங்கள் முதல்ராகயிருந்த போது கொடநாடு எஸ்டேட்டில் விவகாரத்தில் அடுத்தடுத்து நடந்த கொலைகள்..? அன்று காவல் துறை யாரிடமிருந்தது..??


Yes your honor
ஜூன் 29, 2025 15:52

இது போன்ற செயல்களில் அதிமுக சிறுதுளி என்றால் திமுக பெருவெள்ளம்.


Vasu
ஜூன் 29, 2025 17:19

Avar sariyillanu ungaluku vote pottom


Barakat Ali
ஜூன் 29, 2025 18:47

அதிமுக ஆட்சியில் தவறு நடந்திருப்பதால் அவர்கள் விமர்சனமே செய்யக்கூடாதா ???? அப்படிப்பார்த்தால் அப்போது மதுவிலக்கு கோரிய திமுக, தனது ஆட்சியில் ஏன் மதுவிலக்குக் கொண்டுவரவில்லை ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை