மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணி தொகுதி பங்கீடு ஆலோசனை துவக்கம்
01-Mar-2026
சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ.,வுக்கு, 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், 80 சதவீதம் மேல் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள தொகுதிகளை பெற, பா.ஜ., முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பீயூஷ் கோயல், சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் நேற்றிரவு, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய அமைச்சர் முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது, 8,931 நாட்களை கடந்து, நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக நீண்ட காலம் சேவையாற்றியவர் என்ற சாதனையை, பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளதை பாராட்டி, 'கேக்' வெட்டி கொண்டாடினர்.
01-Mar-2026