உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அத்துமீறி நுழைந்த இருவர் யார்?

அத்துமீறி நுழைந்த இருவர் யார்?

துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன், கோவை டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்தில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு புறப்படுவதாக பயண திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. இதற்காக அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. துணை ஜனாதிபதி வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், நவாப் ஹக்கீம் சாலையில் இருந்து, ஸ்கூட்டரில் இருவர், ஹெல்மெட் அணியாமல், ஒரு வழிப்பாதையில் அத்துமீறி அதிவேகமாக வந்தனர். போலீசார் தடுக்க முயன்றும் தப்பினர். வின்சென்ட் ரோடு சந்திப்பு அருகே சறுக்கி விழுந்தனர். லேப் - டாப் , ஹெல்மெட், நம்பர் பிளேட் போன்றவை கீழே விழுந்தன. விழுந்த வேகத்தில் எழுந்த அவ்விருவரும், மீண்டும் ஸ்கூட்டரில் திருச்சி ரோட்டில் சென்று தப்பினர். கீழே கிடந்த லேப் டாப் - ஐ போலீசார் கைப்பற்றினர். பாதுகாப்பு குறைபாட்டை கண்டித்து, பா.ஜ.,வினர் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்பையும் மீறி வந்த, இரு இளைஞர்களின் பின்னணியை தமிழக போலீசாரும், மத்திய உளவு பிரிவு போலீசாரும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி