உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆன்லைனில் யார் பதிவு செய்யலாம் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

 ஆன்லைனில் யார் பதிவு செய்யலாம் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, கணக்கீட்டு படிவங்களை, 'ஆன்லைனில்' பூர்த்தி செய்ய, வாக்காளரின் பெயர், வாக்காளர் பட்டியலிலும், ஆதார் அட்டையிலும் ஒன்றாக இருக்க வேண்டும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை

தமிழகத்தில், 2002, 2005ம் ஆண்டு நடந்த, தீவிர திருத்தப் பணி வாக்காளர் பட்டியலில், வாக்காளர் தங்கள் விபரங்களை, https://www.voters.eci.gov.inஇணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதன் முகப்பு பக்கத்தில், 'Search your name in the last sir' என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். அதில் தமிழகம் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில், 'பெயர் மூலம் தேடுதல்' அல்லது, வாக்காளர் அடையாள அட்டை எண் வழியே தேடுதல் என்பதன் அடிப்படையில், தங்கள் விபரங்களை மீட்டெடுக்கலாம். பெயர் பயன்படுத்தி தேடும்போது, மாவட்டம், சட்டசபை தொகுதி, வாக்காளர் பெயர், தந்தை, தாய், கணவர், சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரி பார்ப்பு குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து, வாக்காளர் தங்கள் விபரங்களைப் பெறலாம். 'ஆன்லைன்' வழியே பூர்த்தி வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை, ஆன்லைன் வழியே நிரப்ப, தேர்தல் கமிஷன் வசதி ஏற்படுத்தி தந்துள்ளது. வாக்காளர் தங்கள் மொபைல் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி, ஆன்லைன் வழியே உள்நுழைய வேண்டும். அப்போது, மொபைல் எண்ணுக்கு வரும், ஒரு முறை ஓ.டி.பி., எண்ணை உள்ளிட வேண்டும். உள்நுழைந்த பின், அந்த பக்கத்தில் காட்டப்படும், ' Fill Enumeration Form' என்ற இணைப்பை தேர்வு செய்யலாம். இந்த வசதியை, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். வெற்றிகரமாக உள் நுழைந்த பின், அதில் கோரப்படும் விபரங்களை நிரப்ப வேண்டும். சரியான விபரங்களை சமர்ப்பித்த பின், இணைய பக்கம் 'e-sign' பக்கத்திற்கு மாறும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட, மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி., எண்ணை பதிவு செய்ததும், படிவம் வெற்றிகரமக பதிவேற்றப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Gnana Subramani
நவ 14, 2025 16:35

பிஜேபி அடையாள அட்டை மட்டும் போதும் என்று கொண்டு வந்தால் அனைத்து தொல்லையும் தீர்ந்து விடும்


kalyanasundaram
நவ 14, 2025 15:01

our names in aadhaar do not appear in the way we normally write. We first write our initials and then our name. But in aadhaar, name comes first and father name comes after that. In PAN initials are not accepted. While this is so, the names in electoral rolls will never be in this format. So none can file this SIR form online.


என்னத்த சொல்ல
நவ 14, 2025 12:44

ஏகப்பட்ட குழப்பம் இருக்குனு CM பேசுகிறார். போராடிவருகிறார். அவருடைய கருத்துக்கு ADMK, பிஜேபி, காழ்புணர்ச்சியால் ஆதரிக்கவில்லை. இப்போ சங்கிகள் அதே கருத்தை இங்கே சொல்லும்போது சிரிப்புதான் வருது.


அப்பாவி
நவ 14, 2025 11:39

சாஹு மாத்தலாயி போயிட்டாரா...


Barathan
நவ 14, 2025 08:41

You cannot visit www.voters.eci.gov.in right now because the website uses HSTS. Network errors and attacks are usually temporary, so this page will probably work later.


சாமானியன்
நவ 14, 2025 08:01

மேடம், ஆதாரிலேயே பெயர் குழப்பம். first name, middle name, last name தமிழர்கட்கு புரியவில்லை. வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள், வெளிமாநில தமிழர்கள் எப்படி பிரச்னையில்லாமல் பூர்த்தி செய்ய முடியும் ? நீங்களுமா சேகர்பாபு மாதிரி அடித்து விடுகிற கேஸா ?


Field Marshal
நவ 14, 2025 10:18

first name, middle name, last name பாஸ்போர்ட் அமெரிக்க விசாவில் இருக்கிறது .. FNU என்று நிரப்ப வேண்டும் ..First Name unknown என்று நிரப்புவது வழக்கம்


Kulandai kannan
நவ 14, 2025 07:16

No clarity. Lot of confusion. For example, Perur constituency, which was in existence earlier is not shown in the list of constituencies. This official should be d with someone more efficient


rama adhavan
நவ 14, 2025 07:07

தற்போது வெளிநாட்டில் இருக்கும் டிசம்பர் 4க்குப் பின் தமிழ்நாடு திரும்பும் வாக்காளருக்கு என்ன அறிவுரை? வெளிநாட்டில் இந்திய மொபைலில் ஓ டீ பி வராதே? இ சி ஐ வலைத்தளமும் திறக்க இயலவில்லையே? என்ன செய்வது


Iyer
நவ 14, 2025 06:55

1. வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு எப்படி பதிவு செய்யணும். 2. இதுவரை வோட்டர்லிஸ்ட்டிலேயே பதிவு செய்யாதவர்கள் எப்படி பதிவு seyyanum.?


jaya
நவ 14, 2025 14:00

NRI s dont have voting rights. No party is interested in arranging voting for them, BJP initially said they would do it , after that no progress.


பாபு
நவ 14, 2025 06:41

ஏற்கனவே படிவம் சமர்ப்பித்தவர்கள் இனி இரண்டாவது முறையாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாமா? சமர்பித்த படிவத்தை கட்சிக்காரர்கள் எங்காவது எடுத்துக்கிட்டாங்கன்னா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை