உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்?: அண்ணாமலை சந்தேகம்

யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்?: அண்ணாமலை சந்தேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்?' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை காங்., ஆட்சியில் தாக்கலான பட்ஜெட்டில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும் மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுவாரா?.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8g71573r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஏழை, எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும்படி, வெகு சிறப்பானதாக அமைந்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழகம் என்ற பெயர் இடம் பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது. நிதிநிலை அறிக்கை உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார். திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?. திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என்பது, முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியுமா?. மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி, நலத்திட்டங்களைப் பெறுவதை விட்டுவிட்டு, கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதல்வர்? முதல்வர் ஸ்டாலின் ஒரு நாள் விளம்பரத்துக்காக இது போன்ற வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

ஆரூர் ரங்
ஜூலை 24, 2024 16:44

பூர்வீக மாநிலத்துக்கு சிறப்பு ஒதுக்கீடு என்பதைக் கேட்டு உள்ளூர மகிழ்ச்சியில் உள்ளார். எதிர்ப்பு எல்லாம் பிழைப்பு அரசியலுக்கு மட்டுமே.


venugopal s
ஜூலை 24, 2024 16:03

மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டில் நீங்கள் தமிழக மக்களை ஏமாற்றியதை விட அதிகம் ஒன்றுமில்லை!


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 24, 2024 21:57

அட கொத்தடிமை, கொடுத்த காசு எல்லாம் திருடி கோடம்பாக்கத்தில் பத்து தலைமுறைக்கு செய்து வைத்தது போதாதா? தமிழர்களை ஏமாற்றியது உன்னோட திருட்டு கூட்டம் தான்.


Suppan
ஜூலை 24, 2024 15:24

"வெள்ளைக்காரன் ஆட்சி பரவாயிலயே".." இதுதான் திராவிட மாடல். ஹா ஹா. வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தவர்கள் இப்படித்தான். தமிழகத்தில் ஏழ்மை மிகவும் குறைவு என்று கூறும் இந்த ஆட்சிதான் நூறுநாள் திட்டத்தில் அதிக நிதி பெறும் மாநிலம். வேறெதற்கு? வேலையே செய்யாமல் பணம் பெற்று கொள்ளையடிக்கத்தான்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 24, 2024 14:26

விடுங்க அண்ணாமலை இதே ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமாக தினம் தினம் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தவர் செய்த கட்சி தானே. வெளி நடப்பு என்பது திமுக எப்போதும் செய்வது தான்.


VARUN
ஜூலை 24, 2024 14:23

இவரை போன்ற ஆட்களை தமிழ்நாட்டில் இருந்த்து வெளியேற்றவேண்டும் .


Barakat Ali
ஜூலை 24, 2024 14:15

என்னது ? யாரை ஏமாத்த பார்க்குரேனா ? ஏமாத்துறதுதான் முக்கியம் .... குறிப்பிட்ட சிலபேரை மட்டும் ஏமாத்துறதில்ல நாங்க .... விடியல்ங்குறது ஒட்டுமொத்த தமிழினத்தும்தான் .... எங்க பரம்பரை தெரியாம பேசறார் ....


Mario
ஜூலை 24, 2024 14:00

தவளை


Rengaraj
ஜூலை 24, 2024 13:49

அண்ணாமலையை கேள்வி கேட்கும் ஊடகங்கள் முதல்வரை கேட்பதில்லை. ஏன் ? ஊடகங்கள் முதற்கொண்டு பட்ஜெட்டில் உண்மை தன்மை என்ன என்பதை ஆராயாமல் இருக்கின்றாரோ என்று சந்தேகம் தோன்றுகிறது. இவர்கள் என்ன கேட்டார்கள், என்ன கிடைக்கவில்லை, எந்த திட்டங்கள் பாதியில் இருக்கின்றன, என்னென்ன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை இப்படி புள்ளி விவரங்களோடு என்றைக்கு பேச கற்றுக்கொள்ளப் போகின்றனரோ இந்த திராவிட மேதாவிகள். ? நாட்டின் உள்கட்டமைப்புக்கு 10லட்சம் கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். ஒரு நாட்டின் மொத்த பட்ஜெட்டில் குறைந்த பட்சம் பத்து விழுக்காடு நமது மாநிலத்துக்கு எப்போதுமே கிடைக்கும். அப்படி பார்த்தால் இந்த பட்ஜெட்டில் தொண்ணூறாயிரம் கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும். இதை திராவிட மேதாவிகள் சொல்ல மாட்டார்கள்.


Suppan
ஜூலை 24, 2024 16:24

ஊடக நண்பர்கள் பிழைத்துப் போகட்டும். இந்த மாதிரியெல்லாம் கேட்டால் அங்கேயே தர்ம அடி விழும். வீட்டுக்கு ஆட்டோ வரும் . இதுதான் திராவிட மாடல்


Sriraman Ts
ஜூலை 24, 2024 13:42

பி ஜே பி தமிழக தலைவர் 2026 ல் வரவிருக்கும் அசெம்பிளி தேர்தலை கவனிக்கட்டும். தமிழ்நாட்டின் கீழ் கள பணியை தொடங்கட்டும் மும்முரமாக. தேர்தல் வெகுதொலைவில் இல்லை


Sridhar
ஜூலை 24, 2024 13:24

சும்மா பேந்தப்பேந்த அங்க போயி ஒக்காந்திருக்கறதுக்கு இங்க நாலு சினிமாவாச்சும் பாக்கலாம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை