உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வு ரத்துக்கு தடையாக இருப்பது யார்? விஜய்க்கு திருமா கேள்வி!

நீட் தேர்வு ரத்துக்கு தடையாக இருப்பது யார்? விஜய்க்கு திருமா கேள்வி!

சென்னை: நீட் தேர்வு ரத்துக்கு தடையாக இருப்பது மத்திய அரசு தான் என்பதை விஜய் உணர்ந்துள்ளரா?என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஆட்சியாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று விஜய் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. கல்வி தொடர்பான அதிகாரம் மத்திய, மாநில அரசுகளின் பொதுவான பட்டியலில் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு தாமாக முடிவுகளை எடுத்து மாநில அரசுகளை புறம் தள்ளி வருகிறது. நசுக்கி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=65019c4r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருந்தாலும் தேர்தல் நேரத்தில் நீட் தேர்வுகளை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை தி.மு.க., அளித்தது. ஒருமுறைக்கு, இரண்டு முறை சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பியும், மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. ஆகவே முட்டுக்கட்டையாக இருப்பது, எதிராக இருப்பது மத்திய அரசு என்பதை த.வெ.க., தலைவர் (விஜய்) அறிந்து இருக்கிறாரா ? என்று தெரியவில்லை.மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப வேண்டும் என்பது தான் முறை. அவர் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். தமிழக அரசை பொறுத்தவரை, தன்னுடைய கடமையை செய்து இருக்கிறது. மத்திய அரசு அதனை தவிர்க்கிறது. நீட் தேர்வு ரகசியம் தொடர்பாக விஜய் எழுப்பிய கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி விளக்கம் அளிப்பார். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Krishnamurthy Venkatesan
ஜன 11, 2025 23:46

மத்திய அரசு தயவு செய்து NEET எக்ஸாமை ரத்து செய்ய வேண்டாம் என இங்குள்ள சில கட்சிகள் request செய்கிறார்கள் போலும். அப்போதுதான் 2026இல் NEET எக்ஸாம் பாஸ் செய்யும் தந்திரம் எங்களுக்கு தெரியும் என சொல்லி ஓட்டு கேட்கலாம்.


Nellai Baskar
ஜன 11, 2025 23:32

அட அறிவு ஜீவி தலைவரே நீட் விலக்கு எதிர்ப்புக்கு மத்திய அரசு தான் காரணம் பின் என்னத்துக்கு தேர்தல் வாக்குறுதியில் நீட் விலக்கு பண்ணுவோம் என்று சொன்னீங்க அதைத்தான் விஜய் கேக்கிறாரு


R.MURALIKRISHNAN
ஜன 11, 2025 20:24

அப்போ அந்த ரகசியம் தெரியும் என்று ஒரு பொய்யன் சொன்னாரே, அதை நம்பி கூட்டணி வைத்தீர்களா திருமா அவர்களே, அப்படியே தூக்கி பிடித்து கேட்க வேண்டியது தானே.ஓ..... வாங்கிய பொட்டி உதைக்குதோ


V வைகுண்டேஸ்வரன்
ஜன 11, 2025 20:18

திருமா இனி என்ன பேசினாலும் சந்தேகம் தான் எழுகிறது. He lost his credibility by his association with aadhav arjun.


vadivelu
ஜன 11, 2025 19:35

தடையாக இருப்பது கோர்ட்டுக்கு போகாத அரசியல் கட்சிகள்


Amar Akbar Antony
ஜன 11, 2025 19:20

திருமா அவர்களே , நேற்று முளைத்த த வெ கா தைரியத்துடன் கேட்கிறார் கேள்வி அதற்கு மழுப்பல் பதில் ஏன் கொடுக்கிறீர் . சுய மரியாதை உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம் உப்பை தின்னும் மனிதனுக்கு சொரணை இருக்கும் வீழ்ந்து அடிமையென கிடக்கும் இதுவும் ஒரு பிழைப்பா


kalyanasundaram
ஜன 11, 2025 17:00

ABOLITION OF NEET EXAMS IS A DAY DREAM


M Ramachandran
ஜன 11, 2025 16:55

திருமா சும்மா ஜால்ரா தட்டாமல் செய்த சாபத்திற்கு முன்பு நடைய்ய முறை நீதிமன்றஙகள் பற்றி யோசிக்க வேண்டும். அதன் பின் நடக்க கூடியதா என்று சிந்தித்து மக்கள் முன்பு கூறா வேண்டும் உங்களுக்கு கூட யோசிக்க தெரியாதா? இப்போது சப்பை கட்டு காட்டாமல் அப்போது எடுத்து கூறியிருக்கலாமே? உஙகள் காட்சியய்ய்ய தோட்டரூவைத்த அண்ணாதுரையெ ரூபாய்க்கு 3 ன்று பேட்டியென்று பீத்தி கொண்டு மக்கலிய்ய ஏமாற்றி பதவிக்கு வந்தவுடன் ஒருபடி தான் கொடுக்க முடியும் என்று பல்டி அடித்தாரெ அந்த கள்ள பரம்பரை ரத்தம் தானெ ஓடுது. எவ்வளவு பொய்யுரைகள். அப்பன் மகன் அவர் மகன் எல்லாம் பொய்யர்கள் .


panneer selvam
ஜன 11, 2025 15:50

Thiruma ji , just rewind the last election speech of your master Stalin ji and his son Udaynidhi ji . They have proclaimed they know how to abolish NEET . But all knowledgeable persons said that is not possible due to guidance of Supreme Court . So Tamils are deceived by your paymaster . Hence you do not need to give different meaning for their proclamation .


கந்தன்
ஜன 11, 2025 15:46

குருமா பேச தகுதி இல்லாதவர்


புதிய வீடியோ