உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.ஜி.ஆர்., பங்களா யாருக்கு; திருச்சியில் தீராத தலைவலி

எம்.ஜி.ஆர்., பங்களா யாருக்கு; திருச்சியில் தீராத தலைவலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆர்., பங்களாவை, அவரது சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு பட்டா மாற்றம் செய்து வழங்க வேண்டும் என்று, ஓய்வு பெற்ற சர்வேயர் திருச்சி கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தார்.

உத்தரவு

திருச்சிக்கு வந்தால், தான் தங்குவதற்காக, 1984ல் உறையூர் பகுதியில் உள்ள, 80,000 சதுர அடியில் வீட்டுடன் கூடிய இடத்தை 4 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கினார். அதன்பின் எம்.ஜி.ஆர்., இறந்து விட்டார்.எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை என்பதால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகளாக, எம்.ஜி.ஆர்., அண்ணன் சக்கரபாணியின் மகள்கள், மகன்கள் என, 10 பேர் அங்கீகரிக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர்., பெயரில் உள்ள திருச்சி பங்களா, அவரது வாரிசுகளின் பெயருக்கு மாற்றப்பட்டு, வாரிசுகளில் ஒருவரான சந்திரன் பெயரில் வரிகள் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், அந்த நிலம், அ.தி.மு.க., பொதுச்செயலர் என்ற பெயரிலும், பின் கோவிந்தசாமி என்ற தனி நபர் பெயரிலும் மாற்றப்பட்டு, 2021ல், மீண்டும் அ.தி.மு.க., பொதுச்செயலர் என்று பட்டா மாற்றப்பட்டது. தற்போது, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த பங்களா, அ.தி.மு.க.,வின் சொத்தாக உள்ளது.

பெயர் மாற்றம்

இந்நிலையில், எம்.ஜி.ஆர்., வாரிசுகள் சார்பில், ஓய்வு பெற்ற சர்வேயர் சார்லஸ் என்பவர், அந்த பங்களாவை மீண்டும் எம்.ஜி.ஆரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கே வழங்கிட பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று, திருச்சி கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில், 'அது, எம்.ஜி.ஆர்., தன் பணத்தில் வாங்கியது. அது சட்டப்பூர்வமாக அவரது வாரிசுகளுக்கு அளிக்கப்பட்டது.'இடையில், பங்களாவை அ.தி.மு.க., பொதுச்செயலர், பின் கோவிந்தசாமி, மீண்டும் அ.தி.மு.க., பொதுச்செயலர் என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர். இவை, எந்த ஆவணங்கள் அடிப்படையில் செய்யப்பட்டது என தெரியவில்லை. 'எம்.ஜி.ஆர்., உயில் ஏதும் எழுதி வைக்காத நிலையில், அந்த சொத்தை கட்சிக்கோ, தனி நபருக்கோ எப்படி பட்டா போட்டு கொடுத்தனர் என்று தெரியவில்லை.'எனவே, அரசு ஆவணங்களை சரிபார்த்து, அந்த பங்களா மற்றும் இடத்தை, எம்.ஜி. ஆரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும். அதற்கு தேவையான ஆவணங்கள் உள்ளன' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ராமகிருஷ்ணன்
ஜூன் 12, 2025 03:27

பொறம்போக்கு நிலங்களை ஆட்டையை போடும் கழக களவாணிகள் MGR சொத்துக்களை விட மாட்டார்கள். சுருட்டி முழுங்கி விடுவார்கள்


SUBRAMANIAN P
ஜூன் 11, 2025 13:43

ரெண்டு பேருமே கூட்டுக்களவாணிகள் . இவங்களுக்கு ஓட்டு போடுபவர்கள் தனித்தனி களவாணிகள்.


Perumal Pillai
ஜூன் 11, 2025 12:32

தனி மனித ஒழுக்கம் முக்கியம் .அது சிலரிடம் கிடையாது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 11, 2025 11:41

எந்த ஆவணத்தின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்தது என்று தெரியவில்லை என்று ஒரு அரசு அதிகாரி அரசின் சார்பாக கூறி அரசாங்க கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அரசு ஆவணங்களை எப்படி பாதுகாக்கிறது எதன் அடிப்படையில் மக்களுக்கு சேவை செய்கிறது என்று பாருங்கள். இந்த இலட்சிணத்தில் தமிழகம் இந்தியாவின் என்ஜினாம். இந்தியாவின் லீடராம்.


ஆரூர் ரங்
ஜூன் 11, 2025 11:35

நாய் பெற்ற தெங்கப்பழம். ஏற்கனவே 500 கோடி மதிப்புள்ள சபையர் அரங்கமிருந்த காலியிடத்தை அதிமுக காலியாகவே வைத்தது. இதற்கும் அதே கதிதான்.


Anantharaman Srinivasan
ஜூன் 11, 2025 11:27

MGR அஅண்ணன் மகன் வாரிசுகளில் ஒருவரான சந்திரன் பெயரில் வரிகள் செலுத்த உத்தரவிடப்பட்ட பின் அதெப்படி அதிமுக சொத்தாக மாறியது.


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
ஜூன் 11, 2025 11:08

80000 சதுர அடியா?


Ganapathy
ஜூன் 11, 2025 10:46

இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பை கவனிக்க.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 11, 2025 10:42

நாலு வருஷமாவா இதை ஆட்டையப்போடாம வச்சிருந்தாங்க நம்பவே முடியலையே


karthik
ஜூன் 11, 2025 11:22

அதிமுக பொதுச்செயலாளர் பெயரில் பட்டா ஏற்கனவே ஆட்டையை போடப்பட்டுள்ளது...அதனால் இன்னொரு கூட்டம் விட்டு வைத்திருக்கிறது


ஆரூர் ரங்
ஜூன் 11, 2025 10:21

சொத்துக்களை சட்டபூர்வமாக நிர்வகித்த எம்ஜியாரின் வழக்கறிஞர் திரு NCR க்கு கட்டணம் அளிக்கப்படவில்லை என்று செய்திகள் வந்தன. அவரது குடும்பத்திற்கு முதலில் செட்டில் பண்ண வேண்டும்.


சமீபத்திய செய்தி