உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் ஊழல் விவகாரம் அடுத்து சிக்கப்போவது யார்?

டாஸ்மாக் ஊழல் விவகாரம் அடுத்து சிக்கப்போவது யார்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'டாஸ்மாக்' ஊழல் விவகாரம் தொடர்பாக, அதன் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்டோர் வீடுகளில், சோதனையை நிறைவு செய்துள்ள அமலாக்கத்துறை அதிகரிகள், அங்கு சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்து வருவதுடன், மேலும் ஒரு முக்கிய புள்ளிக்கும் குறி வைத்துஉள்ளனர்.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும், 1,000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, கடந்த இரு தினங்களாக, சென்னை மணப்பாக்கம் பகுதியில் உள்ள, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8i7cu6b4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:விசாகன் வீட்டருகே கிழித்து வீசப்பட்ட ஆவணம் ஒன்றில், 'அன்பு தம்பி' என, குறிப்பிட்டு டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடு குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த துறையின் முன்னாள் அமைச்சர், நிதி மற்றும் உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி தான், டெண்டர் செயல்முறை வெளியிடப்பட்டது. டாஸ்மாக் நிறுவனத்தை பொறுத்தவரை, பெரும்பாலும் தி.மு.க.,வினர் தான் பயனடைந்துள்ளனர். சில இடங்களில் கட்சிக்குள் பிரச்னைகள் எழுந்தன. சட்டவிரோத டாஸ்மாக் மதுபானக் கூடங்கள், அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தி வருகின்றன என்பது போன்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. யார் யாரிடம் எத்தகைய மது பானங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட குறிப்புகளும் கிடைத்துள்ளன.ஆவணத்தில் இருந்த உரையாடல்கள், சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி., நகரில் வசித்து வரும், தொழில் அதிபர் ரத்தீஷ் மற்றும் விசாகன் இடையே நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. டாஸ்மாக் மதுபானக் கூடம் டெண்டர் விவகாரத்தில் ரத்தீஷ் தலையீடு அதிகம் இருந்துள்ளது. இதனால், டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், அவருக்கு முக்கிய பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அவர், எம்.ஆர்.சி., நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை, 'டீலிங்' பேசும் இடமாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பி, ரத்தீஷிடம் விசாரிக்க உள்ளோம். அதேபோல, சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சினிமா பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதிலும், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றையும் ஆய்வு செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில், விரைவில் ஒரு முக்கிய புள்ளி சிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ashokan Pk
மே 19, 2025 13:13

இந்ததிருட்டுபசங்க, ஆட்சி இருக்கும் வரை யாரும் சிக்க போவதில்லை ஆட்சி மாற்றம் வரனும். தமிழகத்தில்


vadivelu
மே 19, 2025 07:13

யாரும் சிக்க போவதில்லை,


V S Narayanan
மே 19, 2025 07:44

Dirty politicians


Ethiraj
மே 19, 2025 07:07

Tax evasion ,selling product above MRP only corporates and petty traders do it. Here politicians with the help of public servants are doing it in govt dept Public lost huge money it will be recovered as additional tax


xyzabc
மே 19, 2025 04:28

யார் அந்த தம்பி ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 19, 2025 08:01

அந்த சார் தான் அந்த தம்பி


Kasimani Baskaran
மே 19, 2025 03:54

உள்ளத்துக்கு வெங்காயங்களை மாட்ட ஆரபித்தால் கதை கத்தலாகி விடும் என்று முழுவதும் நம்பலாம். அதாவது அண்ணாமலை சொன்ன செங்கல் ஒவ்வொன்றாக பிடுங்கப்படும் என்பது உண்மையாக ஆரம்பிக்கும்.


துர்வேஷ் சகாதேவன்
மே 19, 2025 07:04

இது 2017 period இருந்து தொடக்கம் அப்போ தங்கமணி மந்திரி , அவர் மாத மாதம் டெல்லி சென்று ஒரு மந்திரியை சந்தித்து , அததே சப்பாத்தி மாவை பிசைய ஆரம்பித்தாள் உங்க கதை அதான் எலெக்டரால் பாண்ட் fradulent கதை நாறிடும்


Kasimani Baskaran
மே 19, 2025 17:40

துர் வேஷ் - தேர்தல் பாண்டு என்பது அணைத்து கட்சிகளும் வசூலித்தது - வீணாக கற்பனையில் மிதக்க வேண்டாம்.


D.Ambujavalli
மே 19, 2025 03:23

‘தம்பி’ என்று அமைச்சர்கள், எம். எல். ஏ களால் செல்லமாக அழைக்கப்படும் நபரை வளைத்தால் பெரிய பெரிய மீன்கள், சுறாக்கள் திமிங்கிலங்களெல்லாம் அகப்படும் அவ்வளவுதான், கேசையே கிழித்து தொங்கவிட்டுவிட்டு தப்பி ஓடிவிடும் மூன்றாம் நிலை அதிகாரி யாராவது சிறைக்குப்போவார் கதையும் முடிந்தது சுபம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை