உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலைகள் சேதம் ஏன்? அமைச்சர் வேலு விளக்கம்

சாலைகள் சேதம் ஏன்? அமைச்சர் வேலு விளக்கம்

சென்னை : சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க.,- கண்ணன்: விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் - கும்பகோணம் சாலையை, நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும். மதனத்துார் வரை நடப்பாண்டு பணியை முடித்து தர வேண்டும்.அமைச்சர் வேலு: இச்சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இதில், விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் இடையே, 26 கி.மீ.,க்கு நான்குவழிச் சாலையாக, 200 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் விரிவாக்கம் செய்ய, தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.வி.சி., - சிந்தனைச்செல்வன்: டெல்டா பகுதிகளில், சேறு, சகதிகளுக்கு இடையே, மாநில அளவிலான தரத்தில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. எனினும், அவை சேதம் அடைகின்றன. எனவே, டெல்டா பகுதிகளில், சாலைகளின் தரத்தை அதிகரிக்க வேண்டும்.அமைச்சர் வேலு: ஒரு சாலை அமைத்தால், ஐந்து ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். மண் உறுதியாக இருந்தால், சாலை ஐந்து ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்கும். இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு, டெல்டாவில் மட்டும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலை அமைக்க, நிதித்துறையுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
ஏப் 24, 2025 09:10

திருட்டு திராவிட மாடல் அரசு ஆட்டய போடுவதை குறைத்தால் சாலை தரமாக இருக்கும் ஆனால் விஞ்ஞானரீதியாக ஆட்டய போடுவதில் கில்லாடிகள் திராவிட மாடல் அமிச்சர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை