உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இங்க ஏன் வர்றீங்க... சென்னைக்கு போங்க :கடன் கேட்டு செல்வோரை விரட்டியடிக்கும் தாட்கோ

இங்க ஏன் வர்றீங்க... சென்னைக்கு போங்க :கடன் கேட்டு செல்வோரை விரட்டியடிக்கும் தாட்கோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாவட்டங்களில் செயல்படும், 'தாட்கோ' அலுவலகங்களில் கடன் பெற, விண்ணப்பிக்கச் செல்வோரை, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு செல்லுமாறு, அதிகாரிகள் விரட்டி அடிப்பதாக புகார்எழுந்துள்ளது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமான, 'தாட்கோ' சார்பில், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.மாவட்டங்களில் செயல்படும், 'தாட்கோ' அலுவலகங்களில், எஸ்.சி., சமூகத்தினர் கடன் பெற விண்ணப்பித்தால், பல்வேறு பிரச்னைகளை சந்திக்கநேரிடுகிறது.குறிப்பாக, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் கடன் கேட்டு விண்ணப்பித்தால், உரிய முறையில் பதில் அளிக்காமல், 'சென்னைக்கு செல்லுங்கள்' என, அதிகாரிகள் விரட்டி அடிப்பதாக கூறப்படுகிறது.

உரிய ஆவணங்கள்

பாதிக்கப்பட்ட சிலர் கூறியதாவது:கல்வி, வணிகக்கடன், சில்லரை விற்பனை கடன் என, பல்வேறு திட்டங்களை தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதனால், தொழில்முனைவோர் மேம்பாட்டு கடன் பெற, தாட்கோ அலுவலகத்திற்கு கடந்த மாதம் சென்றோம். அங்கு உதவியாளர் ஒருவரிடம் கேட்டதற்கு, மாவட்ட மேலாளரை சந்திக்குமாறு கூறினார்.மேலாளரிடம் தொழிலை மேம்படுத்த கடன் தேவைப்படுவதாக கூறியதோடு, உரிய ஆவணங்களையும் சமர்ப்பித்தோம்.அவர் முறையான பதில் அளிக்காமல், ஒரு வாரம் அழைக்கழித்தார். தொடர்ந்து சென்ற போது, அவர் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறினார். பொதுவாக, கடன் பெற விண்ணப்பித்தால், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், ஏதேனும் தவறுகள் இருந்தால் நிராகரிக்கப்படுவது வழக்கம்.

தொடர்கதை

ஆனால், விண்ணப்பிக்கும் முன்னரே சென்னைக்கு செல்லுங்கள் என, விரட்டி அடிப்பது ஏற்புடையதல்ல. அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான். சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசியல் பிரமுகர்கள் சிபாரிசுடன் செல்வோருக்கு தான் கடன் கிடைக்கிறது. எந்த பின்புலமும் இல்லாதவர்கள் விரட்டி அடிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kanthan Karthikeyan
மே 18, 2025 06:53

அந்தந்த வருடம் முடிந்தவுடன் கடன கொடுக்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்தாமல் விட்டு விட்டால்...அதை திரும்ப அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு ..அதுமற்ற துறை அதாவது பிற்படுத்தப்பட்ட பிசி நலவாரியத்துக்கு மாற்றப்படுகிறது.... கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர்கள் யாரும் லோன் வாங்கி வீடு கட்டியது கிடையாது ....ஏனென்றால் ஆதிதிராவிடர்கள் லோன் வாங்க சென்றால் எந்த பேங்கிலும் லோன் தர மாட்டார்கள்...இதுதான் உண்மை.. அவர்கள் இருக்கும் நகையை அடமானம் வைத்துதான் அனைத்தையும் செய்கிறார்கள்... ஏன் என் நண்பர் ஒருவர் கடன் அப்ளிக்கேஷன் போட்டால், வெரிஃபிகேஷன் வரும்போது, நீங்க எந்த ஆளு என்று கேட்டு, யார் என்று தெரிந்தவுடன் அப்ப்ளிகேஷனை தள்ளுபடி செய்து விட்டார் இத்தனைக்கும் அவர் மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறார்...


Ganesan Murugan
மே 17, 2025 18:16

தாட்கோவால் ஆதிதிராவிட மக்களுக்கு பெரும்பான்மையாக எந்த நன்மையும் கிடைப்பதில்லை அரசியல்வாதிகளுக்கு அரசியல் திருடர்களுக்கே தேவைப்பட்டால் அலுவலகம் இருக்கிறது


appu
மே 18, 2025 07:04

தென்காசி மாவட்டத்திலும் இது போன்ற நடக்கின்றது தாட்கோ அலுவலகத்தில்


James Mani
மே 17, 2025 11:32

இது எல்லாம் பேங்க் உள்பட.


Sufha
மே 17, 2025 09:55

லஞ்சம் வாங்குவதே குறிக்கோள் என்றால் பணியாளர்கள் கடனாளிகளை அலைக்கழிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?. ஆவணங்கள் சரிவர இல்லாமல் இருந்தால் மட்டுமே நிராகரிக்கப்படும். அனைத்து கடன்களும் இணையதளம் வழியாகத்தான் கொடுக்கப்படுகிறது. பொத்தாம் பொதுவாக அனைத்து அலுவலகத்திலும் இருந்து ஆட்களை சென்னைக்கு எப்படி அனுப்ப முடியும்?. பிறகெதற்கு மாவட்டம் தோறும் அலுவலகங்கள் இயங்குகிறது?. தாட்கோ எம்டி தனது கேரண்டி மூலம் படிக்கும் மாணவிக்கு கடன் வழங்கி உள்ளார். எண்ணற்ற நன்மைகள் செய்யும் பலர் பணியாற்றுவதை உங்களால் கண்டறிய முடியவில்லையா?. அல்லது உங்களது தரம் இந்த அளவு தாழ்ந்து விட்டதா?.


ராமகிருஷ்ணன்
மே 17, 2025 09:55

அரசியல் பிரமுகர்களுடன் செல்பவர்கள் கடன்களை பெறுகின்றனர். இதான் விடியல் அரசின் சாதனை. அதாவது கமிஷன் கரெக்டா கொடுத்தால் தான் விடியல் அரசுசில் வேலை நடக்கும் .


Natarajan Ramanathan
மே 17, 2025 05:17

தாட்கோவில் மானியம்பெற ஐம்பது சதம்வரை லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது தெரியுமா?


Sufha
மே 17, 2025 10:01

தாங்கள் வாங்கும் கடனில் சரிபாதி லஞ்சமாக கொடுத்து வியாபரம் செய்யப் போகிறீர்கள்?. என்ன ப்ரோ எல்லாமே இணையதளம் வழியாக நடக்கும்போது அதை நிறுத்தி வைக்க முடியாது. அதோடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தரலாமே?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை