மருத்துவமனைக்கு ஸ்டாலின் சென்றது ஏன்?
ஆட்சியின் கடைசி காலத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, வரும் தேர்தலில் வெற்றி பெறலாம் என, முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், யார் வேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளனர். தி.மு.க., அரசு, மோடி அரசை கடுமையாக எதிர்க்கிறது. அதற்கு காரணம், மத்திய அரசு செய்யும் பல்வேறு மக்கள் நல திட்டங்களால், மக்கள் மோடி அரசின் மீது விசுவாசமாக உள்ளனர். இது, இங்கிருக்கும் தி.மு.க., அரசுக்கு பிடிக்கவில்லை. தமிழகம் வந்த பிரதமரை நேருக்கு நேர் பார்க்க முடியாத முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையில் போய்ப் படுத்துக்கொண்டார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தன்னை ஒருமையில் பேசுவதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், இவர் மட்டும் யாரை வேண்டுமானாலும் ஒருமையில் பேசுவாராம். மைத்ரேயன் போல் ஆயிரம் மைத்ரேயன்களை கட்சியில் சேர்த்தாலும், தி.மு.க., வெற்றி பெற போவதில்லை. - கே.பி.ராமலிங்கம், துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,