உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ மாணவர் வைப்புத்தொகை ஐந்து மாதமாக தராமல் இழுத்தடிப்பது ஏன்?

மருத்துவ மாணவர் வைப்புத்தொகை ஐந்து மாதமாக தராமல் இழுத்தடிப்பது ஏன்?

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள நிதி பற்றாக்குறை காரணமாக, கவுன்சிலிங் வைப்பு தொகையை திருப்பி தராமல், மருத்துவ கல்வி இயக்ககம் இழுத்தடிப்பு செய்வதாக, பெற்றோர் குற்றஞ்சாட்டிஉள்ளனர்.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. 9,050 எம்.பி.பி.எஸ்., படிப்பு இடங்களும், 2,200 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. இதில், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 42,957 பேர் விண்ணப்பித்தனர்.இதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் துவங்கி, ஓரிரு மாதங்களில் முடிவடைந்தது. மாணவர் சேர்க்கை கவுன்சிலில் கலந்து கொள்ள, திரும்ப பெறக்கூடிய வகையில், அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்கள், 30,000 ரூபாய்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 1 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை செலுத்தினர்.மேலும், மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிந்தும், நிரம்பாத இடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்தியுள்ளனர். கவுன்சிலிங் முடிந்த பின், சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில், அந்த பணம் வரவு வைக்கப்பட வேண்டும்.இந்நிலையில், கவுன்சிலிங் முடிந்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், மாணவர்களின் பணத்தை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் விடுவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.சம்பந்தப்பட்ட பெற்றோர் சார்பில், மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் கேட்ட போதெல்லாம், 'ஒரு வாரத்தில் பணம் விடுவிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன், கவுன்சிலிங் முடிந்த ஓரிரு மாதங்களில், மாணவர்கள் செலுத்திய வைப்புத் தொகை வழங்கப்பட்டு விட்டது.தற்போது, ஐந்து மாதங்களாக இழுத்தடிப்பு செய்கின்றனர். மாணவர்கள் செலுத்திய வைப்புத் தொகையை, மற்ற செலவுக்கு அதிகாரிகள் பயன்படுத்தி விட்டதாக தெரிகிறது. அதனால், நிதி பற்றாக்குறை என, காரணம் கூறுகின்றனர்.இது குறித்து, மருத்துவ மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: கவுன்சிலிங்கில் செலுத்திய வைப்புத் தொகையை, மருத்துவப் படிப்பில் சேர்ந்த பின், கல்லுாரிக்கான கல்வி கட்டணத்தில் கழித்து விட கோரினோம். அதையும் செய்யாமல், எங்களது பணத்தையும் தராமல் உள்ளனர். அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அலட்சியமாக பேசுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறுகையில், 'வைப்புத் தொகையை விடுவிப்பதற்கான பணி நடந்து வருகிறது. விரைவில், மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பெரிய குத்தூசி
பிப் 24, 2025 17:03

கடந்த 2024 ஆண்டிற்கான MBBS மற்றும் BDS மருத்துவ படிப்பில் சேர்வதற்கு டெபாசிட் தொகையாக மாணவர்கள் தலா ஒரு லட்சத்து முப்பதனாயிரம் வீதம் சுமார் 13000 இடம் கிடைத்த மாணவர்கள் மற்றும் குறைந்த நீட் மார்க் எடுத்து போட்டியில் பங்கேற்ற சுமார் 5000 இடம் கிடைக்காத மாணவர்களும் டெபாசிட் தொகை செலுத்தி MBBS மற்றும் BDS மருத்துவ படிப்பு கலந்தாய்வில் கலந்து கொண்டனர். மருத்துவ படிப்பின் சேர்க்கை முடிந்து கல்லூரிகள் ஆரம்பித்து 4 மாதங்கள் ஆகியும் அந்த சார் திரு மா சுப்பிரமணியன், சுகாதார துறை அமைச்சர் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகம் மாணவர்களிடம் வசூலித்த சுமார் ரூபாய் 600 கோடிக்கு மேல் டெபாசிட் தொகையை இதுவரை மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. இது அல்லாமல் மருத்துவ சேர்க்கை கிடைத்த மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு வருட கல்வி கட்டணம் ருபாய் 18000, தனியார் மருத்துவ கல்லூரி அரசு ஒதுக்கீடு கல்வி கட்டணம் ருபாய் 4 லட்சத்து 50000, மேனேஜ்மென்ட் ஒதுக்கீடு கல்விக்கட்டணம் ருபாய் 13 லட்சத்து 5000, மற்றும் NRI ஒதுக்கீடு கல்வி கட்டணம் ருபாய் 24 லட்சத்து ஐம்பதினாயிரம் ருபாய் என சுமார் 2500 கோடிக்கு மேல் மருத்துவ கல்வி இயக்குனரகம் மாணவர்களிடம் வசூல் செய்துள்ளது. இந்த தொகை மருத்துவ கல்வி இயக்குனரகம் வாயிலாக தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு உடனடியாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இதுவரை மருத்துவ கல்லூரிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆதலால் பல மருத்துவ கல்லூரிகள் ப்ரோபஸர் களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாமல் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் தரமான படிப்பும் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது. குறிப்பாக மாணவர்களிடம் வசூல் செய்த டெபாசிட் முன்பணம் சுமார் 3000 கோடி க்கு மேல் மற்றும் இடம் கிடைத்த மாணவர்கள் செலுத்திய முதல் வருட மருத்துவ கல்வி சேர்க்கை கல்விக்கட்டணமாக வசூலித்த தொகையை மாணவர்களுக்கும், தனியார் கல்லூரிகளுக்கும் திருப்பி செலுத்தாமல் தமிழக அரசும், மருத்துவ துறை அமைச்சர் சார் துறை காலம் தாழ்தி வருகிறார்கள். துறைரீதியாக நாங்கள் விசாரித்தவரை தமிழக திமுக அரசு மொத்தமுள்ள ருபாய் 3000 கோடிக்கு க்கு மேல் உள்ள தொகையை அரசின் கஜானாவில் நிதி இல்லததால் வேறு துறை செலவுக்கு பயன்படுத்தி விட்டதால், மாணவர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையையும், கல்லூரி கல்வி கட்டணமாக மாணவர்களிடம் வசூலித்த கல்லூரிக்கு கொடுக்க பட வேண்டிய தொகையும் திரட்டமுடியாமல் தமிழக அரசு தடுமாறி வருகிறது. ஆகவே தினமலர் போன்ற தேச பற்று பத்திரிக்கைகள் மற்றும் எதிர்கட்சிகள் இந்த மருத்துவ மாணவர்கள் பிரச்சினையில் தலையிட்டு தமிழக அரசிடமிருந்தும், மருத்துவ கல்வி இயக்குநரகத்திடமிருந்தும் செலுத்திய முன்பணத்தை மாணவர்களுக்கும், கல்வி கட்டணத்தை மருத்துவ கல்லூரிகளுக்கும் பெற்றுத்தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.


Ram
பிப் 23, 2025 18:43

திராவிடம் என்றாலே திருட்டுதானே சார் , கொடுத்தப்பணத்தை எப்படி திருப்பித்தருவார்கள்


பெரிய ராசு
பிப் 23, 2025 22:04

திருடன் என்றல் திராவிட திமுக என்று பெயர் , so சாப்பிட்டாச்சு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை