மேலும் செய்திகள்
பேச்சு, பேட்டி, அறிக்கை
09-Oct-2025
கரூர் சம்பவத்துக்கு சி.பி.ஐ., விசாரணை கேட்டால், தி.மு.க., அரசு ஏன் தயங்க வேண்டும்? 'மடியில் கனம் இல்லை; வழியில் பயம் இல்லை' என சொல்லும் முதல்வர் ஸ்டாலின், இதற்கு மட்டும் ஏன் யோசிக்கிறார்? த.வெ.க., மற்றும் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளும் முயற்சியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது. த.வெ.க., தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் தி.மு.க., ஈடுபட்டால், அ.தி.மு.க., உறுதியாக குரல் கொடுக்கும். கோவையில், 1,635 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 10 கி.மீ., நீள உயர்மட்ட பாலம் திட்டத்தை கொண்டு வந்து பணியை செய்தது அ.தி.மு.க., என்பதை மக்கள் அறிவர். முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல் ஸ்டிக்கர் ஒட்டி, அவர் செய்ததை போல் காட்டியது நகைச்சுவை. தமிழகத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்து சர்வாதிகாரத்தை ஒழிக்க, ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். - ஜெயராமன், எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,
09-Oct-2025