உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை மருத்துவ படிப்பு இடங்களை அதிகரிக்காதது ஏன்? முதல்வருக்கு டாக்டர்கள் கேள்வி

துணை மருத்துவ படிப்பு இடங்களை அதிகரிக்காதது ஏன்? முதல்வருக்கு டாக்டர்கள் கேள்வி

சென்னை : 'தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரிகளில், துணை மருத்துவ படிப்பு இடங்களை, தனியாருக்கு நிகராக ஏன் அதிகரிக்கவில்லை' என, முதல்வருக்கு டாக்டர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.தமிழக அரசு சார்பில், சென்னை, மதுரை என தலா ஒரு மருந்தியல் கல்லுாரி; ஆறு செவிலியர் கல்லுாரிகள் உட்பட, துணை மருத்துவ படிப்புகளுக்கு, 14 கல்லுாரிகள் மட்டுமே செயல்படுகின்றன. இவற்றில், 608 இடங்கள் உள்ளன. அதேநேரம், 391 தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 21,190 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன.தனியார் கல்லுாரிகளில் துணை மருத்துவம் படிக்க, 3 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இதனால், ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில், தனியாருக்கு நிகராக, அரசு மருத்துவ கல்லுாரிகளில் ஏன் துணை மருத்துவ படிப்புகளை அதிகரிக்கவில்லை என கேள்வி எழுப்பி, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

டாக்டர்கள் சங்கம் எழுதியுள்ள கடிதம்:

துணை மருத்துவ படிப்புகளான பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான கல்லுாரிகளை தனியார்களே நடத்துகின்றனர். துணை மருத்துவ படிப்புகளில் மொத்தமுள்ள இடங்களில், 97 சதவீதம் தனியாரிடம் உள்ளது. தனியார் கல்லுாரிகள் அதிகளவில் துவங்க அனுமதித்த நிலையில், அரசு சார்பில் கல்லுாரிகள் துவக்கவோ, இடங்களை அதிகரிக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை. தனியார் கல்லுாரிகளில், 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.கடந்த, 60 ஆண்டுகளாக ஒரு துணை மருத்துவ படிப்பு கூட புதிதாக துவக்கப்படாமல் உள்ளது. ஏழை மாணவர்கள் நலன் கருதி, துணை மருத்துவ படிப்புகளை, அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் துவங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
மே 30, 2024 14:42

தமிழகத்தில் டாக்டர் பணியிடங்களைவிட துணை மருத்துவப் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ளன எனத் தெரிகிறது. இனிமேல் தி.மு.க வுக்கு மோதி வேலைகளை உருவாக்கவில்லை. வேலை தரவில்லை என்றெல்லாம் குறை கூறத் தகுதியில்லை.


ஆரூர் ரங்
மே 30, 2024 10:41

பிளஸ் டூ மார்க் அடிப்படையில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் நர்ஸிங் படிப்புக்கு தேர்வு செய்கிறார்கள்..பயிற்சியுடன் உதவித் தொகையும் அளிக்கிறார்கள். ஒவ்வொரு மாணவியும் ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகளின் சிகிச்சை மூலம் நிறைந்த அனுபவத்துடன் முடிக்கிறார்கள். அரசு மருத்துவமனை சட்டதிட்டங்கள் வழிமுறைகள் எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறார்கள்.இதனால் முன்பு இவர்கள் எல்லோருக்கும் அரசுப்பணி வழங்கப்பட்டது. இப்போது கோர்ட் தனியாருக்கு சாதகமாக தீர்ப்பு கூறி விட்டதால் ஏட்டுச் சுரைக்காய் கல்வி பயின்ற தனியார் நர்சிங் மாணவர்களுக்கு மட்டுமே பெரும்பாலான அரசுப்பணி கிடைக்கிறது. கோடி கணக்கான ரூபாய் வரிப்பணத்தில் பயிற்சியளித்தது வீணாகி விடுகிறது. நாடு எப்படி உருப்படும்?


duruvasar
மே 30, 2024 10:01

எல்லாம் துட்டு தான் மருத்துவரே. புரியல, எல்லாம் மணி, துட்டு, பணம், டப்பு, அம்புட்டு தந்தான்.


மோகனசுந்தரம்
மே 30, 2024 09:40

நம்முடைய முதல்வர் எவ்வளவு பெரிய ஆளுமை மிக்க தலைவர். உலகத்தின் நம்பர் ஒன் முதல்வர் என்று பெயர் எடுத்தவரை டாக்டர்கள் கேள்வி கேட்கிறார்கள் என்றால் எவ்வளவு மகா கேவலம்.


GMM
மே 30, 2024 07:45

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு துணை மருத்துவ படிப்பு தனியாரிடம் உள்ளது. திராவிடர் ஆட்சி புரியும் வரை மாறாது.. தனியாரில் அதிக கட்டணம் வசூல். கட்டண நிர்ணயம் இருக்காது. அரசு புதிய துணை மருத்துவ கல்லூரி துவங்காது, சீட் அதிகரிக்காது. பொறியியல், மருத்துவ படிப்புகள் தமிழகத்தில் திராவிடர்களிடம் அதிகம். அது வியாபாரம். சேவை பெயரளவில்.


ஆரூர் ரங்
மே 30, 2024 07:30

விருதுநகர் அரசு பல் மருத்துவக் கல்லூரி என்ற போர்டு மட்டுமே பல்லாண்டுகளாக நிற்கிறது. செங்கல் திருடர் இதனைப் பற்றி போராட்டம் நடந்தட்டும்.


Prabakaran J
மே 30, 2024 07:25

The Doctors association now only raised this issue(from 60 years)due to govt not raised salary for the doctor. Govt simply divert this issue to central government like annamalai style (Jayalalitha indhuthuva leader)


R.RAMACHANDRAN
மே 30, 2024 07:17

இந்த நாட்டில் ஏழை மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே மருத்துவம், துணை மருத்துவம், செவிலியர் போன்ற பணம் கொழிக்கும் கல்வி கற்கின்றனர். அரசு கல்லூரிகளில் கட்டணம் குறைவாக நிர்ணயித்திருந்தாலும் அரசியல் வாதிகளுக்கு மற்றும் அதிகார வர்க்கத்திற்கு லஞ்சம் கொடுத்தால் தான் அவர்களுடைய பரிந்துரையின் பேரில் இடம் கிடைக்கிறது.கல்லூரி கல்வியை ஏழைகள் பெரும்பாலோர் கற்க முடியாத நிலை உள்ளதால் தான் அரசு கல்லூரி கல்வியை இலவசமாக அளிக்க வேண்டும் என இந்தியா அரசமைப்பில் கட்டாயமாக்கப்படவில்லை.


Kavi
மே 30, 2024 06:58

Idu than drivida achievement


ராமகிருஷ்ணன்
மே 30, 2024 06:24

அந்த படிப்புகளுக்கு லஞ்சம் அதிகமாக கிடைக்காது. அதனால திமுக அரசுக்கு ஆர்வம் இல்லை என்று சொல்லுங்க


மேலும் செய்திகள்