உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்வே பிங்க் புக் வெளியிடாதது ஏன்?: அதிகாரிகள் விளக்கம்

ரயில்வே பிங்க் புக் வெளியிடாதது ஏன்?: அதிகாரிகள் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்கு, 2.65 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக ரயில் திட்டங்களுக்கு மட்டும், 6,626 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த 2ம் தேதி தெரிவித்தார். ஆனால், எந்தெந்த மாநிலங்களுக்கு, எவ்வளவு நிதி, திட்டங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய, 'பிங்க் புக்' எனப்படும், ரயில்வே புத்தகத்தை இன்னும் ரயில்வே துறைவெளியிடவில்லை. இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பட்ஜெட் முடிந்து, 12 நாட்கள் கடந்தும், 'பிங்க் புக்' வெளியிடப்பட வில்லை. அது வந்தால் மட்டுமே, அடுத்தகட்ட நிதி ஒதுக்கீடு விபரங்களை பார்த்து, பணிகளை மேற் கொள்ள முடியும்' என்றனர்.ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 'பிங்க் புக்'கை உடனே வெளியிட்டால், நிதி விபரங்களை பார்த்து, மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு, சம்பந்தப்பட்ட மாநில எம்.பி.,க்கள் லோக்சபாவில் கேள்வி எழுப்புவர். இதை தவிர்க்கவே, தாமதம் செய்து வருவதாகக் கருதுகிறோம். லோக்சபா கூட்டத்தொடர் முடிந்துள்ளதால், ஓரிரு நாட்களில், 'பிங்க் புக்' வெளியிட வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
பிப் 17, 2025 11:46

இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஐந்தரை சதவீதம் உள்ளது.ஆனால் ரயில்வே திட்டங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்தது வெறும் இரண்டரை சதவீதம் கூட இல்லை. மத்திய பாஜக அரசு தமிழகத்தை பாரபட்சமாக வஞ்சிக்கிறது என்று உண்மையைச் சொன்னால் சங்கிகளுக்கு கசக்கிறது! உடனே பத்து வருடங்களுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் அவ்வளவு தான் நாங்கள் இவ்வளவு கொடுத்துள்ளோம் என்று கதை விட வேண்டியது. தைரியம் இருந்தால் நேர்மை இருந்தால் மற்ற மாநிலங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு தமிழகத்துக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்தனர் என்ற உண்மையை கூற வேண்டியது தானே இந்த நேர்மையற்ற மத்திய பாஜக அரசு!


ஆரூர் ரங்
பிப் 17, 2025 14:48

சதவீதப்படியெல்லாம் ஒதுக்க முடியாது. முந்தைய யு பி ஏ அரசு காஷ்மீருக்கு மட்டும் செலவழித்தது எவ்வளவு? சதவீதப்படியா செலவழித்தார்கள்? அரசு ஒதுக்கியதில் பெரும் பகுதி மறைமுகமாக பயங்கரவாதிகளுக்குத்தானே சென்றது?


கிஜன்
பிப் 17, 2025 10:46

அது என்ன பிங்க் புக்.. ஆங்கிலேய அடிமைத்தனம்....


R Hariharan
பிப் 17, 2025 09:20

முதலில் மாநில பட்ஜெட் என்ன செய்தார்கள் அதனை விளக்க வேண்டும். மத்திய அரசு என்பது முழு இந்தியாவை கொண்டது. அவர்கள் பாரபட்ச காட்டுவதில்லை. சில மாநில அரசு வேண்டும் என்றெய் குறை சொல்வது வழக்கம். மாநில அரசு எந்த அளவு மத்திய அரசுடன் ஒத்துஅளிக்கறது. சும்மா ஏதாவது எழுதுவது அல்லது குறை கூர்வது நல்லதல்ல.


Ganapathy
பிப் 17, 2025 08:37

இப்படி புளுகாதே.


பாமரன்
பிப் 17, 2025 08:08

செஞ்சது மொள்ளமாரித்தனம்... ஆனால் அதிகாரிகள் விளக்கம்... இது வேற லெவல் ....


KavikumarRam
பிப் 17, 2025 09:46

முதலில் தமிழகத்தின் மத்திய அரசு கொடுத்த காசுக்கு செலவு கணக்கு காட்ட சொல்லுங்க. அப்ப யாரு மொள்ளமாரித்தனம் செஞ்சதுன்னு நாம முடிவுக்கு வரலாம்.


Ganapathy
பிப் 17, 2025 10:48

இதுக்கு முன்னாடி தெரிஞ்சு நீ என்ன பண்ணின? உன்னுடைய திருட்டுத்திராவிடிய களவாணிகழக பயலுக ஆட்சீல பெண்குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் கூட கற்பழிக்கப்பட்கின்ற லட்சணத்துல ஆளுகின்ற பயந்தாங்கொள்ளி முதல்வனை கேட்க வக்குகெட்ட உன்னிய மாதிரி களவாணிகழக ஆளுங்களை பொதுவில் கழுவேத்தணும்.


selva
பிப் 17, 2025 07:29

இவ்வளவு நிதி கொடுத்தும் பீகார் உபி மத்தியபிரதேச போன்ற மாநிலங்கள் இன்னமும் பங்களாதேஷ், பாக்கிஸ்தான், ஸ்ரீலங்கா ஏன் சூடான் ஏமன் விட மோசமாதான் இருக்கு ஒருவருஷம் தென் இந்தியாவில் இருந்து வரி போகலைனா விமானதுக்கு பெட்ரோல் போட வழி இருக்காது


VENKATASUBRAMANIAN
பிப் 17, 2025 07:12

எதை வேண்டுமானாலும் எழுதலாமா.


இறைவி
பிப் 17, 2025 05:58

இருநூறு ரூபாய்க்கு இவ்வளவு கீழிறங்கி கருத்துப் பொய் பரப்பலா? தினமலர் நடுநிலை என்று என்னுடைய இக்கருத்தை வெட்டாமல் இருக்க வேண்டும். ஐம்பது, அறுபதுகளில் BHEL, BEL,MFL, மற்றும் இராணுவ, பாதுகாப்பு தளவாடங்கள் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் பாதுகாப்பு கருதி நாட்டின் எல்லையோர மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லாமல் தென் மாநிலங்களுக்கு முழுமையாக வந்தது. அப்போது மற்ற மாநிலங்களுக்கு ஏன் குறைவாகக் கொடுத்தீர்கள் என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. எல்லோருக்கும் நாட்டின் ஒற்றுமையும் வளற்சியும்தான் முக்கியமாக இருந்தது. இந்த பிங்க் புத்தகத்தை வெளியிட்டு, வேறு சில மாநிலங்கள் எங்களுக்கு ஏன் குறைவான ஒதுக்கீடு என்று கேட்டால் என்ன பதில்? உங்களிடமிருந்து பிடுங்கி அவர்களுக்கு கொடுத்தால் ஒத்துக் கொள்வீர்களா? நீங்கள் உங்கள் மாநிலத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு செலவிடும் அளவிற்கா கோவை, திருச்சி, மதுரைக்கு செலவிடுகிறீர்கள்? வேண்டாம், அதில் பாதியாவது வட மாவட்டங்களுக்கும், அரியலூர், பெரம்பலூர், தேனி மாவட்டங்களுக்கு ஒதுக்குகிறீர்களா? உங்கள் மாநிலத்திற்கு என்ன என்ன தேவை என்று அனைத்து MPக்களும் பட்ஜெட்டுக்கு முன்பே நேரில் பார்த்து கேட்டிருக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு கேன்டீனில் போண்டா தின்னவே நேரம் இல்லை. இப்போது மதுரை, கோவை மெட்ரோவிற்கு பெரும் ஒதுக்கீடு செய்யப்படும். மற்ற மாநிலங்களை விட உங்களுக்கு அதிகமாக வரும். அப்போது வேறு மாநிலங்களும் அடம் பிடித்தால் உங்களுக்கு கொடுப்பதை தாமதப் படுத்தினால் ஒப்புக் கொள்வீர்களா? நிதி ஒதுக்கீடு சக்கரம் பில் சுழற்சியாகத்தான் வரும். இதற்கு முன் காங்கிரஸ், தீயமுக கூட்டணி ஆட்சியில் எத்தனை ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு கொடுக்கப் பட்டது. உங்கள் கண் முன்னே பெரும்பாலான தமிழ் நாட்டு திட்டங்கள், சப்தமின்றி கேரளாவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டன. அப்போது இந்த உபிக்களின் திருவாய்கள் மூடியிருந்ததா? இது எல்லோருக்குமான அரசு என்று அறிக்கை விட்டு விட்டு, ஜாதி, மதம் பார்த்து நீங்கள் நிர்வாகம் செய்தால் அது எல்லோருக்குமான அரசு. அதையே மத்திய அரசு செய்தால் ஓர வஞ்சனை. தீயமுக நாட்டைப் பிரிக்கும் கேடு எண்ணம் கொண்ட ஒரு கட்சி. முழு அதிகாரத்துடன் தமிழ் நாட்டை இவர்களிடம் கொடுத்தால், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷின் நிலைமைதான் நமக்கும்.


Minimole P C
பிப் 17, 2025 08:10

well said. Our dy.CM asks FM of India that do we ask your fathers house money? To that extent only his knowledge or purposfully talks ill of central Govt. That Dy.CM shall tell that does he allot amount accoring to collection of each district?They spend money on useless items like EVR/KK statues. 86 high pen staute for a man who looted TN, and become one of the Asias richest. For personal gains some people support this also and make innocents victims.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 17, 2025 03:07

பாஜாக்கா பட்ஜெட் வெறும் வாயிலே சுட்ட வடை என்று கூறுகிறார்கள்.


சமீபத்திய செய்தி