உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ கழிவு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் சரமாரி கேள்வி

மருத்துவ கழிவு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரளாவுக்கு பசுமை தீர்ப்பாயம் சரமாரி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து, தமிழகத்தில் கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என கேரளா அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொண்டப்படுவது வாடிக்கையானதாக இருந்து வருகிறது. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயமே தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது, கேரள அரசுக்கும், கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து கேரளா அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து மருத்துவ கழிவுகளை லாரிகளில் ஏற்றி சென்றனர்.மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம் தொடர்பாக, இன்று (ஜன.,02) மீண்டும் பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. அப்போது, 'கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து, தமிழகத்தில் கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என கேரளா அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. அப்போது கேரளா அரசு தரப்பில், 'கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள். கழிவுகள் கொட்டிய மருத்துவமனை, ரிசார்ட்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது' என விளக்கம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, 'தமிழக எல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய ரிசார்ட் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கேரளா கழிவுகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும். தமிழக அரசு மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்' என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இது குறித்து, வரும் ஜன., 20ம் தேதிக்குள் பதிலளிக்க கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சண்முகம்
ஜன 03, 2025 00:21

இது கடவுளின் நாடாம்! வெட்கக்கேடு.


rama adhavan
ஜன 02, 2025 20:48

தமிழகத்தில் கேரள மருத்துவ கழிவு வண்டிகள் எப்படி, யாரால் காட்டுப்பாடின்றி உள்ளே விடப்பட்டன, இதற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்னென்ன என்பதை ஏன் இன்னும் இந்த அமைப்பு விசாரணை செய்யவில்லை? இதில் உள்ள மர்மம் புரியவில்லை.


Rajan
ஜன 02, 2025 16:58

Which hospital was responsible for this atrocious act?


Suppan
ஜன 02, 2025 16:22

அந்த திராவிடக்கும்பலுக்கு கொஞ்சம் படி அளந்துவிட்டுத்தான் தமிழகத்துல குப்பை கொட்டுறோமுங்க. நாங்க பங்காளிங்க , கண்டுக்காதீங்க


Sankare Eswar
ஜன 02, 2025 16:17

திருட்டு கேரளா கோட்டான்கள்


Ganapathy
ஜன 02, 2025 13:12

திராவிட முதல்வன் வாயில் நேந்திரம் பழம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 02, 2025 15:27

இருக்கலாம் .... ஒன்றுக்கு மேல் இருப்பதால் பேச முடியவில்லை போலும் .....


முக்கிய வீடியோ