உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? என தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு பிப்.,5ல் நடக்கிறது. தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி மட்டுமே களத்தில் உள்ளன. அ.தி.மு.க., தே.மு.தி.க, மற்றும் த.வெ.க., உள்ளிட்ட கட்சி தேர்தலை புறக்கணித்துள்ளன. செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், கடந்த 2023ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்த போது வாக்காளர்கள் கொட்டகைக்கு அடைத்து வைத்தது போல் இந்த முறையும் அடைக்க வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று (ஜன.,29) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? யார் தான் சலுகைகள் வழங்கவில்லை?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

என்றும் இந்தியன்
ஜன 29, 2025 17:39

பாவம் அநீதிபதிகளுக்கு ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது . கொட்டகையில் சாப்பாடு சரக்கு ரெகார்ட் டான்ஸ் இருக்கும் ஆகவே கொட்டகை எதற்கு என்ற கேள்வி


Barakat Ali
ஜன 29, 2025 17:11

ஜட்ஜுங்க கூட காமெடி பண்ணலாம்ல ????


தமிழன்
ஜன 29, 2025 16:21

அங்கே தானே பணம் கொடுப்பார்கள்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 29, 2025 15:45

2023ல் ஒன்றும் செய்ய முடியவில்லை நீதிமன்றத்தால் ...இந்த வழக்கை தள்ளுபடி செய்யுங்கள் நீதிபதி அவர்களே....டைம் வேஸ்ட்....நீதிபதியின் எனர்ஜி வேஸ்ட்...!!!


GMM
ஜன 29, 2025 13:50

கவர்னர், தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம், ஜனாதிபதி அவர்கள் அனுமதி இல்லாமல் எந்த கேள்வியும் கேட்க முடியாது? கவர்னர், தேர்தல் ஆணையம் மத்திய அரசு அனுமதி இல்லாமல் எங்கும் ஆஜர் ஆக கூடாது. மக்கள் கொட்டகை செல்வது பற்றி வேட்பாளரை மற்றும் தொகுதி வாக்காளர் முதலில் பதில் சொல்ல வேண்டும். அதன் அடிப்படையில் கட்சியை தடை செய்ய முடியும். எந்த நடவடிக்கையும் எடுக்க விதி தெரியவில்லை என்றால், விசாரிக்க கூடாது.


கந்தன்
ஜன 29, 2025 13:22

நீதிமன்றமா....


Arul Narayanan
ஜன 29, 2025 13:19

2023ல் தேர்தல் நடந்து கொண்டு இருக்கும் போதே நீதிமன்றம் அணுகப் பட்டது என்று தான் நினைக்கிறேன். அப்போதே ஒன்றும் செய்யாத நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் இப்போது என்ன செய்து விட போகிறது?


Barakat Ali
ஜன 29, 2025 13:15

நல்லவேளை ...... நீதிபதி ஐயா சொந்தப்பெயரை, இருக்குமிடம் இதெயெல்லாம் மறக்கல .....


Barakat Ali
ஜன 29, 2025 13:10

யாரு அவரு ???? எப்போ ????இப்படியெல்லாம் கேட்குது ஹை ஹை கோர்ட்டு .....


SIVA
ஜன 29, 2025 13:09

கல்வி உணவு மருத்துவம் இது மட்டுமே இலவசமாக கொடுக்க பட வேண்டும், மற்ற எதையும் எந்த முறையில் கொடுத்தாலும் அது ஊழல் தான், இதை தடுக்கும் அதிகாரம் கோர்ட்டுக்கு இருந்தும் அது தடுப்பதற்கு முயற்சி கூட செய்ய வில்லை, தேர்தல் கமிஷனியும், அரசியல் கட்சிகளையும் விமரிசனம் செய்வது வேஸ்ட், தேர்தல் விதி மீறியதாக இது வரை எத்தனை பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர், ஒரு அதிகாரத்தை பயன்படுத்தி ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க முடிய வில்லை என்றால் சட்டம் இருந்து என்ன பயன் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை