உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்மிக போர்வை போர்த்துவது ஏன்?: இது உங்கள் இடம்

ஆன்மிக போர்வை போர்த்துவது ஏன்?: இது உங்கள் இடம்

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'கடவுள் இல்லை' என்ற ஈ.வெ.ரா., கொள்கையை வீதி வீதியாக, மேடைதோறும் முழங்கி, ஆட்சியை பிடித்த தி.மு.க.,வுக்கு எதிராக, குறிப்பாக, திராவிட கொள்கைக்கு எதிராக, அண்ணாமலையால் பா.ஜ., வேகமாக வளர்ந்து வருகிறது.அதனால், திராவிட கொள்கையை கொஞ்சம் தள்ளி வைத்து, 'ஆன்மிக ஆட்சி செய்கிறோம்' என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சட்டென, 'டிராக்' மாறுகிறார். 'சித்தர்கள், சான்றோர், ஆன்றோருக்கு விழா எடுத்து சிறப்பு சேர்க்கிற ஆன்மிக ஆட்சி, இப்போது தமிழகத்தில் நடக்கிறது' என, புளகாங்கிதம் அடைந்து உள்ளார் சேகர்பாபு.ஆன்மிகம் கடவுள் நம்பிக்கை சார்ந்தது. தி.மு.க.,வின் திராவிட கொள்கைக்கும், ஆன்மிகத்திற்கு அதிக துாரம். ஆன்மிக ஆட்சி என்றால், எல்லா மதமும் சரிசமம் என்று தானே அர்த்தம். அப்படியெனில், கீழ்கண்ட கேள்விகளுக்கு சேகர்பாபு பதிலளிப்பாரா? தமிழகத்தில் ஹிந்து கோவில்களுக்கு மட்டும் அறநிலையத் துறை ஏன்? பிற மதங்கள் ஆன்மிகம் அற்றவைகளா? ஆன்மிக ஆட்சி என்ற பெயரில், சிதம்பரம் போன்ற ஹிந்து கோவில் ஆகம விதிகளில் அறநிலையத் துறை தலையிடுவது விஷேச நாட்களில் கடவுளை தரிசிக்க அதிகமான கட்டணம் பிடுங்குவது  பெரிய கோவில்களில், பக்தர்களுக்கு போதிய வசதிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது கோவில் வளாகத்தில் கடைகள் அமைத்து, தனி நபர்கள் கொள்ளையடிக்க வழிவகுத்து கொடுப்பது கோவில் வருமானத்தை எடுத்து, ஆட்சியாளர்கள் சொகுசாக செலவிடுவது, போன்றவை தான் ஆன்மிக ஆட்சியா? தமிழகத்தில் பா.ஜ., விஸ்வரூபமாக வளர்ந்து, திராவிட மாடல் ஆட்சிக்கு ஆப்பு வைத்து வருவதால், ஆன்மிக ஆட்சி என்ற போர்வையா?ஒன்று மட்டும் உறுதி... நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்தாலும், ஹிந்து விரோத கட்சி தி.மு.க., என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பா.ஜ., தலைமையில், தமிழகத்திலும் ஹிந்துக்கள் போற்றக்கூடிய ஒரு ஆட்சி அமையும் நாள் வெகுதொலைவில் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Raghavan
ஜன 15, 2024 23:42

பாலுக்கு காவல் பூனைக்கு தோழன் என்கிற பழமொழி மாதிரி இந்த சேகர் பாபு. இப்போதெல்லாம் ஸ்டாலினை விட்டுவிட்டு இளையவரையே சுற்றி சுற்றி வருகிறார் என்றல் காரணம் இல்லாமல் இல்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 15, 2024 23:24

கோவில் கொடியவர்கள் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்று முத்தமிழ் வித்தவர் எழுதிய வசனம் அவரது கூட்டத்துக்கே பொருந்துகிறது ......


Rajagopal
ஜன 15, 2024 20:04

இதே சேகர்பாபு, உதயநிதி பங்கேற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டான். அதை மறக்கக்கூடாது.


duruvasar
ஜன 15, 2024 14:14

முழுக்க முழுக்க ஒரு நகைசுவை நடிகரான இவருக்கு வேறு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க வராது / முடியாது


Arul Narayanan
ஜன 15, 2024 13:31

குமரி மாவட்டத்திலேயே பாஜக நம்பர் ஒன் இடத்தை காங்கிரஸிடம் இழந்து விட்டது.


saravan
ஜன 15, 2024 11:42

பார்த்து சுப்பசகமா இருக்கணும் சிலர் ஐயங்கார் போர்வையில் மக்கள் மனதை மாற்றுவார்கள்...


Duruvesan
ஜன 15, 2024 11:29

திராவிட மாடல் ஆட்சின்னு இனி உருட்ட முடியாதாம்


vbs manian
ஜன 15, 2024 10:13

உண்டியல் நகைகள் மட்டுமே குறி. ஆன்மிக போரவையில் கட்சி பலப்படுத்தப்படுகிறது. முன்பு சில்லறை திருட்டுகள் நடந்தன. இப்போது தீவட்டி கொள்ளை.


sridhar
ஜன 15, 2024 09:19

பட்டியலில் ஒன்று முக்கியமாக விட்டு போயிவிட்டது - ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் இருநூறு கோவில்கள் இடிப்பு.


Velan Iyengaar
ஜன 15, 2024 08:04

ஹிந்து விரோத கட்சி என்று நீங்க முத்திரை குத்த பார்த்துக்கொண்டே இருங்க...மக்கள் உங்களை மதிக்கவே மாட்டாங்கஅதை தான் மறுபடி மறுபடி தேர்தலில் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்களே


sankar
ஜன 15, 2024 10:08

நீ உள்ள மாட்டிராதே


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை