உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க தாமதம் ஏன்?

ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க தாமதம் ஏன்?

சென்னை : 'பேரணிக்கு அனுமதி அளிக்க விதிகளை ஏற்படுத்திய பின்னும், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி அளிப்பதில் தாமதம் ஏன்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.விஜயதசமியை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ்., சார்பில், ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கக்கோரி, திருப்பூர் மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில், போலீசாருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லாததால், அம்மாவட்டங்களை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் ஜோதி பிரகாஷ், சேதுராஜ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இம்மனுக்கள், நீதிபதி ஜெயச்சந்திரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், “ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் அளித்த விண்ணப்பங்களை பரிசீலிக்கிறோம். வரும் 29ம் தேதிக்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும்,” என்றார்.மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி, “விதிகள் வகுக்கப்பட்ட பின்னும் பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை,” என்றார். இதையடுத்து, 'விதிகளை வகுத்தும் அனுமதி அளிப்பதில் தாமதம் ஏன்' என, நீதிபதி கேள்வி எழுப்பினார். விசாரணையை, வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைத்து, விண்ணப்பங்களின் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

என்றும் இந்தியன்
செப் 24, 2024 16:23

இதில் என்ன தப்பு. திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு அந்த விதியில் எழுதாத வாக்கியம் "இந்தியர்கள் இந்துக்கள் ஊர்வலம் என்றால் அதை எவ்வளவு தடை செய்ய முடியுமோ தடை செய்யுங்கள், அதுவே திமுக காங்கிரஸ் முஸ்லீம் கிறித்துவர்கள் ஊர்வலம் என்றால் தடை செய்யக்கூடாது" இதை திருட்டு திராவிட அடிமை போலீஸ் துறைக்கு வாய் மொழியாக ஆணையிட்டிருக்கின்றது.


sugumar s
செப் 24, 2024 12:33

DMK is afraid of RSS. In case they conduct and if people start recognizing RSS then DMK sanathan opposition concept will have dent plus BJP will develop in this process. So afraid and dilly dallying the permission


Barakat Ali
செப் 24, 2024 11:16

திமுகவை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஆர் எஸ் எஸ் ஐ ஆதரிக்க வேண்டும் ..... இந்த நிலைக்கு மக்களைத் தள்ளுகிறது திமுக .......


Apposthalan samlin
செப் 24, 2024 12:09

fake Ali


தஞ்சை மன்னர்
செப் 24, 2024 10:33

எல்லாம் இந்த திருட்டு கொலைகார பிரியாணி அண்ட கொள்ளைக்கார கும்பலிடம் இருந்து மக்களை காக்கத்தான் இவிங்க என்ன தேச பக்தர்களை இல்லை பதிவு செய்யப்பட்ட இயக்கமா திருட்டு தானம் மொள்ளமாரி தனம் கொண்ட பயலுகளை அட்ரஸ் கூட கொடுக்க முடியாத கூட்டம் தானே இவர்கள் அப்புறம் அனுமதி கொடுத்து கலவரம் வந்தால் யார் பொறுப்பு கட்டுப்பாடு இல்லாத கும்பல்


ramani
செப் 24, 2024 10:11

என்ன தேச விரோதிகளாக ஊர்வலம் போறாங்க உடனே அனுமதி தர? போறவங்க தேச பக்தர்கள். எப்படி தர முடியும்?


Kanns
செப் 24, 2024 09:38

Punish Concerned Police & Officials for being Mercenary Criminals of AntiNation & Anti- NativePeople Ruling DMK & Co. Otherwise People Losing Trust in Courts& Judges


புதிய வீடியோ