உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க தாமதம் ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க தாமதம் ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்த விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகும், அனுமதி வழங்க தாமதம் செய்வது ஏன்?,'' என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.தமிழகம் முழுதும், 58 இடங்களில் விஜயதசமியை ஒட்டி, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.இதற்கு அனுமதி கோரி, திருப்பூர் மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., சார்பில், போலீசாருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது; எந்த நடவடிக்கையும் இல்லாததால், உயர் நீதிமன்றத்தில் அம்மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்கள் ஜோதி பிரகாஷ், சேதுராஜ் வழக்கு தொடர்ந்தனர். மனுக்களில், 'ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊர்வலங்களுக்கு விதிமுறைகள் வகுத்து, கடந்த ஜனவரியில் உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது' என்று கூறப்பட்டது. இந்த மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம், ஊர்வலத்திற்கு நடத்த அனுமதி வழங்க விதிமுறைகளை உருவாக்கிய பிறகும் தாமதிப்பது ஏன் என கேள்வி எழுப்பியது.இதற்கு போலீசார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மனுக்களை பரிசீலனை செய்து வருகிறோம் என விளக்கம் அளித்தார்.அதேநேரத்தில் மனுதாரர்கள், விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகும் அனுமதி வழங்கவில்லை என புகார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

J.Isaac
செப் 24, 2024 14:32

ஊர்வலம் எதற்காக? இதனால் பொது மக்களுக்கு என்ன பயன்? லாரியிலும் வேன்களிலும் டிராக்டர்களிலும் நிறைய பேர் தண்ணியை போட்டுவிட்டு விநாயகரை தண்ணீரில் போட ஊர்வலம் செல்வதை பார்த்திருக்கிறேன்.


Kannan
செப் 24, 2024 08:26

Dravidian party state governments are shit scared of RSS, who are patriots of the highest order, whereas Dravidians parties are in general antithetical, Antinational


Ganapathy
செப் 23, 2024 21:29

இதைப்பார்க்கும்போது முன்பு அம்பாறையில் மிலாது நபி ஊர்வலத்தில் விடுதலை புலிகள் புகுந்து நன்கு உதைத்த உதை இன்றுவரை அங்குள்ள எந்த முஸ்லீமூம் மறுக்கவில்லை.விடுதலைப்புலிகளை ஆதரித்தாலும் எதிர்தாலும் இந்த விஷயத்துல அவர்களின் ஹிந்து ஆதரவு உணர்வை இன்று நேபாளம் பங்களாதேஷ் பாகிஸ்தான் என பழமைவாத இஸ்லாமிய தீவிரவாதம் ஹிந்துக்களுக்கு எதிராக தலை துக்கியுள்ள நிலையில் எல்லா ஹிந்துக்களும் ஆதரிக்க வேண்டும்.


பேசும் தமிழன்
செப் 23, 2024 20:49

ஊர்வலம் போக அனுமதி பெற வேண்டும் என்ற சட்டத்தை நீக்க வேண்டும்.... யாருக்கு அனுமதி கிடைக்கும்... ஆளுங்கட்சி மற்றும் அவர்களது ஜால்ரா கட்சிகளுக்கு மட்டுமெ அனுமதி கிடைக்கும்.... எதிர்கட்சி ஆட்களுக்கு அனுமதி எளிதில் கிடைக்காது..... நீதிமன்றம் தலையில் குட்டிய பின்பு தான் அவர்களுக்கு அனுமதி கிடைக்கும்.


பேசும் தமிழன்
செப் 23, 2024 20:46

நாட்டின் மீது அக்கறை கொண்ட... தேச பக்தி இயக்கம் ஊர்வலம் போக அனுமதி பெற ஆயிரம் தடைகள்.... ஆனால் தீவிரவாத குழுக்கள் ஊர்வலம் போக..... உடனே அனுமதி கிடைக்கும்.... இது தான் விடியாத அரசின் சாதனை..... ஒரு சார்பாக நடந்து கொள்ளும் அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தைத் பதிவு செய்ய வேண்டும்.


தமிழ்வேள்
செப் 23, 2024 20:43

கள்ள பாஸ்போர்ட் வழக்கில் சிக்கியவரை தலைமைக்காவலராக அமர்த்தி அழகு பார்க்கும் அடிமை திராவிடம் தேச பக்தி இயக்கத்தின் நடவடிக்கைகளை எப்படி அனுமதிக்கும்? முட்டுக்கட்டை போடும் சகல குசும்பு வேலைகளையும் குறைவற செய்யும்.. உச்ச நீதிமன்றத்தில் வக்காலத்து வாங்க வில்சன் வருவான் பாருங்கள்....


Sathyanarayanan Sathyasekaren
செப் 23, 2024 20:28

தமிழக போலீசுக்கு இதைவிட வெட்கக்கேடு எதுவும் இல்லை. அவர்களை சொல்லி தப்பில்லை, இந்த திருட்டு திராவிட கொள்ளைக்காரர்களும் தெரிந்த வோட்டை போடும் சொரணை இல்லாத ஹிந்துக்களைத்தான் திட்டவேண்டும்.


T.sthivinayagam
செப் 23, 2024 20:27

பெரும்பாலான ஹிந்துக்களை இறை சேவை செய்யவிடாமல் தடுக்கிறார்கள் அதை ஏன் நீதிமன்றங்கள் கேள்வி கேட்பது இல்லை என் ஆன்மீகம் சார்ந்தவர்கள் கேட்கின்றனர்


G Mahalingam
செப் 23, 2024 20:21

ஆர்எஸ்எஸ் என்றாலே என்றாலே திமுகவுக்கு பயம். சூடு சுரனை இல்லாத ஆட்சி. கோர்ட்டில் எவ்வளவு குட்டு பட்டாலும் அதை பற்றி கவலைபடாத ஆட்சி.


வைகுண்டேஸ்வரன்
செப் 23, 2024 19:54

ஆர் எஸ் எஸ் வளர்ச்சியா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை