ஆசிரியர் போட்டி தேர்வு நடத்துவதில் பிடிவாதம் ஏன்?
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று, தேர்வர்கள் கோரி வரும் நிலையில், வரும் 12ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என்று, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னும், திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. தேர்வர்களின் நலன் கருதி, தேர்வை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். தேர்வுகளில் விடைத்தாள்கள் மாறுவதை தவிர்க்க, ஓ.எம்.ஆர்., விடைத்தாள்களின் நகல்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், 2019 மற்றும் 2022 ஆண்டுகளில் நடந்ததுபோல கம்ப்யூட்டர் அடிப்படையில் தேர்வை நடத்த வேண்டும். அன்புமணி தலைவர், பா.ம.க.,