தமிழகத்தில் பரவலான மழை; புதுக்கோட்டையில் அதிகம்!
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கன மழை கொட்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவு விபரம் பின்வருமாறு:புதுக்கோட்டை- 138 மி.மீ.,திருமயம் (புதுக்கோட்டை)- 116 மி.மீகாரையூர் (புதுக்கோட்டை) -109 மி.மீசின்னக்கல்லார் (கோவை) - 108 மி.மீஅன்னவாசல் (புதுக்கோட்டை)- 81.2 மி.மீ.,துவாக்குடி (திருச்சி)- 80 மி.மீ.,பெருங்களூர் (புதுக்கோட்டை) - 79 மி.மீசெங்கம் தாலுகா அலுவலகம் (திருவண்ணாமலை)- 76.2 மி.மீஅரிமளம் (புதுக்கோட்டை)- 72.4 மி.மீஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை)- 69 மி.மீசிவகங்கை- 68.6 மி.மீ.,அறந்தாங்கி- 65 மி.மீஆரணி தாலுகா அலுவலகம்( திருவண்ணாமலை) - 60.2 மி.மீஆலங்குடி (புதுக்கோட்டை)- 60 மி.மீவால்பாறை பிஏபி- 56 மி.மீவால்பாறை தாலுகா அலுவலகம்- 54 மி.மீநாகுடி (புதுக்கோட்டை)-50.4 மி.மீஎறையூர் (கள்ளக்குறிச்சி)- 50 மி.மீபட்டுக்கோட்டை- 48.5 மி.மீகீரனூர் (புதுக்கோட்டை)- 48.4 மி.மீஉடையாளிபட்டி-47 மி.மீஇளையாங்குடி- 43 மி.மீவெட்டிக்காடு- 42.6 மி.மீசோலையார்- 42 மி.மீசிவகங்கை- 42 மி.மீதீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்)- 41.2 மி.மீஆதனகோட்டை (புதுக்கோட்டை)- 41 மி.மீசூரப்பட்டு (விழுப்புரம்)- 40 மி.மீமணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி)- 40 மி.மீவேங்கூர் (கள்ளக்குறிச்சி)- 40 மி.மீதிருப்பலப்பந்தல் (கள்ளக்குறிச்சி)- 38 மி.மீ.,காரைக்குடி (சிவகங்கை)- 38 மி.மீ