உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பரவலாக மழை; தென்காசி, நீலகிரியில் அதிகம்!

தமிழகத்தில் பரவலாக மழை; தென்காசி, நீலகிரியில் அதிகம்!

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் கடனா அணையில் 239 , நீலகிரி மாவட்டம் குன்னூரில் 215 மி.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.தமிழகத்தில், கடந்த 10 நாட்களாக, மழை இல்லாத நிலையில், நேற்று திடீரென பரவலாக மழை கொட்டியது. தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசியில் கனமழை கொட்டி தீர்த்தது. லட்சத்தீவு - குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vytx5yh9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் புயலாக வலுப்பெற சாத்தியம் இல்லை. ஜனவரி மாதம் 2வது வாரத்தில் டெல்டா-தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8:30 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு: * கடனா அணை- 239 * குன்னூர்- 215 * சிவகிரி- 171* வீரபாண்டி தேனி- 120* ராமநதி அணை- 120* கோத்தகிரி- 114* சேரன்மாதேவி- 104 * ஆயிக்குடி- 103 * அம்பாசமுத்திரம்- 94 * மாஞ்சோலை- 92* சேர்வலார் அணை- 91 * அடார் எஸ்டேட்- 90 * பில்லூர் அணை- 82* கக்கச்சி- 79 * கருப்பா நதி அணை- 77 * போடிநாயக்கனூர்- 73 * கீழ் கோத்தகிரி- 73 * கெத்தை- 66 * கிண்ணக்கொரை- 63 * சாம்ராஜ் எஸ்டேட்- 60 * நாலு முக்கு- 52


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை