உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீலகிரியில் 12 பேரை தாக்கி கொன்ற காட்டு யானை ராதாகிருஷ்ணன்; பிடிக்க வனத்துறை உத்தரவு

நீலகிரியில் 12 பேரை தாக்கி கொன்ற காட்டு யானை ராதாகிருஷ்ணன்; பிடிக்க வனத்துறை உத்தரவு

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலியில், 12 பேரை தாக்கி கொன்ற, 'ராதாகிருஷ்ணன்' என, அழைக்கப்படும் காட்டு யானையை பிடிக்க, முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கையை கூடலூர் வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், சேரம்பாடி, பாடந்துறை, தேவர் சோலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப் பகுதிகளிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி அப்பாவி மக்களை காட்டுயானை தாக்குகின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.இதனால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.சமீபகாலமாக, கூடலூர் ஓவேலியில், 12 பேரை தாக்கி 'ராதாகிருஷ்ணன்' என, அழைக்கப்படும் காட்டு யானை கொன்றது. இந்த காட்டு யானையை பிடிக்க, முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கையை கூடலூர் வனத்துறையினர் துவங்கியுள்ளனர். காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rajendra kumar
செப் 17, 2025 00:41

யானைகளின் இடத்தை அபகரித்தவன் மனிதன். அவனை வெளியேற்ற வேண்டும்.


KOVAIKARAN
செப் 16, 2025 11:47

மேலும், பெயரெல்லாம் வைத்து அழைப்பதால், இது காட்டு யானையாக இருக்கமுடியாது.


KOVAIKARAN
செப் 16, 2025 11:45

அப்பாவி மக்களை காட்டுயானை தாக்குகின்றன என்று ஏன் பிரசுரிக்க வேண்டும்? மனிதர்கள் அப்பாவிகளா அல்லது யானை வழித்தடங்களை அழித்து பணம் சம்பாதிற்பாக ரிசார்ட்டுகள் கட்டி வனத்தில் உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் அலையவிட்ட பாவிகளா என்று யானைகளுக்கு எப்படித் தெரியும்?


PR Makudeswaran
செப் 16, 2025 15:06

இவர்கள் பாவிகள். அதிகாரிகள் அரசியல்வாதிகள்.வாயில்லா ஜீவன்களை வேட்டையாடி பணம் பார்த்தவர்கள்.


Vasan
செப் 16, 2025 10:59

Where is Radhakrishnan now?


சமீபத்திய செய்தி