உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீலகிரி, குமரியில் 10 இடங்களில் காட்டுத்தீ

நீலகிரி, குமரியில் 10 இடங்களில் காட்டுத்தீ

சென்னை: நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 10 இடங்களில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் குளிர் காலம் முடிந்து, கோடைக் காலம் துவங்கும்போது, பிப்., மார்ச் மாதங்களில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரிக்கும். நேற்று, நீலகிரி மாவட்டத்தில், இரண்டு இடங்களிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில், எட்டு இடங்களிலும் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் வாயிலாக பெறப்பட்ட தகவல் அடிப்படையில், கள பணியாளர்கள் உஷார்படுத்தப்பட்டனர். விரைந்து செயல்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை