உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., மீது பழி சுமத்திய பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா? சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி

தி.மு.க., மீது பழி சுமத்திய பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா? சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி

சென்னை : தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி அறிக்கை: தி.மு.க., ஆட்சியின் நலத்திட்டங்களால், மகளிர் முன்னேறுவதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில், தி.மு.க., அரசின் மீது பழி போட முயற்சிப்பதும், சில நாட்களிலேயே உண்மை தெரியவந்து, அந்த முயற்சி தோல்வி அடைவதும் வாடிக்கையாகி விட்டது.அந்த வகையில், சென்னை இ.சி.ஆரில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட சந்துரு, அ.தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தவர் என, தன் பின்புலத்தை அவரே ஒப்புக்கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.தி.மு.க., கொடியை காட்டி, கட்சி மீது பொய்யான வீண்பழி சுமத்தி, சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல், போக்சோ குற்றங்கள் என அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும் தான், பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது, ஒவ்வொரு குற்றச்செயலின் பின்புலத்தையும் ஆராய்ந்தால் தெரிய வருகிறது.தி.மு.க., மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள், இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வர். வீராவேசமாக அறிக்கை விட்ட பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

PR Makudeswaran
பிப் 03, 2025 10:10

ஏன் தி மு க பொய் சொல்லியதே இல்லையா? பழைய சரித்திரங்களை படித்து பாருங்கள். பொய் சொல்லியே வளர்ந்த கட்சி.


veeramani
பிப் 03, 2025 10:08

செட்டிநாடு தமிழனின் கருத்து அன்றைய அண்ணாதுரையால் துவங்கப்பட்டு தமிழ்த்தாயின் மகனாக இருந்த கலைஞர் கருணாநிதியினால் பலவித நெருக்கடி, பிரச்சினைகள், சங்கடங்கள் போன்றவற்றை புறம்தள்ளி செம்மையாகி வளர்க்கப்பட்ட ஒரு தமிழரின் கட்சி திராவிட முன்னேற்ற கழகம். தற்போதைய திராவிட முன்னேற்ற கழகம் தலைவர் மதிப்பிற்குரிய தமிழாக்கி முதல்வர் ஸ்டாலின் அவர்களால் நன்கு நிறுவகிக்கப்பட்டு கொண்டுள்ளது. தென் மாவட்ட மக்கள் இன்றும் குடும்ப ரீதியாக இந்த கட்சிக்கு வாக்கு என்றும் அளிக்கிறார்கள். ஆனால் தற்போதைய அரசில் ஒரிஜினல் தி மு க அமைச்சர்களை தேட வேண்டியுள்ளது. எனக்கு அறிந்தமட்டில் மதிப்பிற்குரிய துரைமுருகன், பொன்முடி, நேரு, சுப்பிரமணியன் , திண்டுக்கல் பெரியசாமி, மதுரை மூர்த்தி அன்னான், தூத்துக்குடி கீதா ஜீவன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன் போன்றவர்கள் தவிர மற்றவர்கள் ஆற்று கட்சியில் இருந்து வந்தவர்கள் . தென் மாவட்டங்களில் அன்றைக்கு நாட்களில் கட்சியை காப்பாற்றியவர் பலர். மதுரையில் திரு பழனிவேள்ராஜன், சிவகங்கையில் கிருஷ்ணன், செட்டிநாட்டில் தென்னரசு, விருதுநகரில் தங்கபாண்டியன், தூத்துக்குடியில் பெரியசாமி , திருநெல்வேலியில் ஆவுடையப்பன், திண்டுக்கல்லில் பெரியசாமி, சாக்கிரபாணி, ராம்நாட்டில் பவானி ராஜேந்திரன் குடும்பம்.. ஆனால் ஆட்சி செய்யும்போது பதவி சுகம் பெறுவது என்னமோ அதிகமாக மாற்று கட்சியினர்தான். கட்சியின் தலைமை சிந்திதிக்க வேண்டும். மாற்று கட்சியினர் எவரும் கட்சியின் வளர்ச்சிக்கு ஒருபோதும் உழைத்தது இல்லை. வரும் காலங்களில் அன்றைய தலைவர்களையும் அவர்களின் ரத்தம் சிந்தி கட்சி வளர்த்த நிலைமைகளையும் கணக்கில் கொள்ளவேண்டும். அவர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்