உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயை கூட்டணிக்கு பழனிசாமி அழைப்பதா? தினகரன் ஆவேசம்!

விஜயை கூட்டணிக்கு பழனிசாமி அழைப்பதா? தினகரன் ஆவேசம்!


Deprecated: mb_convert_encoding(): Handling HTML entities via mbstring is deprecated; use htmlspecialchars, htmlentities, or mb_encode_numericentity/mb_decode_numericentity instead in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 350

சென்னை: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி: தமிழக அரசையும் ஆளும் தரப்பையும் விமர்சிப்பது போல, சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புவதும், அதற்கு ஆளும் தரப்பில் அமைச்சர்கள் பதில் அளிப்பதும் வேடிக்கையான நிகழ்வாக உள்ளது. எல்லாருமாக சேர்ந்து மக்களை முட்டாள்கள் ஆக்குகின்றனர் என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது. ஜாதி பாகுபாட்டின் அடிப்படையில் நடக்கும் ஆணவ கொலைகளைத் தடுக்கும் நோக்கோடு, தமிழகத்தில் தனி சட்டம் கொண்டு வந்திருப்பது வரவேற்புக்குரியது. கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன், ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவிட்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க., கடந்த நான்கு ஆண்டுகளில் எதையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனால், வரும் தேர்தலுக்குள் விரைந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். துாய்மைப் பணியாளர்கள், தங்கள் உரிமைகளுக்காக போராடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் துாய்மை பணியாளர்களை கைது செய்வது சரியான நடவடிக்கை அல்ல. வரும் தேர்தலுக்கு, விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. அதனால், தமிழகத்தில் நான்கு முனை போட்டி அமையும். அ.தி.மு.க., பழனிசாமி தன் கூட்டங்களுக்கு, தானே ஏற்பாடு செய்தவர்களைப் பார்த்து, வெற்றிக் கூட்டணி அமைந்து விட்டது என பேசுகிறார். அதாவது, த.வெ.க., கொடியோடு இருப்பவர்களைப் பார்த்துத்தான் அப்படி பேசி, விஜயை மறைமுகமாகக் கூட்டணிக்கு அழைக்கிறார். அந்தளவுக்குத்தான் அ.தி.மு.க.,வை பழனிசாமி வழிநடத்துகிறார். இவ்வாறு தினகரன் கூறினார். பல்கலை சட்டத்திருத்தம் திரும்ப பெற வேண்டும் மாணவ சமுதாயத்தின் நலன், உயர் கல்வியை மேம்படுத்துவதாக கூ றும் தனியார் பல்கலை சட்டத்திருத்தம், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளை முழுமையாக, தனியார் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும் சூழலை உருவாக்கியுள்ளது. இது, அமலுக்கு வந்தால், அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் படிக்க கூடிய மாணவர்களுக்கு, கல்வி உதவிக் கட்டணம், இலவசக் கல்வி, இடஒதுக்கீடு ஆகிய சலுகைகள் நிறுத்தப்படும். கல்விக் கட்டணம் பலமடங்கு உயரும். அறநோக்கத்தோடு துவங்கப்பட்ட கல்லுாரிகள், வியாபாரத்தை நோக்கி நகரும். அதனால், தங்களின் பணி பாதுகாப்பு, உரிய நேரத்தில் ஊதியம், ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு ஆகிய நடைமுறைகள் அறவே ஒழிக்கப்படும் என, ஆசிரியர்கள் வேதனை நியாயமானது. அதனால், சட்டத்திருத்தத்தை, திரும்பப்பெற வேண்டும். - தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

panneer selvam
அக் 19, 2025 10:53

Some parties like Amma Munetra Kazagam , Puthiya Tamilagam , are visible just on media announcement . It is the fault of media to give extra space for these kind of parties , otherwise , they are nothing


Mani . V
அக் 19, 2025 04:25

இந்த இருபது ரூபாய் டோக்கன் பிராடுக்கு ஏன் ஆவேசம்? இந்த பிராடும், ஐந்து கட்சி அமாவாசையும் சேர்ந்துதான் ஆர். கே. நகர் மக்களுக்கு இருபது ரூபாய் டோக்கன் கொடுத்து ஏமாற்றிய மொள்ளமாரிகள்.


புதிய வீடியோ




அஜய் ரஸ்தோகியிடம் ஆதாரங்களை அளிக்க தவெக திட்டம்! Vijay

பொது

3 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771



இன்றைய காலை முக்கியச் செய்திகள்

பொது

4 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771





தினமலர் எக்ஸ்பிரஸ்

செய்திச்சுருக்கம்

7 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771



இன்றைய ராசிபலன்

ஆன்மிகம்

6 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771





8 சிறப்பு ரயில்கள் ரத்து: எவை எவை? முழு லிஸ்ட் Eight special trains cancelled chennai chengalpattu

பொது

15 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771



தினமலர் எக்ஸ்பிரஸ்

செய்திச்சுருக்கம்

15 hour(s) ago
Warning: Undefined array key "newscomment" in /usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line 771