உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பிரதமர் மோடி வருவாரா?

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பிரதமர் மோடி வருவாரா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: அயோத்தியில் ஜன., 22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி, ராமர் தொடர்புடைய ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரத்திற்கு இன்று, ஜன.,20ல் வருகிறார்.நாளை மதுரை வழியாக டில்லி செல்கிறார். மதுரை வரும்போது மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்வாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் ராமருக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் தொடர்பு உண்டு என்கின்றனர் கோயில் பட்டர்கள்.கோயில் பட்டர்கள் ராஜா மற்றும் செந்தில் கூறியதாவது: சொக்கநாதர் லீலைகளில் மாயபசுவை வதைத்த படலம் என்ற லீலை உண்டு. சேர, சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டை அபகரிக்க நாகபாம்பை அனுப்பியபோது சொக்கநாதர் அம்பு எய்தி முறியடித்த இடமே மதுரை நாகமலை. அடுத்ததாக யானையை அனுப்பிய போது மாரியம்மன் தெப்பக்குளம் கரையில் உள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து நரசிம்ம பாணத்தை அனுப்பி முறியடித்த இடமே ஒத்தக்கடை யானைமலை. அதன் கீழ்தான் நரசிம்மர் கோயில் உள்ளது.அனந்தகுண பாண்டியன் ஆட்சிசெய்தபோது மீண்டும் சேர, சோழ மன்னர்கள், மதுரையை அபகரிக்க தீயகுணம் கொண்ட பசுவை அனுப்பினர். அது பயிர்களை அழித்தது. மக்களும், மன்னரும் சுவாமியை வேண்டினர். அவர் தன் வாகனமான காளையை அனுப்பி முறியடித்தார். அந்த இடமே அழகர்மலை. இதற்கு 'ரிஷபகிரி' என்ற இன்னொரு பெயரும் உண்டு. ரிஷபம் என்பது காளையை குறிக்கும்.சீதையை தேடி ராமரும், லட்சுமணனும் மதுரை வழியாக வந்தபோது இந்த மலை குறித்து அகத்தியரிடம் கேட்டு சுவாமியின் லீலைகளை அறிந்துக் கொண்டனர். பின், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து பொற்றாமரைக்குளத்தில் அம்மன், சுவாமியை தரிசித்தபோது 'சீதையை தேடி தென்கிழக்கு திசை நோக்கி செல்' என ஓர் அசரீரி ஒலித்தது.அதன்படி, அவர்கள் ராமேஸ்வரம் நோக்கி சென்றபோது, எதிரே சீதையை சந்தித்துவிட்டு மோதிரத்துடன் ஆஞ்சநேயர் திரும்பி வந்தார். பின்னர் சீதையை மீட்டு லட்சுமணன், ஆஞ்சநேயருடன் அயோத்தி செல்வதற்கு முன் நான்கு பேரும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து தரிசித்தனர். இதன் பிறகே ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.இத்தகவல்கள் பரஞ்ஜோதி முனிவர் எழுதிய திருவிளையாடற்புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. சீதை இருக்கும் இடம் தெரியாமல் தவித்த ராமருக்கு வழிகாட்டியது சொக்கநாதர் தான். அதன் காரணமாகத்தான், தம்பதி சமேதரராக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து ராமர், சீதை தரிசித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
ஜன 20, 2024 15:28

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விஷயத்தில் கடுமையான கோபத்தில் உள்ள மதுரைக்காரர்களை சந்திக்க இவருக்கு தைரியம் உள்ளதா?


Gopal,Sendurai
ஜன 20, 2024 20:38

வேணு உன்னோட கம்பிகட்ற கதையெல்லாம் அறிவாலயத்திலயே வச்சிக்க இங்கே எடுபடாது.


NicoleThomson
ஜன 20, 2024 21:43

செங்கல் திருடி சென்று விட்டான் ஒருத்தன் என்று அவரு சொன்னா?


vijay
ஜன 20, 2024 15:15

Thanjavur periya kovil ku


NicoleThomson
ஜன 20, 2024 21:44

அங்கே செல்ல கடவுள் நம்பிக்கை இல்லாத சர்வாதிகாரியை முதலில் அனுப்பி வைக்கலாம்


Dharmavaan
ஜன 20, 2024 11:25

me


g.s,rajan
ஜன 20, 2024 10:42

பொதுவாக இவ்வுலகில் இப்பிறவியில் மனிதனாகப் பிறந்தவர்கள் செய்த பாவங்கள் தீர கோயில் கோயிலாகச் செல்வது வழக்கம்....


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 20, 2024 09:50

ராமர் காலம் திரேதா யுகம் என்று சொல்வார்கள் (சுமாராக 5000 ஆண்டுகளுக்கு முன்). அப்போது மதுரை நகரம் மற்றும் மூவேந்தர்கள் இருந்தார்களா? ராமேஸ்வரம் என்ற இடமே ராமர் மணலில் சிவலிங்கம் செய்து வழிபட்ட பின்னர் தோன்றியது. மதுரை ஆலயம் சுமாராக 2000 ஆண்டுகளுக்கு முன் உருவானது. மிகவும் சந்தேகமாக இருக்கிறது.


Rengarajan V
ஜன 20, 2024 23:11

5000 வருடங்களுக்கு முன் என்பது தவறு. தற்போதைய கலியுகம் தொடங்கி 5124 வருடங்கள் ஓடிவிட்டன. கலியுகத்தின் கால அளவு 432000 வருடங்கள். அதற்கு முந்தய துவாபர யுகத்தின் கால அளவு 864000 வருடங்கள். அதாவது கலியுகத்தின் இரு மடங்கு. துவாபர யுகத்திற்கு முந்தய யுகமான திரேதா யுகத்தின் கால அளவு கலியுகத்தின் மும்மடங்கான 1296000 வருடங்கள். திரேதா யுகத்தின் ஆரம்ப காலத்தில்தான் ராமர் அவதாரம் நிகழ்ந்தது. நமது பஞ்சாங்கங்களில் சாலி, கலி, பசலி, கொல்லம், ஹிஜ்ரி, ஆங்கிலம் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் இந்த யுகக்கணக்குகளை நமது ஜோதிட நூல்களிலும் ஸ்ரீமத் பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற நூல்களிலும் காணலாம். எனவே தாங்கள் குறிப்பிட்ட வருடக்கணக்குகள் எதுவும் இங்கு பொருந்தாது. இராவணன் சிறந்த சிவ பக்தர். சிவ பக்தரைக் கொன்றதால் ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷத்தைப் போக்குவதற்காக ராமர் ராமேஸ்வரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து தனது தோஷத்தைப் போக்கிக்கொண்டார் என்பது தல வரலாறு.


ஆரூர் ரங்
ஜன 20, 2024 09:23

மதுரைக்கு வந்து திமுக விடம் பெற்ற சிறப்பு மரியாதை தெரிந்திருக்கும்????.


rajan
ஜன 20, 2024 09:07

yes. just to show their presence.


RADE
ஜன 20, 2024 08:33

இதை எல்லாம் இதற்கு முன்பு சொன்னது இல்லை, பரவாயில்லை இப்பொழுது ஆவது மக்களுக்கு தெரியும் படி சொல்கிறீர்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று ஒன்று உள்ளது இல்லையா..


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி