மேலும் செய்திகள்
கல்பாக்கத்தில் தடையின்றி மின் உற்பத்தி
02-Dec-2024
சென்னை: ஆறு ஆண்டுகளாக உற்பத்தி முடங்கியுள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தியை துவக்குமாறு, இந்திய அணுமின் கழகத்தை, தமிழக மின் வாரியம் வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்திய அணு மின் கழகத்திற்கு, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணு மின் நிலையம் உள்ளது. இங்கு தலா, 220 மெகா வாட் திறனில், இரு அணு உலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும், 331 மெகாவாட் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் பராமரிப்பு பணிக்காக, 2018 ஜன., 30ல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், அங்கிருந்து தமிழகத்திற்கு ஒதுக்கியதில் பாதி மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. தமிழகத்தில் ஜனவரி முதல் மின் தேவை அதிகரிக்க உள்ளது. எனவே, ஆறு ஆண்டுகளாக மின் உற்பத்தி முடங்கியுள்ள கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில், விரைவில் உற்பத்தியை துவக்குமாறு, அணு மின் கழகத்தை, மின் வாரியம் வலிறுயுத்தியுள்ளது.
02-Dec-2024