உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டசபை தேர்தலை சமாளிக்கவா: அரசு மீது எழும் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டசபை தேர்தலை சமாளிக்கவா: அரசு மீது எழும் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசு, சீனியாரிட்டி பட்டியல் தயாரிப்பதை தாமதம் செய்து வேண்டுமென்றே பொறுப்பு டிஜிபி நியமனம் செய்துள்ளதாகவும், சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு இவ்வாறு செய்துள்ளதாகவும், போலீசார், அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.தமிழக போலீஸ் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றவுடன் புதிய டிஜிபி பொறுப்பேற்க வேண்டும். இதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதை தமிழக அரசு சரி வர பின்பற்றாமல், கடைசி நேரத்தில் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொண்டது என்பது அரசியல் கட்சியினரின் குற்றச்சாட்டு.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pappazjl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவ்வாறு தயாரிக்கப்பட்ட பட்டியலில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரி டி.ஜி.பி., ராஜிவ் குமார், போலீஸ் அகாடமி இயக்குனர் டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோட் உட்பட, 11 அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், தேர்வு நடைமுறைகள் நிறைவடையாததால், டி.ஜி.பி., அலுவலகத்தில், நிர்வாக பிரிவு டி.ஜி.பி.,யாக பணியாற்றிய வெங்கட்ராமனை, பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இவர், சீனியாரிட்டி பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருந்தவர். வெங்கட்ராமன் பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில், அவரை காட்டிலும் சீனியாரிட்டி கொண்ட டி.ஜி.பி., அந்தஸ்து அதிகாரிகள் எட்டு பேர் பங்கேற்கவில்லை. சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் இந்நடவடிக்கை போலீசார் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.உரிய காலத்தில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தால், தகுதியான நபர் டிஜிபியாக நியமனம் பெற்றிருப்பார். 'ஆனால், சட்டசபை தேர்தல் நேரத்தில் வேண்டாத அதிகாரி டிஜிபி பதவியில் இருந்தால், தங்களுக்கு சிக்கல் என்று கருதி மாநில அரசு இப்படி வேண்டுமென்றே குளறுபடி செய்து விட்டதாக' போலீசார், அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது.

அண்ணாமலை கூறியது என்ன?

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''தமிழகத்தில் சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற உடன் புது டிஜிபி பதவி ஏற்க வேண்டும். அவருக்கு பிறகு பதவி மூப்பில் முதல் 3 இடத்தில் உள்ளவர்களில் ஒருவர் பதவி ஏற்க வேண்டும். பதவி மூப்பில் 9வதாக இருக்கும் நபர் டிஜிபி ஆக முடியாது. அப்படி இருக்கும் போது காவல்துறை எப்படி விளங்கும்? ''பதவியேற்கும் நிகழ்வில் முதல் 8 இடங்களில் இருக்கும் அதிகாரிகள் செல்லவில்லை. இது மிகப்பெரிய தவறு. இதற்குமுன்பு இந்த மாதிரி தவறு நடந்தது இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Natarajan Ramanathan
செப் 02, 2025 23:27

நல்லவர்கள் நல்லதையே தயங்கி தயங்கி செய்யும்போது தீயமுக போன்ற கொடியவர்கள் கெட்டதை துணிந்து செய்கிறார்கள்... 2026 தேர்தலோடு குடும்பக்கட்சி மண்ணோடு மண்ணாக போகவேண்டும்.


N PALANISAMY
செப் 08, 2025 10:41

குடும்ப கட்சிக்கு சாபம் - ஓகே.... குடும்பம் இல்லாதவனின் கட்சி அதாவது இரண்டு நண்பர்களுக்காக நடக்கும் கட்சிக்கு /ஆட்சிக்கு என்ன சாபம்?


Tamilan
செப் 02, 2025 21:50

பரிசுத்த செந்தமிழர்கள்மீது சேற்றை வாரியிறைக்கும் மதவாத கும்பலின் திட்டமிட்ட அரசியல் சதி


SIVA
செப் 02, 2025 21:22

தகுதியில்லாத ஒருவரின் பதவியேற்பில் இந்த அதிகாரிகள் பங்கேற்கவில்லை , தேர்தலின் போது இந்த அதிகாரிகள் திமுகவிற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் ரிசல்ட் திமுகவிற்கு சங்கு தான் , கடவுள் இருக்கான் குமாரு , இறைவன் மிக மிக பெரியவன் ....


GMM
செப் 02, 2025 19:23

சீனியாரிட்டி பட்டியல் தாமதம். பொறுப்பு டிஜிபி நியமனம். சீனியாரிட்டி பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருந்தவர் நியமனம். இதனை சமாளிக்க தெரியாமலா திமுக இருக்கும். இந்திய உச்ச நீதிமன்றத்தில் திமுக அறிவாலய ஆதரவாளர்கள் ஏராளம். சட்டசபை தேர்தலை எதிர் கொள்ள மாநில போலீஸ் தயவு தேவை. பொறுப்பு போலீசை கொண்டு தேர்தல் ஊழியர்களை வழிக்கு கொண்டு வர முடியும். தேர்தல் ஆணையம் என்ன தணிக்கை செய்தாலும் திமுக கூட்டணி அமைத்து, ஓட்டுக்கு விலை நிர்ணயம் செய்து வெற்றி விளிம்பில் நிற்கும். தோற்றல் பெரிய ரகளை பண்ணும். பணம் பாதாளம் வரை பாயும்.


indi
செப் 02, 2025 18:37

Oppari vainga,governor idam Manu Kodunga.


HoneyBee
செப் 02, 2025 20:46

அடிமைகள் செத்து மடிங்க.. வெட்கம் இல்லாமல் இப்படி


Palanisamy Sekar
செப் 02, 2025 18:27

சட்டம் ஒழுங்கு ஏற்கனவே சந்திசிரிக்கின்றது. ஊழலும் லஞ்சமும் தலைவிரித்தாடுகின்றது. கொலைகளும் கொள்ளைகளும் பாலியல் சீண்டல்களும் அனுதினமும் குறைவில்லாமல் தொடர்கின்றது. போலீஸ் என்று ரூ துறை இருக்கா என்கிற அளவில் நாறும்போது, இப்போது கோஷ்டி கானம் வேறு. விளங்குமா மாநிலம். பொறுப்பற்ற முதல்வர் ஊர் சுற்றிப்பார்க்க குடும்பத்தோடு பிகினிக் போய்விட்டார். அவருக்கு அடுத்து உள்ள திணிக்கப்பட்ட வாரிசான து முதல்வருக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது. இந்த முறையோடு திமுகவை தோற்கடிக்காமல் போனால் இந்த மாநிலத்தை எவ்வளவு கடவுள்கள் வந்தாலும் காப்பாற்றவே முடியாது.


திகழ்ஓவியன்
செப் 02, 2025 19:01

சட்டம் ஒழுங்கு ஏற்கனவே சந்தி சிரிக்கின்றது :: அப்ப என் இங்கு இருக்க ஓடு சந்தி சிரிக்காத பிஜேபி RULING ஸ்டேட் கு என்ன பயமா


போராளி
செப் 08, 2025 19:25

ஓட்டு திருட்டு உலகமே காரி துப்புவது.நீ என்னடான்னா சொம்பு தூக்கிட்டு அலையுற


Anantharaman Srinivasan
செப் 02, 2025 17:34

பொறுப்பு டிஜிபி நியமனத்தை சட்டசபை தேர்தல் வரை 8 மாதகாலம் நீடித்து வைக்க முடியுமா..? Not possible ...


V.Mohan
செப் 02, 2025 17:32

ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்பது போல,எப்போதும் தவறு செய்யும் விடியாத விடியல் அரசு இந்த தவறை தைரியமாக செய்கிறது. R B I கவர்னர் நியமனத்தின் போது மத்திய அரசை குறை சொன்ன வர் தற்போது செய்திருப்பது என்ன சிறப்பான செயலா?? மாமியார் உடைத்தால் மண்குடம்...-..மருமகள் உடைத்தால் பொன்குடமா??


என்றும் இந்தியன்
செப் 02, 2025 17:21

1000% உண்மை. இதை வைத்து கள்ள ஒட்டாளர்களை பாதுகாக்க அதாவது அவர்கள் திமுகவிற்கு ஓட்டு போட உதவி செய்ய


babu
செப் 02, 2025 16:54

ஆமாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை