உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை பஸ்கள் ஓடுமா? ஓடாதா?: தொழிற்சங்கங்கள், அமைச்சர் மாறுபட்ட கருத்து: மக்கள் குழப்பம்

நாளை பஸ்கள் ஓடுமா? ஓடாதா?: தொழிற்சங்கங்கள், அமைச்சர் மாறுபட்ட கருத்து: மக்கள் குழப்பம்

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. அதேநேரத்தில் தொ.மு.ச உள்ளிட்ட தொழிற்சங்க பணியாளர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதனால் நாளை பஸ்கள் ஓடுமா, ஓடாதா என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம், 19ம் தேதி, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட, 26 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின. வேலை நிறுத்தத்தை தவிர்க்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்படி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து, இதுவரை மூன்று கட்ட பேச்சு நடந்துள்ளது. இருப்பினும், பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=64s8i6cm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்த தீர்வும் எடுக்கப்படாததால், இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் நாளை (ஜன.,9) திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொழிற்சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோரிக்கைகள் எல்லாம் இப்போதைக்கு ஏற்க முடியாது; பொங்கல் பண்டிகைக்கு பிறகு பேசி கொள்ளலாம் என அரசு தரப்பில் கூறியது. அரசின் இந்த நிலைபாட்டை ஏற்க முடியாது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை கூட பிறகு பேசலாம், தற்போதைக்கு நிலுவையில் உள்ள பஞ்சப்படியை அமல்படுத்துங்கள் என்று கேட்டோம். நிலுவையில் உள்ள தொகையை மட்டுமாவது வழங்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் அரசு ஏற்கவில்லை. எங்கள் தொகையை மறுத்துவிட்டு, போராட்டத்தை கைவிடுங்கள் என கூறுவதற்கு அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்

இதனால் நாளை திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடக்கும். இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும். 6 கோரிக்கைகளில் இருந்து ஒரு கோரிக்கை வரை வந்தோம்; அந்த ஒரு கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. இன்று மாலை வரை அரசுக்கு நேரம் இருக்கிறது. எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் வருகிறோம். ஆனால் இதில் முடிவு கிடைக்க வேண்டும்; இல்லையென்றால் தவிர்க்க முடியாத காரணத்தால் 100 சதவீத பஸ்களும் நாளை நிறுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அமைச்சர் சிவசங்கர்

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: தொ.மு.ச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே நாளை பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும். 2 கோரிக்கைகளை ஏற்பதாக ஏற்கனவே போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதனால் தான் மற்ற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகைக்கு பிறகு பேசலாம் என தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் குழப்பம்

பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அமைச்சர் சிவசங்கர் பஸ்கள் இயக்கப்படும் என்றும், திட்டமிட்டபடி பஸ்கள் இயக்கப்படாது என தொழிற்சங்கங்களும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளதால் பஸ் போக்குவரத்தை நம்பியுள்ள பொதுமக்கள் குழம்பி போயுள்ளனர்.

19 ஆயிரம் சிறப்பு பஸ்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: ஜன.12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையை ஒட்டி 19,484 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு மட்டுமின்றி கிளாம்பாக்கத்தில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். பொங்கல் விடுமுறைக்குப் பின் 17,589 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும். இதற்காக கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் தலா 5 முன்பதிவு மையங்கள், தாம்பரத்தில் ஒரு முன்பதிவு மையம் அமைக்கப்பட்டு, டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். இவ்வவாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

g.s,rajan
ஜன 08, 2024 22:27

நமது நாட்டில் அரசியல்வாதிகளின் சொத்துக்களை உடனடியாக நாட்டுடமை ஆக்கவேண்டும்.....


தாமரை மலர்கிறது
ஜன 08, 2024 22:04

தொழில்கள் முடங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது. தொழிலாளிகளை கட்டுப்படுத்தி போக்குவரத்தை செயல்படுத்தாவிடில் ஸ்டாலின் அரசு பதவி விலக வேண்டும்.


தமிழ்வேள்
ஜன 08, 2024 21:00

திமுக திருடிய 30000 கோடி யை திரும்ப கொடுத்தால் போ.க.க்களின் நிலுவைத் தொகை களை தருவதோடு இனி லாபத்தில் கட்டண உயர்வு இன்றி பேருந்துகளை இயக்கலாம்


M Ramachandran
ஜன 08, 2024 20:04

எனக்கென பார்த்தாலும் குடும்பத்தாத்தாவின் படம் ஒருவனுக்கு வேண்டுமானால் அதனால் நமைய்ய எல்லோருக்குமே? அது தான் வெறுப்பு கட்சிகாரங்களுக்கென முக்கியத்தலை களுக்கெ பிடிக்க வில்லை இந்த சுய தம்பட்டம்


Nagarajan D
ஜன 08, 2024 19:30

பொதுவாக தி மு க ஆட்சியில் சம்மந்தமில்லாத துறை அமைச்சர்தானே தனக்கு தொடர்பில்லாத துறை பற்றி பெனாத்துவான்... ஆனால் இதிலும் சந்தித்த தொழிற் சங்கமும் மந்திரியும் வேறு வேறு மாதிரி தானே பேசுறானுங்க... என்னமோடா இவனுங்ககிட்ட என்ன திறமை இருக்கு என்று இவனுங்கள மந்திரியா வச்சிருக்கானுங்களோ


T.sthivinayagam
ஜன 08, 2024 19:26

இந்து பண்டிக்கை காலத்தில் ஓட்டுனர் வேலை நிறுத்தம் திட்டமிட்ட செயலா என்று அரசு கண்கானிக்க வேண்டும்


M S RAGHUNATHAN
ஜன 08, 2024 18:09

ஓடும் ஆனா ஓடாது


Prabakaran j
ஜன 08, 2024 18:03

No unity in the transport department itself - how can expect from the govt. waste of time.


Prabakaran j
ஜன 08, 2024 18:03

No unity in the transport department itself - how can expect from the govt. waste of time.


Rajarajan
ஜன 08, 2024 17:41

ஓடும் ஆனா ஓடாது. ஒரு சில பேருந்துகள் மட்டும் ஓடும். பொதுமக்கள் இரண்டு நாளில் கொந்தளித்த பின்னர், அரசுக்கு வேறு வழியின்றி, பேருந்து கட்டணம் உயர்த்தப்படும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ